பேச்சு:பால் வழி
பால் வெளியா பால் வழியா, ஆங்கிலத்தில் way என்பது குறிப்பிடத்தக்கது. --Natkeeran 12:39, 8 நவம்பர் 2008 (UTC)
பால் வெளி என்றுதான் அறிந்திருக்கிறேன்.
--Chandravathanaa 15:19, 8 நவம்பர் 2008 (UTC)
பால் வழி தான் பால் வெளி அல்ல. பால் வழி என்பது Milky Way என்பதன் மொழிபெயர்ப்பு. மயூரநாதன் 17:29, 8 நவம்பர் 2008 (UTC)
Way என்பதற்கு நேரடியான தமிழ் மொழியாக்கம் வழி. ஆனால் பால் வெளி என்பது வழக்கத்தில் இருக்கும் சொல். கூகிளில் போட்டு பாத்தால் பொருள் வித்தியாசம் தெரிகிறது. --Natkeeran 21:24, 8 நவம்பர் 2008 (UTC)
வெண்ணிறத்தில் அகலமான பட்டையாக வழியை நினைவு படுத்தியதால் தான் முதலில் இலத்தீன் மொழியில் via lactea (via lactea : via, way + lactea, feminine of lacteus, milky) என்றனர். இதைப் பின்னர் ஆங்கிலத்தில் milkyway என மொழி பெயர்த்தனர். இங்கே "வெளி" என்பதற்கு எந்தப் பொருளும் கிடையாது என்பது எனது கருத்து. தமிழில் மொழிபெயர்த்த சிலர் வான் வெளி தொடர்பான விடயத்தில் "வழி"க்கு என்ன வேலை என்று நினைத்து "வெளி" ஆக்கியிருக்கிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன். நிற்க கீழே இணைப்புகள் சில தந்திருக்கிறேன். பார்க்கவும்.
- இங்கே பார்க்கவும். இது தமிழ் இணையப் பல்கலைக் கழக அகராதியிலிருந்து எடுக்கப்பட்டது என எண்ணுகிறேன். மயூரநாதன் 16:29, 9 நவம்பர் 2008 (UTC)