MPVK
வாருங்கள்!
வாருங்கள், MPVK, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- தமிழ்க்குரிசில் (பேச்சு) 18:33, 20 மார்ச் 2016 (UTC)
சுயகற்றல் வழிமுறை
தொகு- உங்கள் ஆர்வமறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. நீங்கள் உங்கள் பணிகளில் மேலும் சிறக்க, ஒரு வழிமுறையை கூறவிரும்புகிறேன். உங்களுக்கு பிடித்த கட்டுரை ஒன்றினை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் தொகு வழியே சென்று, அதனை நகலெடுத்துக் கொள்ளுங்கள். பின், அதனை உங்கள் பெயருக்கு அருகிலுள்ள மணல் தொட்டி என்பதுள் ஒட்டி, முன் தோற்றம் காணவும். அது உங்களுக்குப் பிடித்த கட்டுரை போலவே இருக்கும். பிறகு, உங்களின் மணல் தொட்டியைச் சேமிக்கவும். பிறகு, மணல் தொட்டியைத் திறந்து, கட்டுரையின் உள் இருக்கும் வரிகளை அல்லது குறியீடுகளை ஒன்றை நீக்கி சேமிக்கவும். இப்படி ஒவ்வொன்றாக செய்தால், விக்கியில் நீங்கள் எழுதும் வரிகள் எப்படி சேமிக்கும் போது தோன்றும் என்பது புலனாகும். இந்த அனுபவம் ,உங்களுக்கு புதிய கட்டுரையை எழுத உதவும். ஒரு பாடநூல் போல எழுத வேண்டும். பாடநூலுரை போன்று எழுதக் கூடாது. அதாவது படித்துப் புரிந்து கொண்டதை, சொந்த கருத்துக்களால் விவரிக்கக் கூடாது. ஒரு நல்ல பாடநூல், ஒவ்வொரு மனதிலும் வேறுபட்டு சிந்தனைகளைத் தூண்டும் அல்லவா? அதனால், அப்படியே எழுதுங்கள் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன். வணக்கம்.--த♥உழவன் (உரை) 05:07, 24 சூன் 2016 (UTC)
நன்றி. அவ்வாறே முயற்சி செய்கிறேன் --Dr MPV (பேச்சு) 07:40, 24 சூன் 2016 (UTC)
குறிப்புகள்
தொகு- பயனர் பெயர் மாற்ற இங்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும். @Shanmugamp7: கவனித்து உதவ வேண்டுகிறேன்.
- ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள சிறந்த கட்டுரைகள் பட்டியல், நல்ல கட்டுரைகள் பட்டியலைக் காணலாம்.
உங்கள் இதர கேள்விகளையும் இங்கேயே கேட்டால் மற்ற பயனர்கள் கவனித்து உதவுவர். --இரவி (பேச்சு) 07:51, 29 சூன் 2016 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி
வணக்கம், MPVK!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.
மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.
பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
- நீங்கள் உருவாக்கிய கட்டுரையை விரிவாக எழுதலாம். மேலும் பல கட்டுரைகளைத் தொடங்கலாம்.
- ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம். அவற்றை விரிவாக்கலாம்.
- விக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.
