பேச்சு:பெரிய ஆட்ரான் மோதுவி

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Fahimrazick


collider - மோதி. சரியான சொல்லா?--Kanags \பேச்சு 12:14, 10 செப்டெம்பர் 2008 (UTC)Reply

கார்ட்றோன் ? --Natkeeran 15:24, 10 செப்டெம்பர் 2008 (UTC)Reply

ஆட்ரன் :)--சிவக்குமார் \பேச்சு 16:52, 10 செப்டெம்பர் 2008 (UTC)Reply
Hadron என்பதை கடுரான் எனலாம் :) ஆனால் வலிமி (< வலிமை) என்பது சரியாக இருக்கும். ஆங்கில விக்கியில்,"In particle physics, a hadron (pronounced /ˈhæːdɹɒn/, from the Greek: ἁδρός, hadrós, "stout, thick") listen (help·info) (.ogg format) is a bound state of quarks. Hadrons are held together by the strong force, similar to how atoms are held together by the electromagnetic force. There are two subsets of hadrons; baryons and mesons. Of which the most well known baryons are protons and neutrons." (அழுத்தம் இட்டுக் காட்டியிருப்பது நான்). பாரியான் (baryon) என்பதை பாரம் மிக்கது என்னும் பொருளில் பாரியான் என்றே ஆளலாம். மேசான் என்பதை இடைனி அல்லது இடைமி எனலாம் (ஆங்கில விக்கியில், மேசான் கட்டுரையில், "In 1949 Hideki Yukawa was awarded the Nobel Prize in Physics for predicting the existence of the meson. He called the particle the meson, from mesos, Greek for intermediate, because its mass was between that of the electron and proton. He had originally named it the 'mesotron',.." கொடுத்துள்ளதால். இடைமி அல்லது இடைனி எனலாம் (1968-1970 காலப்பகுதியில் பை-மேசான் என்பதை நான் அணுக்கருவில் உள்ளே இருக்கும் ஒட்டுமின்னி என்று பெயர் சூட்டி ஒரு சிறு கட்டுரையை கிண்டி பொறியியல் கல்லூரிச் செய்தித்தாளில் எழுதினேன்). இந்த பை-மேசான் இன்று பையான் (pion) என்று வழங்கப்படுகின்றது. இவை பற்றியெல்லாம் எல்லோருக்கும் விளங்குமாறு விரிவாக எழுத வேண்டும். எனவே பெரும் வலிமி மோதி எனலாம். (மோதுவிக்கும் பெரும் எந்திரம் என்பதால் மோதுவி எனலாமோ என்று நினைக்கிறேன். மோதி என்பது சுருக்கமாக உள்ளது சரியான சொல்லாட்சியா என்று தெரியவில்லை. வாருவதை வாரி (வாரி =துடைப்பம்), என்பது போல மோதுவதை மோதி என்று கூறலாம் என்றுதான் நினைக்கிறேன். மாறு-மாறி என்கிறோம். ஆனால் மோது என்பது தற்செயலாய் நிகழ்வது போல் உணர்கிறோம். காட்டு என்னும் சொல் காட்டி என்று மாறுவது விளங்குகின்றது, ஆனால் காண் என்பது காணி என்று ஆகாது (வேறுபொருள் தரலாம்). மோதுவி என்னும் சொல் சரியாக இருக்கும். பெரிய வலிமி மோதுவி எனலாமோ??--செல்வா 13:47, 13 அக்டோபர் 2008 (UTC) வலிமி என்பதற்கு மாறாக வன்மி என்றும் கூறலாம்.--செல்வா 13:51, 13 அக்டோபர் 2008 (UTC)Reply
பெரிய வலிமி மோதுவி என்பது நன்றாக உள்ளது. -- சுந்தர் \பேச்சு 15:30, 13 அக்டோபர் 2008 (UTC)Reply

அப்படியானால் அனைத்து வேதியியல் பொருட்களையும் தமிழ்ப்படுத்துவோமா?--Kanags \பேச்சு 20:18, 13 அக்டோபர் 2008 (UTC)Reply

Resistor என்பதை தமிழில் தடை அல்லது தடையம் என்று சொல்வது விளக்கம் தருகிறது. ஹாட்ரான் அப்படி ஒரூ விளக்க பெயரா என்று தெரியவில்லை. அனைத்து வேதியியல் பொருட்களையும் தமிழ்படுத்துவது அவசியமற்றது. தமிழ்ப் பெயர் இருப்பவைகளை தமிழாகவே வைத்திருக்கலாம். மற்றயவையை அப்படியே ஏற்பதுவதே நன்று. அதேபோல உயினங்களில் அறிவியல் பெயரை தமிழ் படுத்த வேண்டிய அவசியம் இல்லை. --Natkeeran 23:43, 13 அக்டோபர் 2008 (UTC)Reply

