பேச்சு:படிவளர்ச்சிக் கொள்கை
படிவளர்ச்சி எனலாம். --Natkeeran 16:50, 31 ஆகஸ்ட் 2008 (UTC)
பரிணாமம் படிவளர்ச்சி எது பொது வழக்கு, எது சிறந்த சொல்?
தொகு--Natkeeran 16:52, 31 ஆகஸ்ட் 2008 (UTC)
- நற்கீரன், படிவளர்ச்சி படிமலர்ச்சி ஆகியன பொருள் செறிவுடையவை. இங்கு த.இ.ப. மேற்கோளுடன் விளக்கம் தரப்பட்டுள்ளது. -- சுந்தர் \பேச்சு 16:59, 31 ஆகஸ்ட் 2008 (UTC)
- நன்றி. படிவளர்ச்சி நன்றே. --Natkeeran 17:01, 31 ஆகஸ்ட் 2008 (UTC)
- ஆமாம். ஆனால், பொதுவழக்கு, செந்தமிழ்-வழக்கு என்னும் பாகுபாடை விட, en:evolution என்னும் கருத்தை சிறந்த முறையில் எந்த சொல் வெளிப்படுத்துகறது என்று ஆராய வேண்டும்.
வளர்ச்சி எனும் சொல் கீழ் நிலையிலிருந்து ஒர் மேல் நிலைக்கு செல்வதைக் குறிக்கிறது. ஆனால், evolution என்பதில் முன்னேற்றம் அல்லது மேன்மை எனும் கருத்து இல்லை. அந்த சூழ்நிலைக்கு எந்த பண்புகள்/மாறுதல்கள் பொருந்தியனவோ, அவை செழித்தன. தமிழ் en:etymology யில் எனது அறிவு கம்மி என்பதால், நீங்கள் யாராவது தகுந்த சொல் ஒன்றை தேர்வு செய்தால் நல்லது. --Mojosaurus 17:07, 31 ஆகஸ்ட் 2008 (UTC)
குறிப்புகள்
தொகுபடிவளர்ச்சி அண்டத்தின் தோற்றத்தைப் பற்றியோ அல்லது உயிரின் தோற்றத்தைப் பற்றியோ எதையும் இறுதியாக கூறவில்லை. ஆனால் எளிய உயிரினங்களில் இருந்து பலக்கிய உயிரினங்கள் எப்படி தோன்றன என்று படிவளர்ச்சி விபரிக்கிறது. குறிப்பாக ஒரு தலைமுறை உயிரினங்களில் இருந்து பின் தலைமுறை உயிரினங்கள் எப்படி மாறுகின்றன, ஏன் மாறுகின்றன என்று விளக்குகிறது.
ஒரு உயிரின் உயிரியல் பண்புகள் அதன் மரபணுவில் இருக்கிறது.
--Natkeeran 18:36, 31 ஆகஸ்ட் 2008 (UTC)
இவை தெரிந்தவையாயினும், ஒரு சில குறிப்புகள்
- படிவளர்ச்சி உயிர்க்ளின் தோற்றத்தைப்(origin) பற்றி கூறும் கோட்பாடு அல்ல. உயிர் தோன்றலிலிருந்து உயிர்க்ளின் பல்வேறு வகைகளை விவரிக்கும் கோட்பாடாகும்.
- எளிய உயிரனங்களிலிருந்து பலக்கிய உயிரினங்கள் எப்படி தோன்றின என விவரிப்பது மட்டும் படிவளர்ச்சி அல்ல. Natuaral section(இயர்தேர்வு?) மற்றும் adaptation(?) எனும் இரு இயக்கங்களால் உயிரினங்கள் எவ்வாறு மாற்றப்படுகின்றன என்பதை விவரிப்பதே படிவளர்ச்சி ஆகும்.
