பேச்சு:நாவிதர்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Mahir78
அம்பட்டர், நாவிதர் இரண்டும் ஒரே சமூகத்தினரை குறிக்குமா? -- மாஹிர் 06:58, 3 மே 2010 (UTC)
கட்டுரையின் சில வரிகள் கலைக்களஞ்சிய நடையில் இல்லை--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 15:05, 5 ஏப்ரல் 2011 (UTC)
- மருத்துவர் பெ. கார்த்திகேயன் குறிப்பிடும் வரிகள் நாவிதர் மதிப்பு எனும் தலைப்பில் உள்ள செய்திகளாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அத்தலைப்பிலான செய்தி, உயிரோசை இணைய இதழில் கட்டுரையாளர் எழுதிய நடையில் அப்படியே தரப்பட்டுள்ளது. அதை நாம் மாற்ற வேண்டியதில்லை. அது அந்த செய்தியின் ஆதாரமான தகவல் என்பதால் அப்படியே இருக்கட்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:16, 5 ஏப்ரல் 2011 (UTC)
- நாவிதர் மதிப்பு எனும் தலைப்பு முழுவதும் ஒரே மேற்கோளாக இருப்பதை தேனியார் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இங்கே நாவிதர் குலத்தில் பிறந்த எங்கள் ஊர் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி விசுவநாத தாஸ் குறித்து குறிப்பு சேர்க்கலாமா ? --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 02:45, 6 ஏப்ரல் 2011 (UTC)
- குறிப்பிட்டப் பகுதி மேற்கோளாக இருப்பின் யாருடையது,எங்கு, எப்போது கூறப்பட்டது என குறிப்பிடப்பட வேண்டும். மேற்கோள் பெட்டியை பயன்படுத்துதல் நலம். மேற்கோள் குறிகள் மட்டும் இட்டால் போதாது. எடுத்துக்காட்டுக்கு காமினி ராய் காண்க.--மணியன் 04:06, 6 ஏப்ரல் 2011 (UTC)