பேச்சு:நிறைவுப் போட்டி (பொருளியல்)

நிறைவுப் போட்டி என்பது சரியாக் இருப்பதாகத் தெரியவில்லை. நீங்கள் வழங்கிய நிறைப் போட்டி என்பது சரியாக உள்ளது. நிறை என்றால் எடை என்னும் பொருள் குழப்பம் வருமோ என நீங்கள் எண்ணியிருக்கக் கூடும். அக்குழப்பம் வர வாய்ப்பிருந்தாலும் அதுதான் சரியான சொல். இது வேண்டாம் எனில், செம்போட்டி, சீர்நிறைப் போட்டி, செம்பொருத்தப் போட்டி, செழும்போட்டி, செவ்விய போட்டி, சீரொத்த போட்டி என ஏதேனும் ஒன்றை ஆளலாம். நிறைவுப் போட்டி என்பது ஏதோ கடைசி போட்டி என்பது போலவோ, எதையோ நிறையச் செய்யும் போட்டி என்பது போலவோ ஒலிக்கின்றது. --C.R.Selvakumar 17:12, 5 ஜூலை 2006 (UTC)செல்வா

செல்வாவுடன் உடன்படுகிறேன்--ரவி 09:25, 6 ஜூலை 2006 (UTC)

ஆங்கிலத்தில் Perfect competition இங்கு நிறைவு என்பது எண்ணிறைந்த/மிக அதிகமான எனும் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.இது இலங்கை பாடதிட்ட மொழிபெயர்ப்பே இருந்தபோதும் செம்போட்டி நன்றாக இருக்கும் என என்னுகிறேன். --kalanithe

@MPVK: இந்தக் கட்டுரை General equilibrium theory பற்றியதா அல்லது Perfect competition பற்றியதா?--Kanags \உரையாடுக 08:00, 19 ஆகத்து 2016 (UTC) இது Perfect Competition ( நிறைவுப் போட்டி ) பற்றியது--MPVK (பேச்சு) 09:54, 19 ஆகத்து 2016 (UTC)Reply

Return to "நிறைவுப் போட்டி (பொருளியல்)" page.