பேச்சு:பிலிப்பீன்சு பொதுநலவாயம்
ஒரு கட்டுரையில் ஒரு பிழை இரண்டு பிழை இருந்தால் திருத்தலாம். வரிக்கு வரி பிழை இருந்தால் எப்படித் திருத்துவது? கோபி (பேச்சு) 02:43, 1 சனவரி 2015 (UTC)
கட்டுரையில் 14 தொகுப்புக்கள் செய்யப்பட்ட பின்னரும் வரிக்கு வரி பிழைகளே எஞ்சியுள்ளன. நன்றி. கோபி (பேச்சு) 02:54, 1 சனவரி 2015 (UTC)
- கோபி, கட்டுரைகளில் பிழைகள் இருக்கும், புதியவர்களினது என்றால் அதிகம் தான். நீங்கள் எப்பிழைகளைக் குறிக்கிறீர்கள்???, செய்திப்பிழை, சந்திப்பிழை, இலக்கணப் பிழை????, அத்தோடு எடுத்தவுடன் நீக்குக வார்ப்புரு இடவேண்டாம். குறித்தகால வேண்டுகோள் இடுவது நல்லது. புதியவர்களினது எனில் காலம் தாழ்த்தல் நன்று. நீக்கல் வார்ப்ப்ருவை நீக்கியுள்ளேன். எப்பிழை எனக் கூறினால் திருத்தலாம். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 03:40, 1 சனவரி 2015 (UTC)
- கட்டுரையை முழுமையாகத் திருத்தி எழுதியிருக்கிறேன். பயனர்:C.K.MURTHY55 கவனிக்க.--Kanags \உரையாடுக 04:23, 1 சனவரி 2015 (UTC)
ஆதவன், இக்கட்டுரையின் முதல் 19 தொகுப்புக்கள் வரை (அதாவது கனக்சு திருத்தும்வரை) இருந்த உள்ளடக்கம் முழுக்க முழுக்கச் செய்திப் பிழையுடையது ஆகும். அந்தப் பத்தொன்பது தொகுப்புக்களும் பலரது 100 திருத்த எண்ணிக்கை மகிழ்ச்சிக்கு மட்டும் பயன்பட்டிருக்கும். கனக்சு திருத்தியதையும் அதன் முன்னிருந்ததையும் ஒப்பிட்டால் என்ன பிழை என்பது தெரியும். புதியவர் என்பதாலேயே ஒரேயடியாக்கி நீக்கிவிட்டுச் செல்லாமல் வார்ப்புரு இட்டிருந்தேன். நன்றி. கோபி (பேச்சு) 15:26, 1 சனவரி 2015 (UTC)
விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:28, 1 சனவரி 2015 (UTC)
- இருக்கலாம் கோபி, தங்கள் நிலை எனக்குப் புரிகின்றது. கூகிள் தமிழாக்கம் போல் தெரிந்தால் உடன் நீக்கிவிடலாம் தான். மற்றவர்கள் திருத்தும் அளவுக்கெனில் குறித்த கால நிக்கலே சிறந்தது என்பது என் கருத்து. இப்படிப்பட்ட புதிய கட்டுரைகளில் புதியவர்களின் கட்டுரைகளில் கவனம் கொள்ளும் பொது பயனரின் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுதலே சிறந்தது என்பது என்னொரு கருத்து. தாங்கள் மனம்நோதல்கண்டு வருந்துகிறேன். :( :( --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:32, 1 சனவரி 2015 (UTC)
வணக்கம் சிறீகீரன், ஆதவன், தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் ஒருமுறை உருவாக்கப்பட்டால் அதன்பின்னர் மீண்டும் வந்து திருத்தப்படுவது குறைவாகும். ஆதலால் புதிதாக உருவாகும் கட்டுரைகளை உடனுக்குடன் சரிபார்த்து விடுவது மிகவும் நல்லது. இதனைப் பொதுவாகவே சொல்கிறேன். நீங்கள் எல்லோரும் இங்கு மும்முரமாகப் பங்களிப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. நானும் அவ்வப்போதாவது பங்களிப்பேன். நன்றி கோபி (பேச்சு) 15:41, 1 சனவரி 2015 (UTC)
- விருப்பம் :) மகிழ்ச்சி .... --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:50, 1 சனவரி 2015 (UTC)