பேச்சு:பூதனஅள்ளி

பூதனகள்ளி என்றிருக்க வேண்டுமா?--பாஹிம் (பேச்சு) 04:20, 6 ஆகத்து 2021 (UTC)Reply

பாஹிம் இந்த ஊர் அரசு ஆவணங்களில் பூதனஹள்ளி என்று உள்ளது. அதன் தமிழ்வடிவமாக பூதனஅள்ளி என்று பயன்பாட்டில் உள்ளது.--அருளரசன் (பேச்சு) 07:03, 6 ஆகத்து 2021 (UTC)Reply

பாஹிம் //கண்டனஹள்ளி, தோமலஹள்ளி, தொன்னேனஹள்ளி, எலுமிச்சனஹள்ளி போன்றவற்றை கெண்டேனஅள்ளி, தோமலஅள்ளி என்றவாறு என்றெழுதாமல் கெண்டனகள்ளி, தோமலகள்ளி, தொன்னேனகள்ளி, எலுமிச்சனகள்ளி என்றெழுதினால் இலக்கணமும் சிதையாது, உச்சரிப்பும் முறையாக வரும். இங்கே சனகன் என்பதில் வரும் ககரத்தின் ஓசையோ மேற்படி பெயர்களுக்கும் கிடைக்கும். அப்பொழுது மூலமொழியின் ஓசையும் பாதுகாக்கப்படும்// என என் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளீர். அங்கு உரையாடுவதைவிட கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உரையாடுதலே பொருத்தமாக இருக்கும் என கருதி இங்கு உரையாடுகிறேன். நான் பயன்படுத்தும் இந்த கிராமப் பெயர்களானது தமிழ்நாடு அரசின் தரவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டு ஊராட்சி கட்டுரைகள், தமிழ்நாட்டு கோயில் கட்டுரைகள், தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதி கட்டுரைகள் போன்ற கட்டுரைகளில் உள்ளவாறே பெயர்களை பயன்படுத்தி வருகிறேன். அதற்கு மாறாக எழுத்துகளை மாற்றி எழுதினால் அவை வேறு கிராமத்தைக் குறிக்கக்கூடியதாக புரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டு குழப்பம் ஏற்படும் என்று கருதுகிறேன். இதற்கு ஒரு தீர்வாக பூதனஅள்ளி என்று உள்ள பெயரை பூதன அள்ளி என்று பிரித்து எழுதலாம் என்று நினைக்கிறேன். நன்றி--அருளரசன் (பேச்சு) 12:20, 13 அக்டோபர் 2021 (UTC)Reply

அரசாங்க ஆவணங்களில் ஹ எழுத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்களா அல்லது அகரத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்களா?--பாஹிம் (பேச்சு) 03:47, 15 அக்டோபர் 2021 (UTC)Reply

அரசாங்க ஆவனங்களில் ஹ எழுத்து அல்லது அகரம் என இரண்டையும் சீர்மையின்றி பயன்படுத்துகிறார்கள்.--அருளரசன் (பேச்சு) 09:02, 15 அக்டோபர் 2021 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பூதனஅள்ளி&oldid=3298610" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பூதனஅள்ளி" page.