பேச்சு:நீலான்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sivakumar in topic தமிழ்ப்பெயர்
உட்பிரதேசத்துக்குரிய உயிரி
தொகுஉட்பிரதேசத்துக்குரிய உயிரி = வட்டார உயிரி?--ரவி 06:47, 31 ஜூலை 2009 (UTC)
- ரவி தற்போது இருக்கும் இந்த பெயரில் எனக்கு உடன்பாடில்லை. "பிரதேசம்" என்னும் சொல்லை நீக்கவேண்டுமென்று எண்ணினேன். மயூரன் endemic என்பதன் இலங்கை வழக்காக "உட்பிரதேசத்துக்குரிய அங்கி" என்று கூறினார் (விக்சனரி குழுமத்தில்) ஆதலால் அதையே வைத்துவிட்டேன். வட்டாரம் என்பதை விட இன்னும் கொஞ்சம் சிறப்பான சொல்லாக இருந்தால் நன்றாக (catchy) இருக்கும் என நினைக்கிறேன். :)--கார்த்திக் 09:28, 31 ஜூலை 2009 (UTC)
- அகவலைய, அகணி, உள்ளக, என பலசொற்களால் குறிக்கலாம். பிரதேசம் என்பது பகுதி (நிலப்பகுதி). --செல்வா 00:40, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
சிறப்புக் கட்டுரை நியமனம்
தொகுதமிழ் விக்கியில் சிறப்புக் கட்டுரைகளை இனங்கண்டு ஆண்டுகள் ஆகின்றன :) கார்த்திக் எழுதி வரும் விலங்குகள் தொடரில் பலவும் முழுமை வாய்ந்த, தமிழ் அறிவுலகில் காணாத சிறந்த கட்டுரைகள். கார்த்திக்கு என் நன்றியும், பாராட்டுகளும்.--ரவி 06:49, 31 ஜூலை 2009 (UTC)
இக்கட்டுரை, விக்கிபீடியா:சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப்படக் கோரி நியமிக்கப்பட்டிருக்கிறது. இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை இதன் நியமனத் துணைப்பக்கத்தில் பதியுங்கள். ஒரு சிறப்புக் கட்டுரை விக்கிபீடியாவின் சிறப்பிற்கு சான்றாய் அமைந்திருக்க வேண்டும். சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளைப் பார்க்கவும். |
தமிழ்ப்பெயர்
தொகுஇவ்விலங்கின் தமிழ்ப்பெயர் Manu-potu என்று இலைடக்கர் எழுதியுள்ளார்.[1] அவரது ஒலிபெயர்ப்பு விளங்கவில்லை. கார்த்தி, செல்வா விளக்கவும். -- சுந்தர் \பேச்சு 08:19, 22 அக்டோபர் 2010 (UTC)
- தொடர்புடைய உரையாடல் பக்கம். இங்கு மரையா அல்லது மரை ஆன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. --சிவக்குமார் \பேச்சு 06:18, 17 மே 2012 (UTC)
மேற்கோள்கள்
தொகு- ↑ Lydekker, Richard (1907). The Game animals of India, Burma, Malaya and Tibet: Being a now and Rev. Ed. of The Great and Small Game of India, Burma and Tibet. Rowland Ward.