- பல்வேறு உயிரினங்கள் பலக்கிய நிலையிலிருந்து குறைந்த பலக்கிய நிலை அடைந்துள்ளன. en:Backward_evolution இது கூட படிவளர்ச்சி தான். எனவே தான், படிவளர்ச்சி சரியான பெயரல்ல என்பது என் கூற்று. வேறு ஒரு தகுந்த பெயர் சூட்டவேண்டும். --Mojosaurus 14:01, 1 செப்டெம்பர் 2008 (UTC)
கலைச்சொற்கள்
தொகு- பார்க்க மரபியல் அறிவியல் சொற்கள்
உசாத்துணைகள்
தொகு- http://en.wikipedia.org/wiki/List_of_misconceptions#Evolution
- http://www.skepdic.com/intelligentdesign.html
--Natkeeran 18:45, 31 ஆகஸ்ட் 2008 (UTC)
- இலங்கையில் evolution என்னும் சொல்லுக்கு ஈடாகக் கூர்ப்பு என்னும் சொல் பயன்படுகின்றது. சில தமிழ் நாட்டு நூல்களில் படிமலர்ச்சி என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகின்றது. மயூரநாதன் 19:08, 31 ஆகஸ்ட் 2008 (UTC)
மயூரநாதன், கூர்ப்பு என்பதன் பொருள்(etymology) என்ன? --Mojosaurus 14:03, 1 செப்டெம்பர் 2008 (UTC)
- சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் தரப்பட்டுள்ள பொருளைக் கீழே பார்க்கவும்:
- கூர்ப்பு kūrppu : (page 1075)
- கூர்மை யாக்குதல். படையைக் கூர்ப்பிடுதலோடும் (சீவக. 2303).
- கூர்ப்பு kūrppu
- , n. < கூர்²-. 1. Abundance, excess; improvement; உள்ளது சிறந்து மிகுகை. (தொல். சொல். 314.) 2. [K. kūrpu, M. kūrppu.] Sharpness, pointedness; கூர்மை. கூர்ப்புக் கொண்ட கட்
உள்ளது சிறந்து மிகுதல் (improvement) என்றபொருளில்தான் இலங்கையில் கூர்ப்பு என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது என்று எண்ணுகிறேன். மயூரநாதன் 14:21, 1 செப்டெம்பர் 2008 (UTC)
- நீங்கள் குறிப்பிட்டுள்ளபடியே தொல்காப்பியத்தில் உள்ளது சிறந்து மிகுதல் என்ற பொருளில் கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் என்று சொல்லதிகாரம் 797 ஆவது நெறியில் தரப்பட்டுள்ளது. நல்ல சொல். இதைக் கட்டுரையில் கட்டாயம் மேற்கோளோடு குறிப்பிட வேண்டும். -- சுந்தர் \பேச்சு 16:50, 1 செப்டெம்பர் 2008 (UTC)
- ஆம் கூர்ப்பு என்னும் சொல் மிகப் பொருந்துவது. கட்டாயம் குறிப்பிடல் வேண்டும். தேவாரத்திலும் இச்சொல் ஆளப்பட்டுள்ளது. இச்சொல் பற்றி முன்னொரு முறை உரையாடியுள்ளோம்.--செல்வா 17:35, 1 செப்டெம்பர் 2008 (UTC)
கூர்ப்பு, உள்ளதுசிறத்தல் என்பன கூர்மையுறல், மேன்மையுறல் என்று பொருள்படும். ஆனால் சூழலில் வாழ்வதற்குத் தக/பொருந்த மாறுதலே படிமலர்தல் நிகழ்வாகும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:04, 16 மே 2015 (UTC)
வடதிராவிட மொழியான குருக்கிலும்குருக்கு மொழியிலோ, குறும்பர் மொழியிலோ கூட கூர்ப்பின் இணைச்சொல் இதே பொருளில் (to thrive, be prosperous, increase in honour) உள்ளது அழுத்தமான சான்று: http://dsal1.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.0:1:1907.burrow -- சுந்தர் \பேச்சு 14:59, 26 ஜூலை 2010 (UTC)
படிவளர்ச்சி என்று பெயர் மாற்ற ஆட்சோபனை இருந்தால் தெரிவிக்கவும். நன்றி.
