பேச்சு:நகிப் மஹ்ஃபூஸ்

நகிப் மஹ்ஃபூஸ் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
நகிப் மஹ்ஃபூஸ் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

நகிப் மஹ்ஃபூஸ் (அரபி: نجيب محفوظ‎, Nagīb Maḥfūẓ) என்னும் ஒலி-எழுத்துப் பெயர்ப்பில், ஆய்த எழுத்தை F என்னும் ஒலிக்கு பயன்படுத்துவதால் குழப்பம் எழுந்து கிரந்த ஹ் ஐப் பயன்படுத்தவேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. நகீப் மகுபூசு அல்லது நகீபு மகுவூசு என்றோ எழுதலாம். இங்கு இப்பொழுதுள்ள தலைப்பை மாற்றவேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை. நான் இங்கு குறிப்பிட்டுள்ள மாற்றுவழிகளில் எழுத்து-ஒலிபெயர்ப்பு இருந்தாலே போதும் என்னும் என் பொதுவான கருத்தைப் பதிவு செய்கிறேன். மேலும் அது நகீ'ப் ஆ அல்லது நஜீ'ப் ஆ என்பது விளங்கவில்லை. அடுத்து, கீ என்றோ ஜீ என்றோ நெடிலாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். நஜீபு என்று இருக்கவேண்டும் எனில், நஞ்சீபு என்று திரித்தும் எழுதலாம். அராபியர் பழனி என்பதை balani என்பது போலவோ வேறு விதமாகவோ திரித்துத்தானே எழுதுவர். அவர்கள் மொழியில் வல்லின பகரம் கிடையாது (வல்லின சகரமும் கிடையாது என்று நினைக்கிறேன்). அவர்களால் First சொல்லில் வரும் செறிவாக வரும் மெய்யொலிக் கூட்டத்தை ஒலிக்க இயல்பாய் முடியாது. எஅன்வே 'வர˘ச்ட் என்று ர் மீது அகரம் ஏற்றித்தான் ஒலிக்க முடியும். அதுபோல சிறு திரிபு இருந்தாலும், நஞ்சீபு என்று இருக்கலாம் என்னும் கருத்தை வைக்கின்றேன். மாற்றம் எதுவும் வேண்டவில்லை.--செல்வா 14:14, 2 டிசம்பர் 2008 (UTC)

ஐக்கிய அரபு அமீரகத்தில் பயன்படும் அரபியில் வாசிக்க வேண்டுமானால் "நஜீப்" என்றுதான் உள்ளது (நகீப் என்று அல்ல). ஆனால் எகிப்தியர்கள் மத்தியில் "J" ஒலிப்புக் கிடையாது. ஐ அ அ வில் "அஜ்மான்" என்பதை அவர்கள் "அக்மான்" என்பர் எனவே "நகீப்" என்பது சரியாக இருக்கக்கூடும். அரபியில் P, வல்லின "ச" மட்டுமன்றி "ஆ" தவிர்ந்த உயிரொலிகளுக்கு எழுத்துக்களும் இல்லை. மயூரநாதன் 15:09, 2 டிசம்பர் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நகிப்_மஹ்ஃபூஸ்&oldid=4062082" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நகிப் மஹ்ஃபூஸ்" page.