பேச்சு:தி ஃபாக்ஃசு அண்ட் தி ஃகௌண்ட்

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic Untitled
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் தி ஃபாக்ஃசு அண்ட் தி ஃகௌண்ட் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled தொகு

இத்தலைப்பு வேடிக்கையாக இல்லையா? The Fox and the Hound என்னும் படம் தமிழ்த் தலைப்போடு வெளிவரவில்லை என்றால் ஆங்கிலத் தலைப்பை அப்படியே ஒலிபெயர்த்து எழுதுவது நல்லது என நினைக்கிறேன். தி பாக்ஸ் அண்ட் தி ஹௌண்ட் என்றால் எப்படி? --பவுல்-Paul 02:23, 30 அக்டோபர் 2010 (UTC)Reply

ஆம், பவுலுடன் உடன்படுகிறேன். மொழிபெயர்ப்பை நரியும் நாயும் என்று திருத்தினாலும் கூட வணிக முயற்சிகளை ஒலிபெயர்த்தி தலைப்பிடுவதே சரியாகும்.மேலும் animation movie என்பதை அசைத் திரைப்படம் எனலாமோ ? அசைப்படம் என்பது animated picturesக்குப் (.gif files)பொருத்தமாக இருக்கும்.--மணியன் 02:55, 30 அக்டோபர் 2010 (UTC)Reply

நரியும் நாயும் என்னும் தலைப்பு நன்றாக உள்ளது. பவுல்கூறியது போலவே ஆனால் சற்று மாற்றி தி ஃபாக்ஃசு அண்டு தி ஃகௌண்டு எனலாம் அல்லது தி ஃபாக்ஃசு அண்ட் தி ஃகௌண்ட் எனலாம். --செல்வா 04:33, 30 அக்டோபர் 2010 (UTC)Reply
ஆமோதிக்கிறேன். ஒன்று முழுவதுமாக எழுத்துப்பெயர்க்கலாம் அல்லது முழுவதுமாக மொழிபெயர்க்கலாம். எழுத்துப்பெயர்ப்பதே உகந்தது என்பது என் கருத்து. அசைத் திரைப்படம் என்பதை குறுக்கியே அசைப்படம் என்று மாற்றினேன் (ஐபி முன் உருவாக்கிய கட்டுரையில் “இயங்கும் திரைப்படம்” என்று போட்ட்டிருந்தார். மாற்றியது நானே. அதை இங்கு பின்பற்றியுள்ளார்). அசைப்படம் என்பது picture ஓடு குழப்பும் என்று தோணவில்லை. அசைத் திரைப்படம் என்பது சரியாக இருக்கும்.--சோடாபாட்டில் 04:52, 30 அக்டோபர் 2010 (UTC)Reply
திரைபடம் என்பது அசையும் பேசும் படமே. ஆங்கிலத்திலும் movie என்பது அசைவதைத்தான் குறிக்கின்றது. எனவே அசைபடத் திரைபப்படம் எனலாம் (படம் என்பது இருமுறை வருவதைப் பொருட்படுத்தவேண்டாம்). அல்லது திரையசைபடம் எனலாம். நாம் என்ன சொன்னாலும் முதலில் மக்கள் அது அனிமேசன் படங்க என்பார்கள் :) ஆனால் முறைப்படி குறிக்கும் பொழுது எப்படிக் குறிக்க வேண்டும் என்று பின்னர் புரிந்து கொள்வர். தொலைக்காட்சிக்குச் சின்னத்திரை என்று அழைப்பதைப் போல பின்னர் பொம்மைப் படம் என்று ஏதாவது ஒன்று தோன்றி நிலைக்கும் (மாற்றுப்பெயராக). அலைபேசி, கைபேசி, நகர்பேசி, செல்பேசி (செல்லிடப் பேசி) எனப் பலபெயர்கள் இயல்பாய் இன்றுள்ளது போல் வந்துவிடும்.--செல்வா 05:13, 30 அக்டோபர் 2010 (UTC)Reply
Return to "தி ஃபாக்ஃசு அண்ட் தி ஃகௌண்ட்" page.