Hadron என்பது வேதியியல் பொருள் இல்லை. அணுவின் உட்கூறுத் துகள்கள் சிலவற்றின் பொதுப்பெயர். ஹா'ட்ரான் என்று அழைப்பதில் எனக்கும் உடன்பாடுதான். லெப்டான், ஹா'ட்ரான், மேசான், மியூவான், பாரியான் ஆகிய அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். ஹா'ட்ரான் என்பது விளக்கப் பெயர்தான். குவார்க் என்பது விளக்கப்பெயர் அல்ல, ஆனால், ஹா'ட்ரான், 'பாரியான் ஆகியவை விளக்கப்பெயர்களே. மேசான் என்பது கூட விளக்கப்பெயர்தான். பையான், மியூவான் ஆகியன விளக்கப்பெயர் அல்ல. 'ஆ'ட்ரானை வலிமி என்று சொன்னால் இன்னும் உடனே விளங்கும். இத்தாலிய மொழியிலே Adrone என்று அழைக்கிறார்கள். நாம் ஆட்ரான் என்றும் எழுதலாம். தமிழைப்போல் செம்மொழியாகிய கிரேக்க மொழியில் Αδρόνιο (ஆ'ட்ரொனியொ) என்று எழுதுகிறார்கள். எனவே ஆட்ரான் என்று கூறலாம். வலிமி என்று கூடவே அழைத்து வரலாம் தவறில்லை. "ஆட்ரானைத் தமிழில் வலிமி என்றும் அழைக்கிறோம் " என்று கூறலாம். --செல்வா 21:05, 14 அக்டோபர் 2008 (UTC)Reply

விளக்கப்பெயராக இருப்பின் மொழிபெயர்த்துவிட்டு ஆட்ரான், ஹாட்ரான் ஆகியவற்றை உள்ளே கட்டுரையில் முதல் பத்தியில் தரலாம். மற்ற பயனர்கள் வலிமியை முதன்மைப்படுத்துவதை விரும்பாவிடில் ஆட்ரான் என்பதை முதன்மைப்படுத்திவிட்டு மற்ற இரு சொற்களையும் கட்டுரையின் உள்ளே தரலாம். -- சுந்தர் \பேச்சு 05:45, 15 அக்டோபர் 2008 (UTC)Reply

"ஆட்ரானைத் தமிழில் வலிமி என்றும் அழைக்கிறோம்" என்று கூறலாம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. பதிலாக "ஆட்ரானுக்குத் தமிழில் வலிமை அல்லது வலிமி எனப் பொருள்படும்" எனக் குறிப்பிடலாம்.--Kanags \பேச்சு 12:04, 15 அக்டோபர் 2008 (UTC)Reply

எந்த இலக்கணப்படி ஆட்ரான் என்றெழுதப்பட்டிருக்கிறது என்பது தெரியவில்லை. மொழிபெயர்க்காமல் தமிழ் முறைப்படி எழுதினால் அதிரோன் என்று வரும். அடுத்தது, எல்லா வேதியியற் சொற்களையும் பதங்களையும் தமிழ்ப்படுத்துவதே முறை.--பாஹிம் (பேச்சு) 01:10, 2 சூன் 2023 (UTC)Reply

நீக்கப்பட்ட பகுதி

தொகு

இந்த அணுத்துகள்களின் மோதல்கள் சூரியன் உட்பட அனைத்தையும் அகத்துறிஞ்சிக்கொள்ளும் வல்லமை கொண்ட ஒரு கரும் சூனிய வலயத்தை உருவாக்கக்கூடும் என்றும் அதனால் உலகம் அழியக்கூடும் என்றும் சில வட்டாரங்களிலிருந்து கடுமையான எச்சரிக்கைகள் வந்துள்ளன.

மேலுள்ள சொற்றொடரை நீக்கியிள்ளேன். அதில் உண்மை இல்லை என்று கொலம்பியா பல்கலைக்கழ அறிவியலாளர்கள் முதல் பலர் கூறியுள்ளார்கள். --செல்வா 03:39, 17 அக்டோபர் 2008 (UTC)Reply

Return to "பெரிய ஆட்ரான் மோதுவி" page.