பேச்சு:தும்பை

இது தவறான லிங்க்.http://en.wikipedia.org/wiki/Leucas_aspera தும்பை பூ ஆகும்.116.202.139.6 23:06, 7 திசம்பர் 2012 (UTC)Tprmenon.Reply

Leucas aspera என்பது முடிதும்பை என்ற கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளதே.--Kanags \உரையாடுக 00:49, 8 திசம்பர் 2012 (UTC)Reply

இதன் பெயர் பழுபாகல். பார்க்க. ஆனால் இது சில சமயம் தும்பை எனவும் அழைக்கப்படுகிறது. 2பார்க்க. இதன் பிரச்சனைக்கு எனக்கு தெரிந்த இரு வழிகள். 1. disambiguation பக்கம் தொடங்கி இரண்டு செடிகளுக்குமான வேறுபாடுகளைக்கூறலாம். அல்லது 2. தும்பை என்று பலராலும் அறியப்பட்டது முடிதும்பைதான். அதனால் தும்பையை முடிதும்பைக்கு வழிமாற்றி இதனை பழுபாகல் என பெயர் மாற்றம் செய்யலாம்.பாலாஜி (பேச்சு) 15:37, 14 பெப்ரவரி 2013 (UTC)

நீங்கள் சொல்வது தவறு, பாலாஜி. சரியாகத் தெரிந்துதான் தும்பை என்று இக்கட்டுரைக்குத் தலைப்பிட்டேன்.--பாஹிம் (பேச்சு) 15:18, 20 பெப்ரவரி 2015 (UTC)

ஆம். இலங்கை வழக்கில் தும்பை என்பது இதைத்தான் குறிக்கின்றது. முடிதும்பை தனியாகக் கொள்ளப்படுகின்றது. disambiguation பக்கம் சரியான வழி. அதிலும் இலங்கை, தமிழக பொது வழக்குமுறைகள் குறிப்பிடப்படுவது பயன்தரும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:22, 20 பெப்ரவரி 2015 (UTC)

இந்த பக்கத்தின் பெயரை பழுப்பக்காய் அல்லது பழுவக்காய் என பெயர் மாற்றவேண்டுகிறேன். இது தமிழகத்தில் இப்பெயராலேயே அழைக்கப்படுகிறது. சான்றுக்கு [1] சங்க்காலத்தில் தும்பை என அழைக்கப்பட்ட மலர் வெண்ணிற மலர்களைக் கொண்ட ஒரு பூ ஆகும் இது தற்போதும் தமிழகத்தில் தும்பை என்றே அழைக்கப்படுகிறது. இதற்கான கட்டுரை முடிதும்பை என்ற பெயரில் கட்டுரையாக்கி யுள்ளனர் எனவே அந்தக் கட்டுரையின் பெயரை தும்பை என பெயர் மாற்றலாம்.arulghsrArulghsr (பேச்சு) 12:54, 27 சனவரி 2016 (UTC)Reply

இதன் பெயரை மாற்றுவதை எதிர்க்கிறேன். நாம் இதுவே தும்பையென்றுதான் நாம் அறிந்ததும் கற்றதும். அடுத்தது, சிக்கலான வேளைகளில் தமிழக வழக்கு, இலங்கை வழக்கு என்று வரும் போது முதலில் எழுதியவரின் வழக்குக்கு இடம் கொடுப்பதென்பதே விக்கிப்பீடியாவின் முடிவு. அந்த வகையிலும் தும்பை எனப் பெயரிட்டதை மாற்றுவதை நான் எதிர்க்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 13:30, 27 சனவரி 2016 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தும்பை&oldid=2013124" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தும்பை" page.