தொகு--Natkeeran 22:43, 2 செப்டெம்பர் 2008 (UTC)
- கட்டுரையின் பெயர் படிவளர்ச்சி என்று இருக்கலாம், ஆனால் படிவளர்ச்சிக் கொள்கை என்று இருப்பதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன். மற்றவர்களின் கருத்தையும் அறிந்து கொண்டு, தேவை இருந்தால் மாற்றுங்கள். எனக்கு மறுப்பில்லை.--செல்வா 01:19, 3 செப்டெம்பர் 2008 (UTC)
மேற்கூறியபடி, படிவளர்ச்சி எனும் பெயருக்கு எதிராக கருத்து நிலையில் எனக்கு மறுப்பு உள்ளது. விக்கிக்கு புதியதாக வந்திருப்பதால், இங்குள்ள வழக்கங்கள் அறியேன். படிவளர்ச்சி என்பது பழைய பெயராக இருக்கலாம். ஆனால், பழையது என்ற ஒரே காரணத்தினால், தவறான கருத்தக் கூறும் பெயரை தொடர்ந்து பயன்படுத்துவது சரியா? --Mojosaurus 02:38, 3 செப்டெம்பர் 2008 (UTC)
- ஈஷ்வர், படிப்படியான மாற்றங்கள் எந்த திசையில் நிகழ்ந்தாலும் படிவளர்ச்சி எனலாம். மேன்மையுறுதல் என்பது கருத்தல்ல. படியில் கீழிறங்கியும் வரலாம். மேலும் கீழுமாகவும் அலையலாம். எளிமைப்படுதலும், விரிவுபடுதலும், மாறுபடுதலும் வளர்ச்சிதான், ஆனால் அவை படிப்படியாய், சிறுகச் சிறுக பல தலைமுறைகளில் நிகழ்கின்றன (பொதுவாக, பெரும்பாலும்). மிகக் குறைந்த காலங்களிலேயே நிகழ்ந்த மாற்றங்களும் உள்ளன, ஆனால் அவை அனைத்தும் படிவளர்ச்சிதான். உங்கள் கருத்து சரிதான், ஆனால் அவற்றையும் படிவளர்ச்சி என்னும் சொல் குறிக்கும் என்பதுதான் என் முன்வைப்பு. எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். ஆங்கிலச் சொல்லிலும் evolution என்னும் சொல் மேன்மை என்னும் பொருளையும் சுட்டும், வெறும் மாற்றத்தையும் சுட்டும். இங்கு "வளர்" என்பது காலத்தால் மாறுபடும் நிலையைச் சுட்டுகின்றது. --செல்வா 03:22, 3 செப்டெம்பர் 2008 (UTC)
- ஆம், நானும் அதைத்தான் கூறவிழைந்தேன். வளர் என்பதன் முதன்மைப் பயன்பாட்டை மட்டும் வைத்து முடிவு செய்ய இயலாது. பொழுதுதோறும் ஏதேனும் ஒரு திசையில் மாற்றம் என்பது அதன் பொதுப்பொருளாகக் கொள்ளலாம். "Backward evolution" என்பது ஒரு சிறப்பு உள்நிகழ்வு. அதன் பொரு்ளைக் குறிக்கத் தகுந்த உரிச்சொல் ஒன்றைக் கொண்டு சிறப்பிக்கலாம்.
- கூர்ப்பு நல்ல சொல். ஆனால் அதுவும் இதே பொருளைத் (உள்ளது சிறந்து மிகுதல்) தருவது. அதையும் கட்டுரையில் தர வேண்டும். -- சுந்தர் \பேச்சு 03:38, 3 செப்டெம்பர் 2008 (UTC)
- செல்வா, சுந்த்ர், நன்று. இவ்விளக்கம் கட்டுரையில் இடம்பெற வேண்டும். பொதுவாக மக்களிடையே இவ்வகைப்பட்ட தவறான கருத்துக்கள் மிகுந்து உள்ளது. நன்றி.--Mojosaurus 13:13, 3 செப்டெம்பர் 2008 (UTC)
'கூர்தலறம்' (=எவல்யூசன்) என்றசொல்லைத் திருவிக அவர்கள் பயன்படுத்துவர்.--Meykandan 14:33, 8 மார்ச் 2010 (UTC)
