பேச்சு:தாவரப் பல்வகைமை
பல்வகைமை என்ற சொல் Diversity ஐ அல்லவாகுறிக்கின்றது ? பார்க்க: உயிரியற் பல்வகைமை.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:14, 16 பெப்ரவரி 2017 (UTC)
இது பொது சொல்லே. உரிச்சொல் வேறல்லவா? en:Diversity பல. உரிய விக்கித்தரவினை இணைத்துள்ளேன். அடைப்புக்குறியிட்டு எழுதுவது பல நிரலாக்க இடர்களைத் தருகின்றன. குறிப்பாக இலத்தீனியம் அல்லாத மொழிகளுக்கு, அதை ஏன் இங்கு நடைமுறை படுத்தினர் என்று புரியவில்லை. தாவர உலகம் தனி. பொதுவான இது அனைத்து இடங்களிலும் பொருத்தமாக அமைவதில்லை. நமது Taxobox முறையையும், தாவரவியலுக்கு ஏற்ப மாற்ற வேண்டும். அதற்கு lua மொழி தெரிந்து இருக்க வேண்டும். உரிய நண்பரைத் தேடி வருகிறேன். --த♥உழவன் (உரை) 07:25, 16 பெப்ரவரி 2017 (UTC)
நல்லது த. உழவன். ஆயினும் தாவரப் பல்வகைமை என்ற சொல்லை பல இடங்களில் Plant Diversity என்பதற்கு இணையாகப் பயன் படுத்தி வருகின்றோம். பார்க்க: இது இலங்கையில் பயன்படுத்தப்படும் அரச பாடநூல்: தாவரப் பல்வகைமை
- பல்வகைமை (தாவரவியல்) எனத் தலைப்பிடுவதால், இலங்கை மாணவர்களும் பயனடைவார்கள்.--Kanags \உரையாடுக 08:02, 16 பெப்ரவரி 2017 (UTC)
- கட்டுரையில் அமைப்பது நலம். தலைப்புகளில் அடைப்புக்குறியிட்டு எழுதுதல் நிரலாக்க இடர்களை உருவாக்கும். தமிழில், ஆங்கில எழுத்துநடை வேண்டாமென்று வேண்டுகிறேன். --த♥உழவன் (உரை) 02:56, 18 பெப்ரவரி 2017 (UTC)
- பல்வகைமை என்பதன் அர்த்தமும் diversity என்பதன் அர்த்தத்தையே தருகிறது, புரிந்துகொள்ள இலகுவாகவும் உள்ளது. Cultivar என்பதற்கு வேறு தலைப்பிடலே பொருத்தமாக இருக்கும். வேறு ஒரு இடத்திலும் cultivar குறித்து உரையாடியுள்ளோம். தற்போது எடுக்க முடியவில்லை. எப்படியிருப்பினும் பல்வகைமை என்னும்போதே diversity எனும் அர்த்தம்தான் வருகிறது. உண்மையில் diversity க்கான சரியான தமிழ்ச் சொல்லைத் தேடியபோதே இந்தப்பக்கத்திற்கு வந்தேன். தயவுசெய்து தலைப்பை மாற்றுங்கள் த.உழவன் --கலை (பேச்சு) 10:40, 13 மே 2017 (UTC)
- பேச்சு:பயிரிடும்வகை என்ற உரையாடற் பக்கத்தினைக் கூறுகிறீர்கள். சரிதானே? அங்கு எனது எண்ணத்தை பதிந்துள்ளேன். ஆனால், இங்கு இதற்கு பொருத்தமான பெயரை நீங்களே மாற்றுங்கள். தயவுசெய்து என்றெல்லாம், இனி கூற வேண்டாம். உரையாடற் பக்கத்தில் என் துறைசார் அனுபவத்தைப் பகிர்கிறேன். பிறரும் பகிர விரும்புகிறேன். இனம் (உயிரியல்)
என்பதன் இரு மாறுபட்ட வடிவங்கள் தானே வகைப்பயிர்(Cultivar), என்பதும், variety என்பதும் என்றே எண்ணுகிறேன். இங்கு தாவரவியல் அடிப்படையில் விளக்கங்களுடன் இரு கட்டுரைகளையும் விரிவாக்கக் கோருகிறேன். --த♥உழவன் (உரை) 12:59, 13 மே 2017 (UTC)