பேச்சு:திருப்பதி

திருப்பதி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருப்பதி என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருப்பதி என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கருத்து

தொகு

kanags: நீங்கள், "உலகில் மக்கள் அதிகமாக வந்து செல்லும் சமய மையமாகவும் கருதப்படுகின்றது" என்ற மாற்றத்தை "வாட்டிகனுக்கு அடுத்தபடியாக மிக அதிகமாக மக்கள் வந்து செல்லும் சமய மையமாகவும் கருதப்படுகின்றது" என்று மாற்றியுள்ளீர்கள். இது வழங்கப்பட்டுள்ள சுட்டி/விபரங்களுக்கு நேரெதிராக உள்ளது. உங்களுக்கு அது குறித்த மாற்றுக்கருத்துக்கள்/விபரங்கள் உண்டாயின் இந்த உரையாடல் பக்கத்தில் தெரிவித்தவும். - ஸ்ரீராம் முரளி

மன்னிக்க வேண்டும். அந்தச் சுட்டியைக் கவனிக்காமல் மாற்றியது எனது தவறு தான். தவறைத் திருத்தியமைக்கு நன்றிகள் ஸ்ரீராம்.--Kanags \பேச்சு 08:52, 9 ஜூலை 2008 (UTC)


"திருப்பதி என்ற சொல் திரு+பதி என்று பிரிக்கப்படுகிறது. இதன் பொருள் லக்ஷ்மியின் (திரு) கணவன் (பதி) என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது."- இது தவறு என எண்ணுகிறேன் தமிழில் திரு என்பதற்கு லட்சுமி என்ற பொருள் இல்லை. திரு என்பதை சிறீ என்று சமசுகிருதத்தில் மாற்றி சிறீ என்பதற்கு லட்சுமி என்று பொருள்கொண்டு இவ்வாறு கூறியுள்ளார்கள் என்பது என் கருத்து. திருபடி என்பது காலப்போக்கில் திருப்பதி என மாறியிருக்கவேண்டும். --குறும்பன் 04:01, 1 சனவரி 2011 (UTC)Reply

மேற்கண்ட காரணமும் சரியில்லை என்றே நினைக்கிறேன்.முன்பாதி தமிழ்ச் சொல்லும் பின்பாதி வடமொழிச் சொல்லும் சேர்ந்ததா திருப்பதி? ஏற்புடையதல்ல! இது ஒரு முழு தமிழ்ச் சொல். தமிழில் திரு என்றால் புனிதமான/தெய்வத்தன்மை வாய்ந்த மற்றும் பல பல பொருட்களுண்டு. பதி என்றால் நகரம் என்றே பொருள். நாம் தில்லையம்பதி, கயிலாயம்பதி என்று அந்த இடங்களைக் குறிப்பிடுவதில்லையா? பல ஆண்டுகளுக்கு முன் தென்னாட்டு திருப்பதிகள் என்ற பெயரில் நம் நாட்டு கோயில் நகரங்களைப் பற்றி ஒரு புத்தகம் வெளியானது. ஆகவே திருப்பதி என்றால் புனிதமான நகரம் என்று பொருள்படும். மேலும் ஆதிசேஷனின் தலைகளுக்கும் ஏழுமலையிலுள்ள மலைகளின் பெயர்களுக்கும் எந்த தொடர்புமில்லை. அவைகளெல்லாம் தேவதைகளின் பெயர்களையொட்டி அமைந்திருக்கின்றன. சேஷாசலம் என்பது எல்லா மலைகளுக்கும் சேர்த்து இடப்பட்ட ஒரு பொதுப் பெயர். தகுந்தவாறு இந்த பத்திகளை திருத்த அனுமதி கோருகின்றேன்.--Jambolik 01:29, 7 திசம்பர் 2011 (UTC)Reply

மேற்கண்ட இடுக்கையின் தொடர்பில் என்ன முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது? முன்னரே இருக்கும் காரணத்தோடு மற்றுமொரு காரணமாக கட்டுரையில் சேர்த்துக்கொள்ளலாமா? ஆதிசேஷனின் தலைகளின் பெயர்கள்தான் மலைகளின் பெயர்கள் என்பதைப்பற்றிய புதிய தகவல்கள் ஏதேனும்?--Jambolik 00:39, 11 திசம்பர் 2011 (UTC)Reply


நடுநிலை தவறியதாலோ, இல்லை தடுக்கப்பட்ட கட்டுரை என்பதாலோ, கட்டுரை தெரியவில்லை. அதற்கான காரணத்தினை கட்டுரைப்பகுதியில் தெரியுமாறு அமைக்க வேண்டுகிறேன்.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

தகவல் பெட்டியில் ஏதோ வழு (நடுநிலைப் பிரச்சனையல்ல) என்பதால் அப்படி காட்சி அளித்தது. இப்போதைக்கு பெட்டியினை எடுத்துவிட்டேன். சரியாகியுள்ளது.--சோடாபாட்டில்உரையாடுக 16:08, 3 பெப்ரவரி 2011 (UTC)

நன்றி நண்பரே!,. இக்கட்டுரையில் சில பகுதிகள் http://holyindia.org/temples/திருப்பதி என்ற பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. யாரேனும் அப்பகுதிகளை மாற்றம் செய்ய முன்வந்தால் நானும் சில தகவல்களை இணைக்க காத்திருக்கிறேன். நன்றி!.


- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

இக்கட்டுரை திருப்பதி நகரைப்பற்றியதாக இருக்க வேண்டும், திருப்பதி நகரம் ஆந்திராவில் 5வது பெரிய நகரம். திருப்பதி என்றாலே நமக்கு கோயில் தான் நினைவுக்கு வருகிறது என்பதால் கோயிலைப்பற்றி சிறிய விளக்கம் மட்டும் இங்கு இருக்கலாம். கோயிலை பற்றியது வேறொரு தலைப்பில் (திருப்பதி திருமலை? ) இருக்க வேண்டும். --குறும்பன் 18:01, 3 பெப்ரவரி 2011 (UTC)

மிகச் சரியான கருத்து. --Jambolik 01:29, 7 திசம்பர் 2011 (UTC)Reply

திருப்பதி (நகரம்) எனவும் திருமலை வெங்கடேசுவரர் கோயில் எனவும் இரு கட்டுரைகள் வேண்டும்.--Kanags \உரையாடுக 02:20, 7 திசம்பர் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருப்பதி&oldid=3786096" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "திருப்பதி" page.