பேச்சு:பாலகுமாரன்
Untitled
தொகுநாவல்கள் பகுதியில் இருக்கும் புருஷ விரதம் தவறான ஒன்று என்று நினைக்கிறேன். புருஷ வதம் என்றொரு நாவலை பாலகுமாரன் எழுதிப் படித்திருக்கிறேன் ஒருவேளை அந்த நாவலைப்பற்றித்தான் எழுத நினைத்தார்களோ?மோகன்தாஸ் 11:17, 5 செப்டெம்பர் 2007 (UTC)
இல்லை மோகன்தாஸ் அவர்களே எழுத்து சித்தர் திரு.பாலகுமாரன் அவர்கள் "புருஷ விரதம்" என்ற புதினத்தை எழுதியுள்ளார்கள். நானும் படித்திருக்கிறேன். அதன் சாரம் இதுதான் "ஒரு வாலிபன் இந்த உலகத்தில் பிறர் போல் அல்லாமல் துறவு வாழ்க்கை மேல் நாட்டம் கொண்டு வாழ்கிறான். இதனால் அவனுக்கு சில வலிமைகள் உண்டாகிறது. இடையில் ஒரு பாதிரியாருக்கே 'தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்' என்ற வசனத்திற்கே ஒரு புது விளக்கம் தருவான். அப்போது பாதிரியார் கோபபட்டு அடிப்பார். அப்போது அவன் பேசும் வார்த்தைகளெல்லாம் படிப்பவர்க்கே ஆச்சர்யம் தருமாறு சித்தர் வடித்திருப்பார். முடிவில் ஒரு பித்து பிடித்த பெண்ணின் பித்தை போக்கி விட்டு இவன் பித்தனாகி விடுவான்"
சித்தரின் எழுத்தில் நான் அதிகம் படித்த நாவல் இதுதான். Shekartirupur[சேகர் திருப்பூர்]
எழுத்து சித்தர் திரு.பாலகுமாரனின் நாவல்கள்
இது மந்தை. மனித மந்தை. எங்கு போகிறோம் என்று தெரியாமல் இரு நூறு ஆடுகளுக்குள் எந்த ஆடு முதல் என்று முட்டிக் கொள்கிற மந்தை. நின்று நிதானித்து, தனித்து, தலை தூக்கி, எந்தத் திசை நோக்கி, எதற்கு என்று இவர்கள் கேட்டதே இல்லை. இவர்கள் இல்லை உலகம்; ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’. உயர்ந்தவர்கள் யாரென்று உயர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். அவர்களால் தான் ஏற்றுக் கொள்ள முடியும். - ‘புருஷ விரதம்’ நாவலில்.
மேற்கோளாக புத்தகம் கிடைக்கும் இடங்களின் முகவரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது கலைக்களஞ்சிய கொள்கைக்கு எதிரானது. எனவே அதனை நீக்கியிருக்கிறேன். --பொன்னிலவன் (பேச்சு) 07:05, 10 மார்ச் 2014 (UTC)