வழக்கில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பரிணாம வளர்ச்சி என்பதை அடைப்புக்குறிகளுக்குள்ளாவது கொடுப்பது சீரான தமிழ்ச்சொற்களை அறியாது விக்கியில் தேடுபவர்களுக்கு உதவும். நான் கூட அண்மையில் படித்த வலைப்பதிவினை ஓட்டி இது பற்றி த.வி என்ன சொல்கிறது எனத் தேடும்போது பரிணாம வளர்ச்சி என்று தேடி பக்கம் ஏதும் கிடைக்காது குழம்பினேன். பின்னர் ஆங்கில பக்கத்தில் இருந்த த.வி விக்கியிணைப்பு மூலம் இந்தப்பக்கத்தை வந்தடைந்தேன். புதிய சொற்கள் பரவலான புழக்கத்தில் வரும்வரை இத்தகைய அடைப்புகுறிகளை இடுவது தேவை என்பது எனது கருத்து. முன்பு ஓர் உரையாடலில் இது புதுச்சொற்களை அறியும் முயற்சியை முடக்கும் என்று படித்ததாக நினைவு. அப்படியென்றால் ஆங்கிலச் சொல்லை அடைப்புக்குறிக்குள் இடுவதாவது தேவை.--மணியன் 05:19, 22 மார்ச் 2010 (UTC)
- மணியன், நீங்கள் சொல்வது சரிதான். புழக்கத்தில் உள்ள சொற்களை அடைப்புக் குறிக்குள்ளோ அல்லது முதற்பத்தியில் இப்படியும் அழைக்கப்படுகிறது என்றோ கட்டுரையில் தரலாம். தேடும்போது அகப்பட வேண்டுமானால் அச் சொற்களில் வழிமாற்றுப் பக்கங்களை உருவாக்க வேண்டும். மயூரநாதன் 05:53, 22 மார்ச் 2010 (UTC)
- மணியன், நீங்கள் சொல்வது சரிதான். பரிணாம வளர்ச்சி என்ற மாற்றுவழிப் பக்கத்தை ஆக்கியுள்ளேன். முதல் பத்தியிலும் சேர்த்து விடலாம். -- சுந்தர் \பேச்சு 06:02, 22 மார்ச் 2010 (UTC)
மாற்றம் தேவை
தொகுஎன்ற சொற்பிறப்பியலையும் தமிழ் விக்சனரியையும் கவனிக்கும் போது, பரிணாமத்தோற்ற நெறி என்ற பெயர்மாற்றம் தேவையென்றே எண்ணுகிறேன். நெறி என்பது கொள்கை என்பதை விட மேலானது. --≈ த♥உழவன் ( கூறுக ) 17:37, 16 சூலை 2013 (UTC)
படிமலர்தல், படிமலரும், படிமலர் (வி.தொ.),மலர்தலை உலகம் (தேவாரம்) எனக் காலங்காலமாக இலக்கியத்தில் ஏற்த்தாழ Evlutionக்கு நிகரான பொருளில் பயன்பட்டுவந்ததால் படிமலர்ச்சி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்பத எண்ணிப்பார்த்து படிமலர்ச்சி என்ற சொல்லே பயன்படுத்தல் ந்ன்று எனக் கருதுகிறேன். உலோ.செந்தமிழ்க்கோதை ([[பயனர்
பேச்சு:உலோ.செந்தமிழ்க்கோதை|பேச்சு]]) 12:17, 16 மே 2015 (UTC)
Theory of Evolution-படிமலர்ச்சிக் கோட்பாடு; Principle=நெறிமுறை; Policy-கொள்கை எனப் பரவலாகப் பயன்பாட்டில் ஊல்லது. எனவே இங்கு கோட்பாடு என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:04, 16 மே 2015 (UTC)
ஈரிழைச் சுருளை (Double helix)
தொகுDouble Helix என்பதை ஈரிழைச் சுருளை அல்லது ஈரிழைச் சுருளி என்று கூறலாமா? ஈஷ்வர், "விரிபரப்புச்சுருளி வடிவம்(double helix)" என்று குறிப்பிட்டுருந்தார். சுரி, சுரிகை, என்னும் சொற்களும் பொருந்தும். ஈரிழை முருகை என்றும் கூறலாம். --செல்வா 02:21, 3 செப்டெம்பர் 2008 (UTC)
தமிழ் விக்கிசனரியில் helix என்பதற்கு விரிபரப்புச்சுருளி என்றிருந்தது. ஆதலால் எழுதினேன். ஈரிழைச் சுருளை என்பது double-threaded spiral போலத் தோன்றுகிறது. helix என்பதற்க்கு விரிபரப்புச்சுருளி என்பதைவிட எளிவான பெயர் உள்ளதா? --Mojosaurus 02:43, 3 செப்டெம்பர் 2008 (UTC)
