பேச்சு:பழங்குடிகள்

Add topic
There are no discussions on this page.

மானுடவியல் நோக்கில் Tribes, Indigenous, Native, Aborigines என்று பல்வேறு விதத்தில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுபவர்கள் அனைவரும் ஈடானவர்களா? தமிழில் முதற்குடிகள் (ஆதிவாசிகள்?), பழங்குடிகள், தொல்குடிகள் என்று புழங்கி வரும் வெவ்வேறு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்தலாமா? கவனிக்க: சுந்தர், மயூரநாதன், செல்வா --இரவி (பேச்சு) 05:44, 16 சனவரி 2015 (UTC)

  • Tribe என்பது ஏனைய மூன்றிலிருந்தும் அடிப்படையில் வேறுபட்டது. தமிழில் இது "பழங்குடி" என்று அழைக்கப்படுகிறது. இது, ஒரே பண்பாட்டுக்கு உரியவர்களாகவும், ஒரே மொழியை அல்லது கிளைமொழியைப் பேசுபவர்களாகவும், பொது வரலாற்றைக் கொண்டவர்கள் என்ற உணர்வு கொண்டவர்களாகவும், மையப்படுத்திய அதிகார அமைப்பு இல்லாதவர்களாகவும் உள்ள ஒரு குழுவினரைக் குறிக்கிறது. இக்குழு குலங்களையும் (bands), கால்வழி (lineages) உறவுக் குழுக்களையும் தன்னுள் அடக்கியது.
  • Aborigines குறித்த ஒரு பகுதியில் மிகப் பழைய காலத்திலிருந்தே வாழ்ந்துவரும் மக்களைக் குறிக்கும். தமிழில் "முதுகுடி" என்னும் சொல் இதற்கு ஈடாகப் பயன்படுகிறது.
  • Native people, Indigenous people என்னும் இரண்டும் ஒரு குறித்த இடத்துக்குரிய மக்களைக் குறிக்கிறது. இரண்டும் ஏறத்தாழ ஒரே பொருளையே குறிப்பதாகத் தெரிகிறது. மானிடவியலில் இவற்றுக்குக் குறிப்பான பொருள் இருக்கிறதா தெரியவில்லை. சு. சக்திவேலின் மானிடவியல் கலைச்சொல் அகராதி Natives என்பதற்கு இணையாக "திணைக்குடி" என்னும் சொல்லைத் தருகிறது.
  • பக்தவச்சலபாரதியின் "பண்பாட்டு மானிடவியல்" என்னும் நூலில் வரும் சில சொற் பயன்பாடுகளையும் பார்ப்பது பயனுள்ளது.
    • முதுபழங்குடி (Aboriginal tribe) - தொடக்கம் முதலே ஒரு குறித்த இடத்தில் வாழ்ந்துவரும் பழங்குடியினர்.
    • ஆதிக்குடி/ தொல்பழங்குடி (Primitive tribe) -- பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வேறிடத்தில் இருந்து இடம்பெயர்ந்து குறித்த இடத்தில் வாழ்ந்துவரும் பழங்குடியினர்.

---மயூரநாதன் (பேச்சு) 17:58, 18 சனவரி 2015 (UTC)

அருமையான விளக்கம்,மயூரநாதன். அண்மைக்காலத்தில் tribes என்ற சொல்லுக்கு இன்னொரு பொருளும் சேர்ந்துள்ளது. அது, மரபுத்தொடர்பில்லாத, ஓரிடத்தில் வாழாத நபர்களில் சிலர் ஏதாவதொரு அடிப்படையின்பேரில் ஒன்றாய் உணர்வது. அதற்கும் சொல்லொன்றை உருவாக்கவேண்டும். -- சுந்தர் \பேச்சு 12:17, 20 சனவரி 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பழங்குடிகள்&oldid=1791572" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பழங்குடிகள்" page.