பேச்சு:நாகம் (பேரினம்)

ஆங்கில விக்கிக் கட்டுரையில் en:Indian Cobra தமிழில் நல்ல பாம்பு அல்லது நாஜ பாம்பு என அழைக்கப்படுகிறது என எழுதியிருக்கிறார்கள். அது நாக பாம்பு என்றிருக்க வேண்டுமா? அல்லது தமிழகத்தில் நாஜ பாம்பு என அழைக்கப்படுகிறதா?--Kanags \உரையாடுக 12:44, 12 சூன் 2011 (UTC)Reply

தமிழில் நாஜ பாம்பு என்றில்லை. நாக பாம்பே சரி.. நாகர், நாகர் கோவில் என்று கடவுளாக வழிபடப்படுபவை. நல்ல பாம்பு, நல்லது (பாம்பு எனச் சொல்லவும் பயந்து) என்றும் அழைக்கபடுகிறது.--மணியன் 12:49, 12 சூன் 2011 (UTC)Reply

முரண் தொகு

  • இந்திய நாகம் என்பதற்கே, en:Indian Cobra இந்த இணைப்பு உள்ளது. இக்கட்டுரையிலுள்ள en:Chinese Cobra இணைப்பை நீக்க வேண்டும். இந்தியநாகத்திற்கும், இந்த நல்லபாம்புக்கும் உள்ள வேறுபாடுகளை அறிய ஆவல். படமெடுக்கும் பாம்பினைத் தமிழில், நாகம் என்று அழைப்பரென்று, இக்கட்டுரை இலக்கிய ஆதாரங்களுடன் கூறுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது, கட்டுரையை நல்லபாம்பு என்று அழைத்தலே சரி.--≈ உழவன் ( கூறுக ) 11:15, 13 சூலை 2013 (UTC)Reply
en:Chinese Cobra நீக்கப்பட்டுள்ளது. சரியான இணைப்பு en:Cobra --Anton (பேச்சு) 11:21, 13 சூலை 2013 (UTC)Reply

பெயர் தொகு

நாகம் என்பதே சரியான பெயர். நாகப் பாம்பு என்றிருக்க வேண்டியதில்லை. நாகம் என்ற பெயரில் வேறு தலைப்புக்களும் இருக்கலாம். எனவே நாகம் (பாம்பு) என்று தலைப்பிடுவதே சாலப் பொருத்தம். ஏனைய தலைப்புக்களில் நாகம் (உலோகம்), நாகம் (மரம்) என்பன உள்ளடங்கும்.--பாஹிம் (பேச்சு) 03:59, 28 பெப்ரவரி 2019 (UTC)

இலக்கணம் தொகு

நச்சுள்ள பாம்பு என்று எழுதப்பட்டுள்ளது. நஞ்சுள்ள பாம்பு என்று வர வேண்டும். நச்சு என்பது நஞ்சு என்பதன் பண்புத் தொகை (adjective). நச்சுப் பாம்பு என்றெழுதலாம்.--பாஹிம் (பேச்சு) 04:01, 28 பெப்ரவரி 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாகம்_(பேரினம்)&oldid=2671710" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நாகம் (பேரினம்)" page.