--இரவி (பேச்சு) 07:53, 29 சூன் 2016 (UTC)
- பயனர் பெயர் மாற்ற Special:GlobalRenameRequest படிவத்தையும் பயன்படுத்தலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 08:24, 29 சூன் 2016 (UTC)
நன்றி திரு சண்முகம். பெயர் மாற்றம் பதிவு செய்யப்பட்டுவிட்டது--Dr MPV (பேச்சு) 09:38, 29 சூன் 2016 (UTC)
பதக்கம்
தொகுஅசத்தும் புதிய பயனர் பதக்கம் | |
மிகவும் மாறுபட்ட தலைப்புகளில் செறிவான கட்டுரைகளைத் தருகிறீர்கள். காண மகிவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:14, 16 சூலை 2016 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
- விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:31, 16 சூலை 2016 (UTC)
நன்றி திரு ரவி, உங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்பான வார்த்தைகளுக்கும். திரு ஆதவன் அவர்களுக்கும் நன்றி--MPVK (பேச்சு) 08:33, 16 சூலை 2016 (UTC)
படிமம்
தொகுநீங்கள் உருவாக்கிய அல்லது சொந்தப் படிமங்களை பொதுகத்தில் பதிவேற்றுங்கள். நியாயப் பயன்பாட்டுப் படிமங்களை மட்டும் இங்கு பதிவேற்றுவது சிறப்பானது. --AntanO 03:42, 21 சூலை 2016 (UTC) சொந்த படிமங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. அவைகள் சிறிது நேரத்தில் பதிவேற்றப்படும்--MPVK (பேச்சு) 03:45, 21 சூலை 2016 (UTC)
- மீண்டும் குறிப்பிடுகிறேன். சொந்தப் படிமங்களை பொதுகத்தில் பதிவேற்றுங்கள். நியாயப் பயன்பாட்டுப் படிமங்களை மட்டும் இங்கு பதிவேற்றுங்கள். --AntanO 13:59, 14 ஆகத்து 2016 (UTC) நன்றி அவ்வாறே செய்யப்படும்--MPVK (பேச்சு) 12:26, 15 ஆகத்து 2016 (UTC)
தேவையற்ற பேச்சுப் பக்க உரையாடல்கள்.
தொகுவணக்கம் நண்பரே. இன்று நீங்கள் தொடங்கிய தைலக்களிம்பு, இரட்டைக் குவியக்கண்ணாடி ஆகிய கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இது தைலக்களிம்பு குறித்தான பக்கம் என்பது போல சேர்த்துள்ளீர்கள். கட்டுரையை படிப்பவர்கள் அதனை நன்கு அறிந்து கொள்வார்கள். கட்டுரை குறித்த சிக்கல்கள், அவை குறித்த வேறு கருத்துகளை தெரிவிக்கவே உரையாடல் பக்கம் உள்ளது. இவ்வாறு ஒவ்வொரு கட்டுரைக்கும் இட வேண்டிய அவசியமில்லை. எனவே அதனைத் தவிருங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:39, 11 ஆகத்து 2016 (UTC) நன்றி சகோதரரே--MPVK (பேச்சு) 04:51, 11 ஆகத்து 2016 (UTC) விகி காமன்சுலிருந்து எவ்வாறு ஒரு படிமத்தை எடுத்து புதைய கட்டடுரையில் கையாள்வது--MPVK (பேச்சு) 09:20, 17 பெப்ரவரி 2018 (UTC)
பதிப்புரிமை மீறல்
தொகுவணக்கம், MPVK!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.
ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.
இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
வணக்கம், MPVK!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
ஆரம்பகால குழந்தை உளவியல் கோட்பாடுகள்
தொகுஆரம்பகால குழந்தை உளவியல் கோட்பாடுகள் என்ற கட்டுரைக்கு இணையான பிற விக்கிப்பீடியா கட்டுரை உள்ளதா? ஆரம்பகால குழந்தை உளவியல் கோட்பாடுகள் பற்றி பலரும் கருத்துக்கள் குறிப்பிட்டிருக்க, மூவரை மட்டும் குறிப்பிட்டுள்ளது ஏன்? இக்கட்டுரை சொந்தக் கருத்துப் போல் உள்ளது. இது பற்றிய விளக்கம் தேவை. குறிப்பு: இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட கட்டுரைகள் சிலவும் சொந்த ஆய்வுக் கட்டுரைகள் போல் உள்ளன. --AntanO (பேச்சு) 06:04, 19 ஆகத்து 2018 (UTC)
வணக்கம்.அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சிக்கு அடித்தளம் இட்டு குழந்தை உளவியலைப் பற்றிக்கூறியவர்கள் ஆரம்பகாலத்தில் இவர்கள் மூவருமே ஆவர். குழந்தை உளவியலுக்கு பல முன்னோடிகள் இருந்தாலும் ஆரம்பகாலத்தில் (Early theorists) குழந்தை உளவியல் என்னும் பொருள் குறித்து கருத்துக் கூறியவர்கள் இவர்களே. இப்பொருள் குறித்து வேறு கட்டுடரைகள் இல்லை . குழந்தை உளவியல் முன்னோடிகள் ஏழு அறிஞர்கள் உள்ளனர். அவர்களைப் பற்றிய கட்டுரையும் எழுதப்பட்டு வருகின்றது. விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். இதற்கு முன் பதிவேற்றப்பட்ட கட்டுரைகள் சொந்தக் கருத்துப் போல் உள்ளது என்பது ஏற்ப்டையது அல்ல. ஈஸாவஸ்யம் உபனிடதம் குறித்த எழ்தட்ப்பட்ட கட்டுரையை நீக்கியுள்ளீர்கள்.அது உடன்பாடில்லை. ராமகிருஸ்ண மடம் வெளியிட்டுள்ள புத்தகத்தின் மேற்கோள்களுடனும், பூர்ணாலயா என்னும் வலைதளத்த்ல் சுவாமி குருபதானந்தா அவர்களின் உரை (விலையில்லாமல் பதிவிறக்கம் செய்யக் கூடியதும்)யின் மேற்கோள்களுடன் எழுதப்பட்டது. அந்த உரையில் எதுவும் சொந்த கருத்துக்கள் இல்லை. இதில் எந்த காப்புரிமை/ பதிப்புரிமை மீறல்களும் இல்லை. கூறப்பட்டதுபோல் வலைதளத்திலிருந்து படியெடுக்கப்படவில்லை. நேரம் இன்மையினால் நீங்கள் நீக்கியவுடன் பதில் எழுதவில்லை. தயவுசெய்து அதனை மீண்டும் பதிவேற்றம் செய்யவும் --MPVK (பேச்சு) 07:24, 19 ஆகத்து 2018 (UTC)
- இவர்கள் மூவருந்தான் ஆரம்பகால குழந்தை உளவியல் கோட்பாட்டாளர்கள் என்பதை நம்பகமான மூலத்துடன் அறிமுக பந்தியில் உள்ளடக்க முடியுமா? நீங்கள் ஆ.வி.யில் எழுதிய கட்டுரை "Unfocused" என்று குறிக்கப்பட்டிருப்பதைப் பாருங்கள். இவ்வாறான கட்டுரைகள் மிகவும் தெளிவாக எழுதப்படாதவிடத்து, சொந்த ஆய்வுக்கட்டுரையாக கருதப்பட வாய்ப்புள்ளது. ஈஸாவஸ்யம் உபனிடதம் முன்னைய புத்தகத்தின் பல பகுதிகளை அப்படியே உள்வாங்கி இருந்தது. அது பதிப்புரிமை மீறல் இல்லை என்றால், அதனை முறையாக குறிப்பிட வேண்டும். அல்லது குறித்த நூலினை விக்கிமூலத்தின் பதிவேற்றலாம். பதிப்புரிமை மற்றும் அது தொடர்பான குறிப்புக்கள்: en:WP:C, en:WP:CONSENT, en:WP:COPYREQ, en:WP:DCP. நிற்க, விரிவான கட்டுரைகள் எழுதுவதற்குப் பாராட்டுக்கள். அதேநேரம், விக்கி வழிகாட்டல்களைக் கொஞ்சம் அறிந்து பங்களித்தால் இன்னும் சிறப்பான கட்டுரைகள் உருவாக்கலாம். மேலும், "உயர் நீதிமன்றம்", "மாநில நிர்வாகம்" போன்ற கட்டுரைகள் பொதுவான தலைப்பாக இருந்தாலும், இந்தியா தொடர்புடையதாக எழுதப்பட்டுள்ளது. ஆகவே தலைப்பு இந்தியா தொடர்புடையதாக இருப்பது அவசியம். அத்துடன் விக்கியாக்கம் தொடர்பிலும் கவனம் செலுத்துங்கள். --AntanO (பேச்சு) 02:33, 24 ஆகத்து 2018 (UTC)
