பேச்சு:பங்காரு லட்சுமண்

தமிழகத்து செய்தித்தாள்களில் க்ஷ் எழுத்தை இதுவரை நால் பார்த்ததே இல்லை. பங்காரு கூகுள் தேடலில், பங்காரு லட்சுமண் - 5888 முடிவுகள், பங்காரு லக்ஷ்மண் - 88 முடிவுகள். மேலும், இந்தியாவில் தமிழ் ஊடகங்கள் இராஜாங்க என்ற சொல்லை பயன்படுத்துவதில்லை, மாற்றாக, அமைச்சரவை, அமைச்சர் என்றே கூறுகிறோம். மந்திரி என்றும் சில இதழ்கள் எழுதுகின்றன. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:30, 20 ஏப்ரல் 2013 (UTC)👍 விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 07:58, 20 ஏப்ரல் 2013 (UTC)

  • லக்‌ஷ்மண் மற்றும் லட்சுமண் இரண்டிற்கும் நானே வழிமாற்று ஏற்படுத்தலாம் என்றிருந்தேன், செய்துவிட்டீர்கள் நன்றி.
  • நானறிந்த வரையில் (Cabinet)Minister மற்றும் Minister of state இரண்டிற்க்ம் வித்தியாசம் உண்டு. முன்னது மத்திய அமைச்சர், பின்னது மத்திய இராஜாங்க அமைச்சர்[ஒரு குறிப்பிட்டத் துறை அமைச்சருக்கு உதவும் வகையில் இருக்கும் மற்றொரு பதவி](அரசியல் கட்டுரை எழுதும், ஆழ்ந்த அரசியல் ஞானம் உள்ள யாருடனாவது கொஞ்சம் விசாரித்துவிடுங்கள்). இராஜாங்க அமைச்சர் உச்சரிக்க ஒருவாறு வித்தியாசமாகப் பட்டதால் மந்திரி என இட்டேன். --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 06:43, 20 ஏப்ரல் 2013 (UTC)
👍 விருப்பம் அரசு, அரசாங்கம் என்ற இரண்டிற்கும் வேறுபாடு உண்டாம்! எனக்கு இது பற்றி அதிகம் தெரியாது. காத்திருப்போம், அரசியல் ஞானம் உள்ளவர்க்காக! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமபபா! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:13, 20 ஏப்ரல் 2013 (UTC)

[இந்த இணைப்பில் ஒருவர் அரசு என்றால் State என்றும் அரசாங்கம் என்றால் Goverment என்றும் கூரியிருக்கிறார். அதற்கு நான் கேட்ட பதில் கேள்வி இதுதான்.

//அரசு என்பது State என்றால் மாநில அரசை State’s State என்றா கூறுவார்கள்? விளங்கவில்லையே!//--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:04, 24 ஏப்ரல் 2013 (UTC)

பயன்படுத்தப்படும் இடத்துக்கேற்ப பொருளும் மாறும்.--Kanags \உரையாடுக 22:01, 24 ஏப்ரல் 2013 (UTC)

வார்த்தை கொடுங்கள் தொகு

(Cabinet)Minister, Minister of state இரண்டிற்குமான வேறுபாட்டுடன், சரியான தமிழ் வார்த்தைகளை யாராவது தந்தால் நன்றாகவிருக்கும். ஏனெனில், இந்தக் கட்டுரையில் இரயில்வே துறையின் Minister of State-ஆக பொறுப்பு வகித்து வந்த இவரை மத்திய அமைச்சர்(Minister) என்று குறிப்பிட்டிருக்கிறோம். சரியான வார்த்தையை சேர்க்க வேண்டும். --கி. கார்த்திகேயன் (பேச்சு) 10:20, 25 ஏப்ரல் 2013 (UTC)

இந்த இணைப்புகளைப் பார்க்கவும்
  1. http://www.thinakaran.lk/2010/04/20/_art.asp?fn=n1004206&p=1 -> மத்திய வெளியுறவுத்துறை இராஜாங்க மந்திரி சசி தரூர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  2. http://www.tamilolli.com/?p=2108 -> மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இராஜாங்க மந்திரி வி.நாராயண சாமி பதில் அளித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  3. http://tamilwin.easyms.com/show-RUnwzBSWmHTVm.html -> இந்திய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இராஜாங்க மந்திரி ஷகீல் அகமது அவரை வரவேற்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரில் யாரும் கேபினட் (தகுதியுடைய) அமைச்சர்கள் அல்லர், Minister of State மட்டுமே, எனவே மத்திய இராஜாங்க மந்திரி(அல்லது அமைச்சர்) என்று குறிப்பிடுவதே சரி. இல்லாவிட்டால் இரண்டு பதவிக்கும் வேறுபாடு இல்லையென்றாகிவிடும். மிகவும் சிறப்பாகத் தமிழ்ப்படுத்த வேண்டுமானால் இராஜாங்க = அரசாங்க என்று மாற்றலாம். அது சரியா என்பது எனக்குத் தெரியாததால் தற்பொழுதைக்கு கட்டுரையில் இராஜாங்க என்று மாற்றிவிடுகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பங்காரு_லட்சுமண்&oldid=1411743" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பங்காரு லட்சுமண்" page.