- இது double-threaded சுருளைதானே. இரண்டு இழைகளுக்கும் இடையே குறுக்கிணைப்புகள் உண்டு. ஈரிழை வேண்டாம் எனில் இரட்டைச் சுருளை என்றோ இருசுரி என்றோ கூறலாம். அ.கி. மூர்த்தியின் அறிவியல் அகராதியில் இரு திருகுச் சுருள் என்று கொடுக்கப்பட்டுள்லது. ஒரே அச்சில் இரு சுருளைகள் பல சுற்றுகளுடன் உள்ளன. இரு சுருளைகளும் இரு தனி இழைகளால் ஆகிஅய சுருளென்றாலும் அவைகளுக்கு இடையே இணைபுகள் இருக்கும். இதனை ஈரிழைச் சுருளை அல்லது இருசுருளி என்று கூறலாம். இருசுருணை என்றும் கூறலாம் ஆனால் சுருணை என்பது வெறும் சுருட்டு, திருகு கொண்டதல்ல. இரு முருகு, இருமுருகி, இருசுரி (சுரி என்பது திருகாணிபோல் முறுக்கிக்கொண்டு வளைந்து செல்வது; சங்கு சுழித்துக்கொண்டு செல்வதும் சுரி எனப்படும்.). இருபுரி என்றும் சொல்லலாம். புரி என்றாலும் முறுக்கு என்னும் பொருள் சுட்டும். --செல்வா 03:09, 3 செப்டெம்பர் 2008 (UTC)
- குழப்பம், spiral என்பதற்கான தமிழ் வார்த்தை என்ன, helix என்பதன் தமிழ் வார்த்தை என்ன? --Mojosaurus 03:13, 3 செப்டெம்பர் 2008 (UTC)
Spiral, helix என்பனவற்றுக்கு தெளிவான தனிச்சொற்கள் உள்ளனவா என்று அறியேன். சுரி என்பது சுழித்துக்கொண்டு, சுற்றிக்கொண்டு மேலே செல்வது (ஒரு தூணின் மீது அல்லது ஒரு கூம்பின் மீது). ஆங்கிலத்தில் இதனை spire என்பார்கள், ஆனால் Spiral என்பது வேறு (கணித முறையில்). வட்டத்தின் ஆரம் பெருகிக்கொண்டே போவது. Spiral என்பத விரிவார வட்டம் எனலாம். சுருள், சுருட்டை என்பதும் பொதுவாக coil, spring போன்ற வடிவிற்குப் பயன் படுவது (எனவே helix). சுருணை என்பது Spral என்பதற்குப் பயன்படுத்தலாம். தலையில் குடம் போன்றவற்றைத் தாங்க துணியால் ஆன துண்டைத் தட்டையாக Spiral போல் சுருட்டி வைப்பதை சுருணை என்பார்கள். ஆனால். பாயைச் சுருட்டுவது போல இலையையோ, புகையிலைச் சுருட்டையோ சுருட்டுவதும் சுருணை எனப்படும் (இதன் குறுக்குவெட்டுப் பரப்பு spiral ஆக இருக்கும்). --செல்வா 03:38, 3 செப்டெம்பர் 2008 (UTC)
spiral staircase என்பது helix தாம். [1] ஆகவே, சுரி எனும் சொல் சரியாகத்தோன்றுகிறது. --Mojosaurus 13:23, 3 செப்டெம்பர் 2008 (UTC)
Spiral-சுருளி,அகற்சுருள்; Helix-சுருளை,எழுசுருள்; Coil-சுருள்; Winding-சுருணை; slenoid-சுருட்டை; Spring-விற்சுருள்; Turn-சுற்று என நான் பயன்படுத்துகிறேன். எனவே Double Helix-இருசுருளை எனலாம். மாடிப்படியமைப்பைக் குறிக்கும் சொல் திருகேணி எனப்படுகிறது. Double Helix-இருதிருகேணி என்பது பெரிய சொல்லாகிவிடும். ஈரிழைச் சுருளை என்பதில் இழை வெற்றுச் சொல்லாகத் தான் அமைகிறது. எனவே இருசுருளை என்ற சொல்லே பொருத்தமானதென்று கருதுகிறேன். Vortex-சுரி, சுழிப்பு; vortical movement-சுரிப்பு Whirl Wind- சுழிக்காற்று எனப் பயன்படுத்தப்படுவதால் சுரி, சுழி வேர்ச்சொற்களை இங்குப் பயன்படுத்துவது சரிவராது. உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:00, 16 மே 2015 (UTC)
சான்றுகளும் குறிப்புகளும்
தொகு- ↑ "Helical Staircase" by Sándor Kabai, The Wolfram Demonstrations Project.