பேச்சு:நக்கீரர், சங்கப்புலவர்
நக்கீரர் சங்ககாலப் புலவர். நக்கீரன் கற்பனைக் கதையில் வரும் பாத்திரம். இரண்டையும் ஒன்றாக்கினால் எவ்வாறு கட்டுரை எழுத இயலும்? சங்ககாலப் புலவரின் பெயர் 'மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்' என்றும் குறிப்பிடப்படுகிறது. கிழான் என்றால் அரசன் அல்லது அரசப் புலவர். கிழார் என்றால் புலவர். இப்படித்தான் நக்கீரர் நக்கீரன் என்னும் சொற்களும் என்க.
பிரித்துத் தாருங்கள். --Sengai Podhuvan 21:32, 7 சனவரி 2011 (UTC)
- செங்கை பொதுவன் ஐயா, தலைப்பை எவ்வாறு வைக்க இருக்கிறீர்கள் என்று தெரிவித்தால் பிரிக்கலாம். நக்கீரர் என்ற தலைப்பே சங்கப்புலவருக்குப் போதுமானதா? நீங்கள் குறிப்பிடும் நக்கீரன் என்பது திருவிளையாடல் புராணத்தில் வரும் பாத்திரமா? இருவரும் வேறு வேறா? இப்போதைக்கு நக்கீரர் எனத் தலைப்பை மாற்றியிருக்கிறேன். கற்பனைப் பாத்திரம் பற்றிய குறிப்புகளை நக்கீரன் தலைப்பில் எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 22:10, 7 சனவரி 2011 (UTC)
பெருந்தகையீர் தாங்கள் செய்திருக்கும் மாற்றம் போதுமானது. தொடர்கிறேன். அன்புள்ள --Sengai Podhuvan 19:33, 8 சனவரி 2011 (UTC)
- நக்கீர தேவ நாயனார் என்ற கட்டுரையையும் கவனியுங்கள். இதில் குறிப்பிடப்படுபவர் யார்?--Kanags \உரையாடுக 12:59, 9 சனவரி 2011 (UTC)
- ஆம். எனக்கும் அதே ஐயமே! இரு கட்டுரைகளும் இணைக்கப்படவேண்டியவை (merge) என்றெண்ணுகிறேன். பொதுவனின் கருத்துகள் தேவை!
--சூர்ய பிரகாசு.ச.அ. 13:10, 9 சனவரி 2011 (UTC)
பெருந்தகை சூர்ய பிரகாசு தக்க வழியில் ஆற்றுப்படுத்தியுள்ளார். நன்றி. சில குறிப்புகளுடன் இரண்டு கட்டுரைகளையும் இணைத்துள்ளேன். போதும் என எண்ணுகிறேன். அன்புள்ள --Sengai Podhuvan 01:34, 12 சனவரி 2011 (UTC)
கட்டுரை மேலும் நீளும். பைடஸ் அதிகமாவதால் கணினி மெதுவாகிறது. பிரித்துத் தந்து உதவுங்கள். --Sengai Podhuvan 21:45, 12 சனவரி 2011 (UTC)
இணைப்பு வேண்டாம்
தொகு- நல்லீர்
- பகுதியை நீக்கலாம்
- நக்கீரர், நக்கீர தேவ நாயனார் இருவரும் வெவ்வேறு காலத்தவர். இணைப்பது வேண்டாத குழப்பத்தை விளைவிக்கும்.
- பலர்
- சங்ககால மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
- நெடுநல்வாடை பாடிய நக்கீரர்
- முருகனைப் பாடிய திருமுருகாற்றுப்படை நக்கீரர்
- சிவனைப் பாடிய நக்கீர தேவ நாயனார்
- ஆகியோரைப் பற்றித் தனித்தனியே கட்டுரைகள் அமைதல் வேண்டும்.
- இணைப்பு எண்ணத்தைக் கைவிடுவதோடு, இணைக்கலாமா என்னும் விக்கிக் குறிப்பையும் நீக்குதல் வேண்டும்.
- அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 22:13, 13 ஏப்ரல் 2012 (UTC)
நன்றி
தொகுஇணைப்பு, தொடுத்த செயரத்தினாவுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 05:36, 25 ஏப்ரல் 2013 (UTC)
- --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:17, 25 ஏப்ரல் 2013 (UTC)
- தொண்டு சிறக்கட்டும். --Sengai Podhuvan (பேச்சு) 19:39, 25 ஏப்ரல் 2013 (UTC)
- இன்றளவும் - என்பதே சரி. இன்றலவும் - எனத் திருத்திப் பிழை செய்திருந்தீர்கள். கவனம் வேண்டும். காலம் பொன்னானது. --Sengai Podhuvan (பேச்சு) 22:35, 26 ஏப்ரல் 2013 (UTC)
வேண்டுகோள்
தொகுதிருத்தம் செய்வோர் பாடல் மூலத்தை ஒப்புநோக்கித் திருத்துதல் வேண்டும். இன்றேல் இப்போதுள்ள கொடைக்கானல் சங்க காலத்தில் கோடைச்சிலம்பு அதாவது கோடைக்கானல் என வழங்கப்பட்டது என்னும் வரலாறும், பண்டைய தமிழ்ச்சொல்லின் சிறப்பும் அழிக்கப்பட்டுவிடும். --Sengai Podhuvan (பேச்சு) 05:25, 21 சூன் 2014 (UTC)--Sengai Podhuvan (பேச்சு) 05:25, 21 சூன் 2014 (UTC)