பூச்சி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
பூச்சி என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


applied mathematics, applied science என்பவற்றில் வரும் appliedக்குத் தமிழில் என்ன? பயன்பாட்டுக் கணக்கு, பயன்பாட்டு அறிவியல்?--ரவி 19:40, 9 மே 2008 (UTC)Reply

applied mathematics =பயன்முக கணிதம், பயன்பாட்டுக் கணிதம்; applied science = பயன்முக அறிவியல் (அதுதான் பொறியியல், மருத்துவம் என பல துறைகளாகக் கிளைத்துள்ளது. மின்னியல் கூட ஒரு காலத்தில் பயன்முக அறிவியலாக, மின் இயற்பியலாக இருந்தது. மின்வேதியியல் electrochemistry என்பது கூட தொழில்சார்ந்த பயன்பாட்டு அறிவியல் துறைதான்). நான் எதனையோ தேடிக்கொண்டிருந்தபொழுது இந்தக் கேள்வி கண்ணில் பட்டது. பொதுவாக பயன்முக-, பயன்பாட்டு-, பயன்வெளி-, பயன்நுட்ப- என்று பலவாறு முன்னொட்டு தந்து குறிக்கலாம். --செல்வா 20:58, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

இந்தக் கட்டுரையில் பல துணைத் தலைப்புக்கள் வந்த பின்னரும் பொருளடக்கம் தானாக வராமல் இருக்கின்றதே. காரணம் என்னவென்று தெரியவில்லை. யாராவது தெரிந்தவர்கள் தவறு ஏதாவது இருப்பின் திருத்தி விடுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 08:44, 29 சனவரி 2014 (UTC)Reply

எனக்கும் அதன் காரணம் தெரியவில்லை--யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:39, 29 சனவரி 2014 (UTC)Reply

Y ஆயிற்று--≈ உழவன் ( கூறுக ) 13:11, 29 சனவரி 2014 (UTC)Reply

பூச்சிகள் பற்றிய தகவல் பிழையானது

தொகு

பூச்சிகளே அதிகளவான தனியன்களையும், அதிக இனங்களையும் உடைய உயிரினங்கள் என்பது தவறானதாகும். இது இவ்வாறு திருத்தப்படல் வேண்டும்: பூச்சிகளே அதிகளவான தனியன்களையும், இனங்களையும் கொண்ட விலங்குகள் ஆகும்

உலகில் பக்டீரியாக்களே அதிகளவான தனியன்களையும் இனங்களையும் உடைய உயிரினங்களாகும். உதாரணத்துக்கு எமது வாயில் உள்ள பக்டீரியாக்களின் எண்ணிக்கை உலகிலுள்ள மனிதர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

பூச்சிகளே மிகப்பெரிய விலங்குக் கூட்டம். ஆனால் மிகப்பெரிய உயிரினக் கூட்டமல்ல. விலங்குக்கும் உயிரினத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டு இத்தவறை விரைவாகத் திருத்தம் செய்யவும். நன்றி.--G.Kiruthikan (பேச்சு) 03:56, 13 பெப்ரவரி 2014 (UTC)

 Y ஆயிற்று--aho;- பேச்சு 04:00, 13 பெப்ரவரி 2014 (UTC)

முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா பக்கத்தில் இன்னமும் மாற்றப்படவில்லையே. --G.Kiruthikan (பேச்சு) 04:05, 13 பெப்ரவரி 2014 (UTC)

பூச்சிகளே அதிகளவான தனியன்களையும், இனங்களையும் கொண்ட விலங்குகள் ஆகும். என இடப்பட்டுள்ளது, சரியாகப் பார்க்கவும்.....--aho;- பேச்சு 04:16, 13 பெப்ரவரி 2014 (UTC)

ஆம் தற்போது மாறி விட்டது. நன்றி.--G.Kiruthikan (பேச்சு) 07:53, 14 பெப்ரவரி 2014 (UTC)

