பேச்சு:நல்லங்கு


தலைப்பு

தொகு

தமிழில் இவ்விலங்குக்கு வழக்குச்சொல் இல்லையென்று நினைத்திருந்தேன். (அழுங்கு என்ற பொதுப்பெயரைத் தகவலுழவன் சேர்த்திருந்தார்.) ஆனால் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகரமுதலியில் குறிப்பாக இந்த விலங்குக்கே நல்லங்கு எனப் பெயர் தந்துள்ளார்கள். பார்க்க: சென்னைப்பல்கலைக்கழகம் (1924–1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். p. 2170. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)CS1 maint: date format (link) தலைப்பை மாற்றிவிடலாமா? -- சுந்தர் \பேச்சு 11:49, 22 பெப்ரவரி 2012 (UTC)

ஆம், தாங்கள் கூறுவது சரியானதே. கட்டுரையானது நல்லங்கு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. --மதனாஹரன் (பேச்சு) 04:31, 10 மார்ச் 2012 (UTC)
நன்று :) --செல்வா (பேச்சு) 13:40, 10 மார்ச் 2012 (UTC)
நன்றி. -- சுந்தர் \பேச்சு 13:48, 10 மார்ச் 2012 (UTC)
அழுங்கு என்ற சொல்லே வழக்குச் சொல்லாகத் தெரிகிறது. மழைக்காலமும் குயிலோசையும் என்ற நூலிலும், http://www.germantamilology.com/docs/DigitalArchives.pdf தொகுப்புக்கமையவும். --Natkeeran (பேச்சு) 19:35, 27 மே 2012 (UTC)Reply

அழுங்கு என்பது பொதுப் பெயர் என்று சுந்தர் விளக்கம் தந்துள்ளார். --மதனாகரன் (பேச்சு) 08:21, 30 மே 2012 (UTC)Reply

அழுங்கு கவச உடலிகளுக்கான பொதுப்பெயராகத் தெரிந்ததால் அதற்கேற்றாற்போல் மாற்றியிருந்தேன், நற்கீரன். -- சுந்தர் \பேச்சு 11:09, 30 மே 2012 (UTC)Reply

இது குறித்தவைகள்

தொகு

இது குறித்த உரையாடல், ஆலமரத்தடி#முதற்பக்கம்-உங்களுக்குத் தெரியுமா? என்ற தலைப்பிலும் உள்ளது.-- உழவன் +உரை.. 06:57, 26 சூலை 2012 (UTC)Reply

ஆர்மடில்லோ அல்லது சிற்றழுங்கு

தொகு

நல்லங்கு என்பதற்கான சான்று பழுதடைந்து விட்டது போல் தெரிகிறது. மேலும் அது ஒரு தமிழ்ச்சொல் என்பதற்கான நம்பத்தகுந்த சான்று எதுவும் கிடைக்கவில்லை. தவிர கீழ்க்கண்ட மூன்றும் அழுங்கு வகைகள் (கவச உடல் கொண்டவை) ஆகும்.

  • Armadillo= ஆர்மடில்லோ
  • Pangolin= அழுங்கு
  • Anteater= எறும்புண்ணி [1]

ஒரு உயிரினத்திற்கான தமிழ்ப்பெயர் இல்லாதவிடத்தில் பிறமொழிப் பெயர்களை அப்படியே பயன்படுத்துவதில் தவறில்லை. (எ-டு சாலமாண்டர்). எனவே ஆர்மடில்லோ என்ற தலைப்பே சரியாக இருக்கும்.[2] அல்லது ஆர்மடில்லோ என்ற எசுப்பானிய சொல்லின் பொருளான சிற்றழுங்கு (little armoured one) என்ற பெயரும் பொருத்தமாக இருக்கும். Varunkumar19 (பேச்சு) 06:22, 6 மார்ச் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நல்லங்கு&oldid=2676615" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நல்லங்கு" page.