பேச்சு:தயாக்கு மக்கள்

@Thanighaivel: Borneo என்பது போர்னியோ என்றே எழுதப்பட வேண்டும். போர்நியோ அல்ல. இயல்பாக இல்லை.-- உங்களுக்கு, இயல்பு என்று தோன்றியது பிழையாக உள்ளது.. ரகர னகரம் மயங்காது..-- Kanags \உரையாடுக 22:17, 9 சூன் 2021 (UTC)Reply

எழுத்துப் பிழை

தொகு

போர்னியோ என்று எழுதுவது தவறு.. ரகர னகரம் மயங்காது.. போர்நியோ என்று எழுதலாம்.. Thanighaivel (பேச்சு) 00:43, 10 சூன் 2021 (UTC)Reply

போர்னியோ என்பதே சரி

தொகு

போர்னியோ என்றே எழுதப்பட வேண்டும். போர்நியோ அல்ல. உலகம் முழுவதும் போர்னியோ என்று ஒரு நூறு ஆண்டு காலமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இலக்கணம் தேவை இல்லை. உலக மக்களின் வழக்குச் சொல்தான் முக்கியம்.--மலாக்கா முத்துக்கிருஷ்ணன்\பேச்சு--ksmuthukrishnan 05:57, 11 சூன் 2021 (UTC)Reply

போர்னியோ, போர்நியோ, போர்ணியோ -- இவை யாவுமே இலக்கணப் பிழை. இலக்கணப்படி எழுத வேண்டுமாயின் போருனியோ என்றெழுத வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 07:28, 11 சூன் 2021 (UTC)Reply

வணக்கம்.. இலக்கணம் இல்லை என்றால், மொழி சிதையும்.. பெரு வழக்கில், மலேஷியா என்று பிழையாக இருந்தது.. அதைத் திருத்தி விட்டோம்.. மலேசியா இதைத் திருத்த, இலக்கணம் தான் தேவை.. ரகார நகாரம் மயங்கும், ஆனால், ரகர னகரம் மற்றும் ரகர ணகரம் மயங்காது.. போர்னியோ, போர்ணியோ என்று எழுதுவது தவறு.. போர்நியோ என்பதே சரியானது.. நன்றி.. Thanighaivel (பேச்சு) 08:33, 11 சூன் 2021 (UTC)Reply

இல்லை, நீங்கள் கூறுவதற்கு இலக்கணமில்லை. சும்மா கூறுவதை விடுத்து சான்றிருந்தாற் காட்டுங்கள்.--பாஹிம் (பேச்சு) 08:49, 11 சூன் 2021 (UTC)Reply

ய ர ழ என்னும் புள்ளி முன்னர் முதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும். (௨௯) தொல்காப்பியம், நூன் மரபு 29. அஃதாவது, கஙசஞதநபம யவ என்ற எழுத்துகள் யரழ புள்ளியைத் தொடர்ந்து வரும். ஆக, டணலளறன யரழ புள்ளியைத் தொடர்ந்து வராது.. போர்நியோ என்பது சரியே..

Thanighaivel (பேச்சு) 10:01, 11 சூன் 2021 (UTC)Reply

பேச்சு:போர்னியோ இங்கு உரையாடி தீர்வு கண்டதும் இங்கு மாற்றுவது சிறப்பு. --AntanO (பேச்சு) 12:56, 12 சூன் 2021 (UTC)Reply

மலேசியர்கள மலேசியா

தொகு

1963-ஆம் ஆன்டு மலேசியா உருவான போது மலேசியா என்றுதான் மலேசியத் தமிழர்கள் அழைத்தார்கள். மலேசியா என்றுதான் பயன்படுத்தினார்கள். ஊடகங்களும் பயன்படுத்தின. மலேஷியா என்று நாங்கள் பயன்படுத்தியதே கிடையாது. தமிழ் நாட்டு ஊடகங்கள் தான் மலேஷியா எனும் சொல்லைப் பயன்படுத்தி வந்தன.

