பேச்சு:பாரதிய நீதி விதித்தொகுப்பு
Latest comment: 11 மாதங்களுக்கு முன் by Sree1959 in topic தலைப்பு
கட்டுரையை நீக்க வேண்டாம்
தொகுஇந்த கட்டுரையை மேம்படுத்தவும், ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கோள்களை சேர்க்கவும் நான் உதவமுடியும். இன்று துவங்கி ஒரு வாரத்துக்குள் இந்த பணியை நிறைவேற்ற முயலுகிறேன். நன்றி.
கட்டுரையின் தலைப்பு பரத நீதி தொகுள் என உள்ளது. இவ்வாறு பெயர் சூட்ட நேர்ந்த பின்னணியை தெரிந்துகொள்ள விரும்புகிறேன் @SURESH M KANTHALORE:. ஏனென்றால் பாரதிய நீதிக் குறியீடு என்பது Indian Judicial Code என ஆங்கிலத்திலும் भारतीय न्याय संहिता என இந்தியிலும் பொருள் கொண்டுள்ளது. சட்டத்தின் அதிகாரப்பூர்வ பெயருடன் கூடியவரை அருகாமையிலுள்ள மொழிமாற்றமே சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 09:58, 29 திசம்பர் 2023 (UTC)
- @Sree1959: வணக்கம் ஐயா. பேச்சு:பரத பண்பாட்டு பாதுகாப்பு தொகுள் எனும் பக்கத்தைக் காணுங்கள். எழுப்பிய வினாவிற்கு உரிய பதில் கிடைக்கவில்லை. எனவே, பொருத்தமான தலைப்பிற்கு இக்கட்டுரையை நகர்த்துவதற்குப் பரிந்துரைக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:17, 29 திசம்பர் 2023 (UTC)
- மிகவும் நன்றி ஐயா, தங்கள் பரிந்துரையை ஏற்றுக்கொள்கிறேன். ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 14:56, 29 திசம்பர் 2023 (UTC)
தலைப்பு
தொகுபாரதிய நீதி நெறிமுறை / பாரதிய நீதி விதித்தொகுப்பு
~AntanO4task (பேச்சு) 17:56, 29 திசம்பர் 2023 (UTC)
- தங்கள் யோசனைக்கு மிகவும் நன்றி. நெறிமுறைக்கு Ethics என்ற பொருளும் இருப்பதால், விதித்தொகுப்பு என்ற சொல்லையே பயன்படுத்துகிறேன். இதை பற்றிய கூர்ந்தாராய்தலில் குறியீடு என்ற சொல் மென்பொருள் குறியீட்டு முறைக்கு தான் அதிகமாக பொருந்தும் என்பதை தெரிந்து கொண்டேன். ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 05:12, 30 திசம்பர் 2023 (UTC)