பேச்சு:திருச்சபையின் மறைவல்லுநர்

கிறித்தவ இறையியல் சொல்லாக்கம் தொகு

ஜெயரத்தின மாதரசன், "மறைவல்லுநர்" பற்றி இடுகை செய்கிறீர்கள். அங்கே, ஆங்கிலத்தில் "Patriarch" என்னும் சொல் ஒரு உயர் மறைமாவட்டத்தின் ஆயரைக் குறிக்கும்போது தமிழில் "மறைமுதுவர்" என்பது வழக்கம். "மூப்பர்" என்பது பொதுவாக "Elder" என்பதின் தமிழாக்கமாக வரும். "Mystic" என்னும் சொல்லுக்கு "அனுபூதி" என்னும் சொல்லைச் சிலர் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் பொதுவாக "இறைக்காட்சியாளர்" என்பது வழக்கம்.--பவுல்-Paul 00:15, 31 ஆகத்து 2011 (UTC)Reply

ஐயா, தங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி. அப்படியே செய்கின்றேன். மேலும் nuns மற்றும் consecrated virgin எவ்வாறு தமிழில் எழுதுவது, மற்றும் இவற்றுக்கு உள்ள வேறு பாடு என்ன?

(பி.கு: Among Doctors of the Catholic Church, 3 women; 18 bishops, 30 priests, 1 deacon, 2 nuns, 1 consecrated virgin என வரும் போது எவ்வாறு மொழிபெயர்ப்பது?) --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:36, 31 ஆகத்து 2011 (UTC)Reply

  • நீங்கள் தருகின்ற மறைவல்லுநர்களின் எண்ணிக்கையில் தவறு உள்ளது. இதுவரை 34 பேர்தான் கத்தோலிக்க திருச்சபையால் மறைவல்லுநர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். எண்ணிக்கை குறித்த சர்ச்சையைப் பின்னர் ஆய்வுக்குப் பின் தீர்த்துக்கொள்ளலாம். தற்போது நீங்கள் இவ்வாறு எழுதலாம்:

கத்தோலிக்க திருச்சபை 34 புனிதர்களை மறைவல்லுநர்களாக அறிவித்துள்ளது. அவர்களுள் 3 பெண்கள் அடங்குவர். அம்மூவருள் அவிலாவின் புனித தெரேசா, லிசியே நகரின் புனித தெரேசா ஆகிய இருவரும் கார்மேல் சபைத் துறவியர் ஆவர். புனித சியன்னா நகர கத்ரீன் அர்ப்பணிக்கப்பட்ட கன்னி ஆவார்.

  • முந்திய பதிகையில் கையொப்பமிட மறந்துவிட்டேன். பிரஞ்சு விக்கியின் அடிப்படையில் மறைவல்லுநர்களின் எண்ணிக்கையைத் தெளிவுபடுத்தலாம் என்று எண்ணுகிறேன். அங்கே 33 என்றிருக்கும். உலக இளையோர் நாளன்று மத்ரீதில் திருத்தந்தை பெனடிக்ட் அறிவித்த அவிலாவின் புனித யோவான் பெயர் அங்கே பதிவாகவில்லை. காண்க: மறைவல்லுநர்கள்.

நீங்கள் காட்டுகின்ற ஆங்கில விக்கி கட்டுரையில் "குருக்கள்" என்பது திருத்தந்தையர், கர்தினால்மார், மறைமுதுவர் ஆகிய அனைவரையும் குறிப்பதாய் உள்ளது. அவர்கள் எல்லாருமே குருக்கள்தாம், ஆனால் அதற்கு மேற்பட்ட பதவியிலும் உள்ளவர்கள். எனவே, எண்ணிக்கை குழம்புகிறது.--பவுல்-Paul 14:50, 31 ஆகத்து 2011 (UTC)Reply

தங்களின் வழிகாட்டலுக்கு நன்றி. நீங்கள் கூறியபடியே இட்டுள்ளேன். மேலும் நான் எண்ணிக்கையை கவனிக்க வில்லை. நீங்கள் கூறுவது சரியே சரியான எண்ணிக்கை இவ்வாறாக அமையவேண்டும் என நினைக்கின்றேன்:
  • 1 திருதொண்டர்
  • 10 குருக்கள்
  • 12 ஆயர்கள்
  • 4 பேராயர்கள் (இவர்களில் ஒருவர் கர்தினால் ஆயர்)
  • 2 மறைமுதுவர்
  • 2 திருத்தந்தையர்கள்
  • 3 கன்னியர்கள்
ஆக மொத்தம் 34.
இதிலும் அவிலா நகரின் புனித யோவானுக்கு இன்னும் மறைவல்லுநர் பட்டம் அளிக்கப்படவில்லை. சில ஊடகங்களில் தவறாக செய்தி வெளியாகியிருக்கின்றது.[1] வத்திக்கானின் எல்லா அதிகாரப்பூர்வ செய்தி ஊடகங்களிலும் இச்செய்தி எதிர்காலத்திலேயே குறிக்கப்பட்டிருப்பதைக் காண்க. [2], அதனாலேயே அப்புனிதரின் "மறைவல்லுநராக உயர்த்தப்பட்டது" என்னும் பெட்டியை காலியாக விட்டுள்ளேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 16:41, 31 ஆகத்து 2011 (UTC)Reply
Return to "திருச்சபையின் மறைவல்லுநர்" page.