நீங்கள் ஒன்றும் மாற்ற வில்லை ஐயா. அப்படியே மலேஷியா எனும் சொல்லை நீங்கள் மாற்றியது உண்மை என்றால் சான்றுகளை முன் வையுங்கள்.

மலேசியா உருவான காலத்தில் இருந்து மலேசியா எனும் சொல்லை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். புதுக் கதை எல்லாம் வேண்டாம் ஐயா.--மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 04:36, 13 சூன் 2021 (UTC) Reply

மலேசியா‌ என்று நான் திருத்தியாதாகச் சொல்லைவில்லை.. திருத்தி விட்டோம் (நானும் மலேசியன்) என்று தான் கூறினேன்.. பல மலேசிய ஊடங்களில் மலேஷியா என்று எழுத்தப் பட்டது உண்மையே..

நீங்களும் சான்று ஏதும்‌ இல்லாமல் தான் வாதிடுகிறீர்.. உங்களிடம் சான்றுகள் இருந்தால் ‌முன் வையுங்கள்..

இடப் பெயர்களை மொழிமாற்றம் செய்யும் போது, அந்த மொழிக்கு ஏற்றார் போல் மாற்றுவது சிறப்பு.--Thanighaivel (பேச்சு) 08:30, 13 சூன் 2021 (UTC)Reply

இதில் வாதிடுவதற்கு எதுவுமில்லை. இலங்கை, இந்திய ஊடகங்களில் மலேஷியா என்று படிக்கும் போது, எனக்கு ஒருவித எரிச்சல்தான் வரும். மலேசியத் தமிழர் மலேசியா என்றே எழுதுவது அறிந்து மகிழ்ச்சி. இங்குள்ள ஊடகங்களுக்கு இதனை எடுத்துச் செல்ல வேண்டும். இதுபோன்றே மலேசியாவில் ஏனைய சொற்களும் ஓரளவு தமிழ் முறைப்படி எழுதப் பரப்புரை செய்யப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 10:58, 13 சூன் 2021 (UTC)Reply

இதுவரை செய்யாத‌ பரப்புரையா? இங்கு, பல அறிஞர்களே புரிந்தும் புரியாதது போல் இருப்பது‌தான் விந்தையிலும் விந்தை.. பேச்சு மொழி (கொடுந்தமிழ்), எழுத்து மொழி (செந்தமிழ்), இந்த 'ரெண்டுக்கும்' வித்தியாசம் இல்லாத மாதிரி எழுதுறாங்க.. 'பேச்சுத் தமிழ் எப்படி வேணும்னாலும் இருக்கலாம்'.. ஆனால், எழுத்துத் தமிழில் இலக்கணப் பிறழ்ச்சி இல்லாமல் இருப்பதே சிறப்பு.. நன்றி வணக்கம்..

தணிகைவேல் மாரியாயி (பேச்சு) 21:45, 13 சூன் 2021 (UTC)Reply

கனகு, இக்காலத்தில் இலங்கை ஊடகங்கள் என்று கருதப்படும் (IBC தமிழ், தமிழ்வின் போன்ற) பலவற்றிலும் இலங்கையில் முறையாகத் தமிழ் கற்றோராலோ அல்லது இலங்கையர்களாலோ எழுதப்படுவது குறைவு. எடுத்துக் காட்டாக, இலங்கையில் பெற்றோலியம், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்றே பயன்படுத்தப்படுவது வழமை. இப்போது தமிழ்நாட்டுப் பிழையைப் பின்பற்றிப் பெட்ரோலியம் என்று எழுதித் தமிழைக் கொலை செய்வதைப் பார்க்கலாம். இதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.--பாஹிம் (பேச்சு) 05:57, 14 சூன் 2021 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தயாக்கு_மக்கள்&oldid=3169919" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தயாக்கு மக்கள்" page.