வணக்கம். இவர்கள் மூவருந்தான் முன்னோடிகள் என்பதற்கான ஆதாரம் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஆ.வி யில், அனேகமாக விகியிலேயே என்னால் எழுதப்பட்ட முதல் இரண்டு மூன்று கட்டுரை களில் அது ஒன்று என நினைக்கிறேன். அது சரியில்லாத ஒன்று என்பதையும் அறிவேன். பதிப்புரிமை குறித்த குறிப்புக்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் படித்தேன். அவைகள் மீறப்படவில்லை. ராமகிருஸ்ண மடம் வெளியிடப்பட்ட புத்தகத்திலிருந்து மிகச் சில கருத்துக்க்களே கையாளப்பட்டுள்ளன. அவை மேற்கோள்களாக காட்டப்பட்டுள்ளன. ஈஸாவாஸ்யம் ஆதி சங்கரர் உரையின் அடிப்படையில் எழுதப்பட்டது. சுவாமி குருபதானந்தாவின் சொற்பொழிவுகள் (விலையில்லாமல் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டவை) கேட்டும் எழுதப்பட்டது. ஆதலால் அக்கட்டுரையை பதிவேற்றம் செய்வதில் தவறேதும் இருப்பதாகக் கருதவில்லை. தயவு செய்து அதனைப் பதிவேற்றம் செய்யவும் . நன்றி--MPVK (பேச்சு) 23:56, 29 ஆகத்து 2018 (UTC)
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018
தொகுபெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி--Kanags (பேச்சு) 05:23, 6 அக்டோபர் 2018 (UTC)
பழி வாங்குதல்
தொகுபழி வாங்குதல் கட்டுரையினை எழுதியதற்கு நன்றி. அந்தக் கட்டுரையில் உள்ள சில ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுத வேண்டுகிறேன். சில வார்த்தைகளை நான் மாற்றியுள்ளேன். நன்றி ஸ்ரீ (talk) 10:10, 22 ஏப்ரல் 2019 (UTC)
நன்றி நண்பரே. அவ்வாறே முற்சிக்கிறேன்--MPVK (பேச்சு) 01:07, 24 ஏப்ரல் 2019 (UTC)
சீனாவின் தத்துவங்கள்
தொகுஅன்பு நன்பரே நீங்கள் தொடங்கிய சீனாவின் தத்துவங்கள் என்ற கட்டுரையானது சீன மெய்யியல் என்ற பெயரில் ஏற்கெனவே உள்ளது அன்புகூர்ந்து ஒரு கட்டுரையை மொழிபெயர்கத் துவங்கும் முன் அந்த ஆங்கிலக் கட்டுரையின் இடதுபுரம் உள்ள மொழி வரிசையில் தமிழ் உள்ளதா என பார்த்து இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு கட்டுரையை துவக்குங்கள். இதனால் உங்கள் உழைப்பு வீணாகாது.--அருளரசன் (பேச்சு) 11:08, 18 சூலை 2019 (UTC) நன்றி நண்பரே. நான் மொழி பெயர்க்கும்முன் தமிழில் இந்த தலைப்பில் கட்டுரை உள்ளதா என்று தேடினேன், நீங்கள் கூறியவாறு மொழிவரிசையில் தேடி கட்டுரை எழுதத் தொடங்குவேன்--MPVK (பேச்சு) 15:08, 18 சூலை 2019 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு
தொகுசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங
தொகுஅன்புடையீர் MPVK,
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.
இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.
கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.
நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.
இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)