பதுருப் போர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இஸ்லாத்தில் பிரிவிணைகள் கிடையாது. அல்லாஹ்வையும், அவனது தூதரையும், வேதத்தையும் ஏற்றுக்கொண்டவர்களே முஸ்லீம்கள். சுன்னி மற்றும் சியா என்று மேற்கத்திய வாதிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட பிரிவினைகள். எல்லா முஸ்லிம்களும் அல்லாஹ்வைத்தான் வணங்க வேண்டும். ஆகையால் சுன்னி சியா என்று வேறுபடுத்திக் காட்ட வேண்டாம் நண்பரே.--<fa_dj> 09:26, 20 ஆகஸ்ட் 2010 (UTC)

ஒரு வரலாற்றுக் கட்டுரை

தொகு

இது ஒரு வரலாற்றுக் கட்டுரை என்பதால் ”நபி (ஸ்ல்) அவர்கள்” என்பதை “முகம்மது நபி” என்று அனைத்து இடங்களிலும் மாற்றியுள்ளேன். “அல்லாஹ் அவர்களுக்கு வெற்றி அளித்தான்” என்பதை ”வெற்றி பெற்றார்கள்” என்று மாற்றியுள்ளேன். விக்கி கட்டுரைகள் நடுநிலையாக தகவல்களை மட்டும் தருவனவாக இருக்க வேண்டும், நம்பிக்கையாளர்களால் எழுதப்பட்ட சாயல் இருக்கக் கூடாது. அதுவும் இது ஒரு முதற்பக்க கட்டுரையென்பதால் கூடுதல் கவனம் வேண்டும். --சோடாபாட்டில் 07:24, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply

பத்ர் என்பது சரியான தலைப்பா? Badr என்பதை பதர் என்றால் தமிழில் தவறான பொருள் சுட்டுமோ என்று அஞ்சினால் பதுர் அல்லது பதிர் என்று மாற்றி எழுதலாம் என்பது எ கருத்து. அல்லது இபதர் என்றும் எழுதலாம் (மெல்லொலி பகரகம் வரக்கூடும்). --செல்வா 16:18, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply
ஆம், த்ர் மெய்யொலிக்கூட்டம் தமிழில் வராது. -- சுந்தர் \பேச்சு 16:35, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply
கருத்துக்கு நன்றி சுந்தர். --செல்வா 16:48, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply

உரை தி. + எழுத்துப்பெயர்ப்பு மாற்றங்கள்

தொகு

இசுலாம், முசுலிம் என்றும் அல்லா என்றும் மாற்றங்கள் செய்துள்ளேன். Hijri என்பதை இசுலாமிய நாள்காட்டி என்று எழுதலாம். ஆனால் التقويم الهجري‎; at-taqwīm al-hijrī என்பது போல எழுத வேண்டும் என்றால், தமிழ் முறைப்படி திரித்து எழுதுவது பொருந்தும். ஃகிச்யிரி என்றோ அல்-ஃகிச்யிரி என்றோ இச்யிரி, அல்-இச்யிரி என்றோ எழுதலாம். எப்படி ரமழான் என்றெல்லாம் சிலர் எழுதுகிறார்களோ அதுபோல தமிழ் முறைக்கு ஏற்றவாறு திரித்து எழுதுவது ஏற்புடையதாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவில் கூடியமட்டிலும் கிரந்தம் கலக்காமல் எழுதுவது, பொதுவாக தமிழர்கள் எல்லோரும் எளிமையாக ஒலிக்க ஏதுவாக இருக்கும் முறையைப் பின்பற்றுவது என்னும் பரிந்துரைகளைப் பின்பற்றுகிறோம். இடாய்ச்சு, இத்தாலியம், எசுப்பானியம், அரபி, ஆங்கிலம், பிராசியம் போன்ற எல்லா மொழிகளும் சில ஒலிகளைச் சரிவர ஆளுதல் இயலாது. அது போலவே தமிழிலும். புதிதாக வருவோர் சிலர் இருக்கக்கூடும் எனவே இதனைக் கூறுகின்றேன்.--செல்வா 16:48, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply

