பேச்சு:பெப்ரவரி
பெப்ரவரி என்பதை விட பிப்ரவரி என்பதே அதிகமாக புழக்கத்தில் உள்ளது என நினைக்கிறேன்.
|
வினோத் 11:55, 2 ஜனவரி 2008 (UTC)
பிப்ரவரி தான் தமிழக வழக்கு என்று உறுதியாக சொல்லுமளவுக்கு எனக்குத் தெரியவில்லை. பிப்ரவரி, பெப்ரவரி எப்படி இருந்தாலும் சரி தான் :) --ரவி 17:07, 2 ஜனவரி 2008 (UTC)
மொழி முதல், மொழியீறு மற்றும் மெய்ம்மயக்க இலக்கணம்
தொகுhttps://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D#%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D Thanighaivel (பேச்சு) 05:00, 23 ஆகத்து 2020 (UTC)
தலைப்பு
தொகு@செல்வா:, @Kanags:, @தகவலுழவன்:, பெப்புருவரி அல்லது பெப்பிரவரி என்று தமிழ் முறைப்படுத்தப்பட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 06:06, 21 சூலை 2021 (UTC)
- நாம் முக்கியமான மாதங்களின் பெயர்களை சரியாக எழுதாமல் இருந்துவிட்டோம். மாற்றம் பலருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். சனவரி, சூன், சூலை ஆகத்து, திசம்பர் ஆகிய மாதப்பெயர்களைத் தக்க காரணங்களை முன் வைத்து நடைமுறைப்படுத்தினோம். இப்பொழுது பலரும் ஆளத்தொடங்கியுள்ளார்கள். ஆனால் இன்னமும் பெப்ரவரி, செப்டம்பர், அக்டோபர், ஏப்ரல் ஆகியவை பிழையாக உள்ளன. சரியான ஒரு முறைக்கு மாற்ற நான் உடன்படுகின்றேன். சரியான ஒன்றைச் செய்ய முற்பட்டாலும் எதிர்ப்புகளைத்தாண்டி செய்ய முயலலாம். பெப்பிருவரி (அல்லது பிப்பிரவரி), மார்ச்சு, ஏப்பிரல், செட்டம்பர், அட்டோபர் என மாற்றலாம். இதுவொரு பரிந்துரையே. வேறு சரியான தீர்வுகள் இருந்தாலும் ஏற்பே.--செல்வா (பேச்சு) 20:10, 22 சூலை 2021 (UTC)
இலங்கை அரசாங்கம் யனவரி, பெப்புருவரி, மார்ச்சு, ஏப்பிரல், மே, யூன், யூலை, ஓகத்து, செத்தெம்பர், ஒற்றோபர், நவம்பர், திசெம்பர் என்றே வர்த்தமானியில் எழுதுகிறது. நெடுங்காலமாக இந்த வழக்கம் இருந்து வருகிறது.--பாஹிம் (பேச்சு) 04:29, 23 சூலை 2021 (UTC)
பெப்ரவரி தவறு
தொகுதமிழில் பெப்ரவரி என்று எழுதுவது தவறு
இலக்கணப் பிழையை நீக்கி தலைப்பைப் பெப்பிரவரி அல்லது பிப்பிரவரி என்று மாற்ற பரிந்துரைக்கிறேன்
நன்றி தணிகைவேல் மாரியாயி (பேச்சு) 23:25, 20 செப்டம்பர் 2022 (UTC)