பேச்சு:நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருத்தம்
தொகுமயூரநாதன், இராமானுச நூற்றந்தாதி எழுதிய திருவரங்கத்தமுதனார் அவர்கள் 12 ஆழ்வார்களுள் ஒருவர் இல்லை. 12 ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 4000 அல்ல (சற்று குறைவு). கட்டுரையில் திருத்த வேண்டும்.--செல்வா 20:08, 14 பெப்ரவரி 2007 (UTC)
- இவர் ஆழ்வார்களுள் ஒருவர் அல்லவானாலும் இவர் பாடிய பாடல்களும் நாலாயிர திவ்யப் பிரபந்த நூல்களுள் ஒன்றாகக் கணிக்கப்படுகிறது. இதையும் சேர்த்துத் தான் 4000 என்கிறார்கள். (பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரனின் தமிழ் இலக்கிய வரலாறு) Mayooranathan 20:16, 14 பெப்ரவரி 2007 (UTC)
- இப்பொழுதிருக்கும் முதல் வரி"வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் என்று போற்றப்படும் பன்னிரண்டு பெரியார்களால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப் பிரபந்தம் எனப்படுகின்றது.". இதனை கீழ்க்காணுமாறு திருத்தினால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
- வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் என்று போற்றப்படும் பன்னிரண்டு பெரியார்களால் இயற்றப்பட்ட பாடல்ளோடு திருவரங்கமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்த தொகுப்பே நாலாயிர திவ்யப் பிரபந்தம் எனப்படுகின்றது.