இஸ்லாம், முஸ்லிம் என்று ஏற்கெனவே இருந்தால் இசுலாம், முசுலிம் என்று மாற்ற வேண்டாமே. பகுப்புகளிலோ, அல்லது தலைப்புகளிலோ இருந்தால் பரவாயில்லை. பரவலாக அதிக பயன்பாட்டில் உள்ள சொல்லை உடனடியாக வடமொழியிலிருந்து மாற்றினால் புதிதாக விக்கிக்கு வருபவர்களுக்கு மனம் ஏற்றுக்கொள்ள தயங்கலாம். வடமொழி சொற்கள் தொடர்பாக தவியில் கொள்கை இருந்தாலொழிய மாற்றம் செய்யவேண்டாமே.
இசுலாமிய ஆண்டை ஹிஜ்ரி என்று அழைக்கிறார்கள். புதிதாக ஒருசொல்லை(இச்யிரி,ஃகிச்யிரி) நீங்கள் வழங்கினால் கடினமாயிருக்கும். அதற்குப் பதில் இசுலாமிய ஆண்டு என்றே குறிப்பிடலாமே. -- மாஹிர் 18:47, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply
மாகிர் நீங்கள் சொல்வது நன்றாகப் புரிகின்றது. ஆனால் ஒரே சீராக இருப்பது நல்லதல்லவா? இசுலாம், முசுலிம் என்று வெளியிடங்களிலும் எழுதுகின்றார்கள். கூடிய மட்டிலும் கிரந்தம் விலக்கி எழுதுவது விக்கியில் இருக்கும் பரிந்துரை. இசுலாமிய ஆண்டு என்று கட்டாயம் பயன்படுத்தலாம். எனக்கும் முழு ஏற்பே. அதுவே சிறந்தது. பிற மொழி விக்கிகள் பலவற்றிலும் இப்படித்தான் எழுதியுள்ளார்கள். பொதுவாக நீங்கள் சொல்வதை நான் நன்கு அறிவேன். ஒவ்வொரு மொழியாளரும், மதத்தினரும் தங்களுக்கான காரணத்தால் தமிழ்மொழியைக் குலைப்பதைக் கண்டும் பிறருக்கு மன வருத்தம் ஏற்படும் என்பதையும் நீங்கள் கருதிப்பார்க்க வேண்டும். அரபியில் இல்லாத ஒலிகளை அதில் புகுத்தி எழுதினால் அரபியர் ஏற்றுக்கொள்வரா? ஆங்கிலத்தில் உள்ள j என்னும் ஒலி இடாய்ச்சு மொழியில் இல்லை ஆகவே அவர்கள் Japan என்பதை யாப்பான் என்கின்றனர். Hajj என்பதை Haddsch என்று எழுதுகின்றனர். ஃகிச்யிரி என்று எழுதுவது ஏறத்தாழ அதே ஒலிப்பைத் தருகின்றது என்பதால்தான் அப்படி எழுதினேன். இசுலாமிய ஆண்டு என்று எழுதினால் குழப்பமே இல்லை (கூடுதலாகவும் புரியவும்). --செல்வா 19:39, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply

Badr பற்றி

தொகு

பிற மொழிகளில் Badr என்பதை எப்படி எழுதியுள்ளார்கள் என்னும் பார்வை:

  • bs:Bitka na Bedru
  • cs:Bitva u Badru
  • id:Pertempuran Badar (உயிரொலி இடையே உள்ளதை நோக்கவும்)
  • jv:Perang Badar (உயிரொலி இடையே உள்ளதை நோக்கவும்)
  • ms:Perang Badar (உயிரொலி இடையே உள்ளதை நோக்கவும்)
  • ce:Бадруна гIазот ((உயிரொலி இடையே உள்ளதை நோக்கவும் Бадруна என்பதில் p என்பது ர் )
  • pl:Bitwa pod Badrem (பின்னொட்டாக எம் (-em) என்பது சேர்ந்திருப்பதைப் பாருங்கள்)
  • fi:Badrin taistelu (-in என்னும் பின்னொட்டு இருப்பதைக் காண்க)
  • tt:Бәдер сугышы (Бәдер என்பது பெ'தெர் என்பது போல ஒலிக்கும் - இந்த சிரிலிக் எழுத்து உருசிய மொழிபோல இருந்தால்)
  • tr:Bedir Muharebesi (இங்கும் பெ'டி'ர் என்பது போல இருப்பதைப் பாருங்கள்)
  • uk:Битва при Бадрі(இங்கு கடைசியில் ரி என்று முடிவதையும் பாருங்கள்

ஆகவே தமிழில் வழங்காத -த்ர் என்னும் இரட்டை மெய்யொலிகள் இல்லாமல் எழுதலாம். பதிர், பதுர், பதர் அல்லது வேறு வகைகளில் தமிழில் ஒலிக்க இயலுமாறு எழுதலாம் என்பது என் கருத்து. --செல்வா 17:07, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply

பத்ர் போர் என்று பரவலாக தமிழ் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. பத்ருப் போர் என்றும் எழுதலாம். -- மாஹிர் 18:34, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply
பத்ரு என்பது ஒலிக்கவாவது இயலும் ஒன்று. தமிழில் த்ரு வராது எனினும் அப்படியாவது எழுதலாம். பத்துரு என்று எழுதலாமா? --செல்வா 19:44, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply
பதுருப் போர் என்றே எழுதலாம். எவருக்கும் எதிர்ப்பில்லையென்றால் மாற்றி விடுகிறேன்.--Kanags \உரையாடுக 22:04, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply
எனக்கு பதுருப் போர் என்பது ஏற்புதான் சிறீதரன் கனகு. மற்றவர்களும் இதுபற்றி என்ன சொல்கிறார்கள் என்று அறிந்து மாற்றிவிடுங்கள். முதற்பக்கக் கட்டுரையாக இருப்பதால் விரைவில் மாற்றுவது நல்லது. --செல்வா 02:13, 27 செப்டெம்பர் 2010 (UTC)Reply
பதுருப்போர் சரியாக உள்ளது. -- சுந்தர் \பேச்சு 02:20, 27 செப்டெம்பர் 2010 (UTC)Reply
பதுருப் போர் என்று மாற்றலாம். -- மாஹிர் 06:35, 27 செப்டெம்பர் 2010 (UTC)Reply

சமர்=போர் என மாற்றலாமா

தொகு

சமர் என்பது இலங்கையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை சாதாரண பயனர்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாதது என்று நினைக்கிறேன். அதனால் பொதுவான சொல்லாகிய போர் என்று மாற்றலாமா? -- மாஹிர் 06:35, 27 செப்டெம்பர் 2010 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பதுருப்_போர்&oldid=825339" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பதுருப் போர்" page.