பேச்சு:தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
தொல். திருமாவளவன் என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
இது போன்ற உயர்வு நவிற்சிக் கட்டுரைகளை பேச்சுப் பக்கத்தில் என்றாலும் கூட இட்டு வைக்க வேண்டுமா என்பது சிந்தனைக்குரியது. --ரவி 03:26, 6 ஜூன் 2007 (UTC)
ரவி, உங்கள் கூற்று நியாமானதே. ஆரம்பத்தில் தலைப்பை ஏற்றி எழுதல் ஏற்றுக் கொள்ள கூடியதாக இருந்தாலும், த.வி பரினாம, தொலைநோக்கிய பார்வையில் உங்கள் கேள்வி முக்கியம். உயர்வு நவிற்சிக் கட்டுரைகள், அல்லது ஏற்றி எழுதுதல் தொடர்பாக சற்று கூடிய விளக்கம் தந்து ஆலமரத்தடியில் ஒரு கருத்து அலசலுக்கு முன் வையுங்களேன். நன்றி. --Natkeeran 03:32, 6 ஜூன் 2007 (UTC)
இப்போது அவர் இட்ட கட்டுரையின் தகவல்களை இழக்க விரும்பாமலே இங்கு இட்டுள்ளேன். --Natkeeran 03:34, 6 ஜூன் 2007 (UTC)
இந்துத்துவ கொள்கையினை எதிர்தல் போன்றன அவரது முக்கிய கொள்கையாகும்.
இதை விட சிறந்த காமெடி உலக்த்தில் இருக்கவே இயலாது தோழர்களே. எந்த இடத்தில் அவர் இந்துத்துவ கொள்கையை எதிர்த்திருக்கிறார். ஓட்டுக்காக பெரியாருக்கு மாலைப் போட்டவனெல்லாம் சாரி போட்டவரெல்லாம் இந்துத்துவ கொள்கையை எதிர்த்தவன் மன்னிக்கவும் எதிர்த்தவர் இல்லை.
- நல்லவன்.
ஈழ விடுதலை ஆதரவு
சத்தியமா சொல்லறேன், இது நடுநிலை கட்டுரையே இல்லை, ராஜ பட்சே கூட கைகுழுக்கி வந்த கனிமொழியுடன் இலங்கை சென்றதும், அந்த மகான் கொடுத்த பரிசெல்லாம் வாங்கி வந்ததையும் மக்களுக்கு மறைக்கும் முயற்சி.
- அதே நல்லவன்.
- நல்லவர், விக்கிப்பீடியாவில் எந்த ஒரு கட்டுரையையும் நன்பகத்தன்மைக்கு உட்படுத்த முடியும். உங்களுக்கு விளக்கம் தேவைப்படும் இடத்தில் {{ஆதாரம் தேவை}} என்று கொடுத்துவிடுங்கள். (காட்டாக, இராசபக்சவை நீங்கள் மகான் என்று சொன்னதை நான் இப்படி குறிப்பது போன்று, 'அந்த மகான் [சான்று தேவை] கொடுத்த பரிசெல்லாம் வாங்கி...') -- மாகிர் (பேச்சு) 08:45, 26 மார்ச் 2012 (UTC)