பூச்சிகளின் பட்டியல்

தொகு

இப்பட்டியல் பூச்சி முழுவதையும் உள் வாங்கவில்லை. --AntonTalk 16:05, 20 மே 2014 (UTC)Reply

பட்டியலை மேற்கண்டபடி அமைத்தால், பார்ப்பதற்கு வசதியாக இருக்கும் என்பதால் இப்படி அமைக்கலாமா?--≈ உழவன் ( கூறுக ) 17:09, 20 மே 2014 (UTC)Reply
பூச்சிகளின் முழுமையான ஒரு பட்டியலை உருவாக்க முடியாது என்பதனாலும், இந்தப் பட்டியல் கட்டுரையில் இருப்பது, அதனை ஏனையோர் மேலும் விரிவாக்கம் செய்ய உதவுமென்பதனாலும், பூச்சி கட்டுரையைப் பார்க்க விரும்பும் ஒருவருக்கு அந்தப் பட்டியல் உதவியாக இருக்கக்கூடும் என்று கருதுவதனாலும், இந்தப் பட்டியலை கட்டுரைப் பக்கத்திலும் இடுகின்றேன். நன்றி.--கலை (பேச்சு) 07:51, 17 சூன் 2014 (UTC)Reply
உயிரியல் பெயர்கள் தமிழில் இருப்பது மிகவும் அரிதாகவே உள்ளது. முழுமையற்றதாகக் கூறப்படும் இப்பட்டியலை விரிவாக்குதல் என்பது துறைசார்ந்த அறிஞர்களுக்கேக் கடினப்பணியாகும். கட்டுரை வளர்ப்பு என்பது ஒரே நாளில் நிகழக்கூடியதல்ல. ஒருவர் மட்டுமே செய்யக்கூடியதும் அல்ல. மேற்கூறியப்பட்டியலை கட்டுரைப் பகுதிக்கு மட்டும் நகர்த்துவதால், எவ்வித நோக்க இழப்பும் இருப்பதாக நான் எண்ணவில்லை. எனவே, கட்டுரை பகுதிக்கு நகர்த்தக் கோருகிறேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 08:03, 17 சூன் 2014 (UTC)Reply
  விருப்பம். பூச்சி சிறிதானாலும், அதனைப் பற்றிய கட்டுரை மட்டும் பெருத்துக் கொண்டு போகிறது. இதனைத் தனிப் பட்டியல் கட்டுரையாகவும் ஆக்கலாம்.--Kanags \உரையாடுக 08:35, 17 சூன் 2014 (UTC).Reply

  விருப்பம்--கலை (பேச்சு) 08:47, 17 சூன் 2014 (UTC)Reply

அப்படியானால் பூச்சிகளின் பட்டியலுக்கு ஒரு புதிய கட்டுரையை உருவாக்கிவிட்டு, அந்தக் கட்டுரைக்கு இங்கே இணைப்புக் கொடுக்கலாம். ஆனால் அந்தப் புதிய கட்டுரையும் நீக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவே தோன்றுகின்றது. எனவேதான் நான் அதனைத் தவிர்த்துவிட்டேன் :).--கலை (பேச்சு) 08:47, 17 சூன் 2014 (UTC)Reply
//பூச்சி சிறிதானாலும், அதனைப் பற்றிய கட்டுரை மட்டும் பெருத்துக் கொண்டு போகிறது.// பூச்சி சிறியதுதானே என்று குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். அவைதான் விலங்குகளிலேயே, அதிகளவில் தனியன்களையும், இனங்களையும் கொண்டவையாக இருக்கின்றன. உலகத்தை ஆட்சிசெய்யும் வல்லமை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை :).--கலை (பேச்சு) 09:00, 17 சூன் 2014 (UTC)Reply
  விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:31, 17 சூன் 2014 (UTC)Reply
இதனையும் பாருங்கள்: en:Category:Lists of insects.--Kanags \உரையாடுக 02:38, 21 சூன் 2014 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பூச்சி&oldid=1681708" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பூச்சி" page.