பேச்சு:பராக் ஒபாமா

பராக் ஒபாமா என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பராக் ஒபாமா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இதே பொருளில் இன்னொரு கட்டுரை உள்ளது: காண்க பாரக் ஒபாமா వినోద్  வினோத் 15:31, 6 மார்ச் 2008 (UTC)


ஆ...பல முறை தேடியபின் தான் இந்தக் கட்டுரையையும், கிளின்டன் கட்டுரையையும் எழுதினேன். கூகுளில் கூட தேடியும் பழைய கட்டுரைகள் கிடைக்கவில்லை. வெட்டி வேலை :( சுட்டிக் காட்டியதற்கு நன்றி--Jaekay 15:44, 6 மார்ச் 2008 (UTC)

::நீங்கள் தேடலுக்கு வெளிப்புற தேடுபொறியை பயன்படுத்துகிறீர்களா அல்லது உட்புற விக்கிப்பீடியா தேடலை பயன்படுத்துகிறீர்களா ? వినోద్  வினோத் 15:48, 6 மார்ச் 2008 (UTC)

Here in America I exclusively hear his name pronounced பராக் ஒபாமா... in fact the only place I have heard பாரக் ஒபாமா is on Sun TV News... can I go ahead and change it? Werklorum 21:44, 4 ஜூன் 2008 (UTC)

கட்டாயம் மாற்றுங்கள் வெர்க்லோரும். 'பராக் ஒபாமா என்பதுதான் சரியான ஒலிப்பு. எல்லா இடத்திலும் ஒலிப்புத் துல்லியம் பார்க்கவேண்டாம் எனினும், எங்கெல்லாம் துல்லியம் காக்க முடியுமோ, எங்கெல்லாம் அது தமிழ் மொழி ஒலிப்புக்கு ஊறு விளைவிக்காமல் இருக்குமோ, அங்கெல்லாம், கட்டாயம் தயக்கம் இன்றி ஒலிப்புத்துல்லியம் காப்போம். --செல்வா 22:18, 4 ஜூன் 2008 (UTC)

சம்மேளனம், senate தமிழ்சொற்கள் தேவை

தொகு

சம்மேளனம் - கூட்டமைப்பு?

senate - ஆட்சிப்பேரவை ? (என்று த.இ.ப தளத்தில் இருக்கிறது)--ரவி 21:39, 23 ஆகஸ்ட் 2008 (UTC)

அமெரிக்காவின் செனட் அவை மேலவை என அழைக்கப்படுகிறது. செனட்டரை மேலவை உறுப்பினர் எனலாம்.--Kanags \பேச்சு 23:15, 23 ஆகஸ்ட் 2008 (UTC)

பல்கலைக்கழகங்களின் senate ஆட்சிப்பேரவை என்று அழைக்கப்படும் என்று நினைக்கிறேன். இந்த இடத்தில் கனகு தெரிவித்துள்ளபடி மேலவை எனலாம். சம்மேளனம் - பல குழுக்களின் கூட்டமைப்பு தான். -- சுந்தர் \பேச்சு 09:04, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
Senate என்பது பல சூழல்களில் இடம் பெறும் ஒரு சொல். ஆனால் பொருள் ஏறத்தாழ ஒன்றுதான். சட்டமன்றம், மக்களாட்சி முறைகளில் தொடர்பாக வழங்கும் Senate என்பதை கனகு குறிப்பிட்டது போல மேலவை என்றும் Senator என்பவரை மேலவை உறுப்பினர் என்றும் குறிப்பிடலாம். பல்கலைக்கழகங்களின் senate என்பதனை ஆட்சிப்பேரவை என்று கூறலாம்.. கனடா அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் Board of Governors என்று Senate-உக்கும் மேலான ஓர் ஆட்சிப்பொறுப்பாளர் அவை உண்டு. இதனை ஆட்சியர் ஆயம் = ஆட்சியராயம் எனலாம். அல்லது ஆளுனரவை, அல்லது ஆளுனர்குழு எனலாம். பல்கலைக்கழக செனட்டையும் மேலவை என்று கூறுவதில் ஒரு தவறும் இல்லை. பொதுமுதலீட்டாளர்களால் இயங்கும் இலாப-நோக்குடைய தொழில் நிறுவனங்களிலும் இந்த 'போர்டு ஆ'வ் 'கவர்னர் என்னும் ஆளுநர் குழுக்கள் உண்டு. அடுத்து, சம்மேளனம் என்பது கூட்டம், கூட்டமைப்புதான் .--செல்வா 13:33, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பராக்_ஒபாமா&oldid=4021975" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பராக் ஒபாமா" page.