பேச்சு:பைபெரோசீன்

Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by கி.மூர்த்தி

ஆங்கிலத்தில் di-, bi, tri- என வருமிடங்களில் அவற்றை அப்படியே பயன்படுத்துவதே நல்லது என்று நம்மில் பலரும் கருதுகின்றோம் கார்பன்-டை-ஆக்சைடு முதலான் பெயர்களை அப்படியே பயன்படுத்துவது நல்லது என்றும் கூறுகின்றோம். சில இடங்களில் குழப்பம் ஏற்படுத்தலாம்."பை" என்பது pi ஆ அல்லது bi என்றா என்று குழப்பம் வரலாம். இப்படியான இடங்கள்ல் பை'-பெரோசீன் என எழுதலாம் என்பது என் கருத்து. தமிழில் -ர்ரோ- என வருதல் நெருடலாக உள்ளது. பெரோசீன் என எழுதுவதே நல்லது. di-, bi, tri- என வருமிடங்களில் இடைக்கோடிட்டு எழுதுவதும் தமிழில் முறை என்பதாக வகுப்பதும் நல்லது. இன்னொரு மாற்று முறையாக இரு-பெரோசீன் என்று எழுதலாம். வேதிப்பொருள்களில் penta, hexa, முதலான கிரேக்க முன்னொட்டுகள் வருகின்றன. இவற்றை மாற்றி எழுதலாம். Sulfer hexafluoride SF
6
என்பதை இத்தாலிய மொழியில் Esafluoruro di zolfo எங்கின்றார்கள். நாம் கந்தக அறுபுளூரைடு என அழைக்கலாம். அல்லது கந்தக ஃகெக்சா புளூரைடு என்றும் சொல்லலாம். @கி.மூர்த்தி: --செல்வா (பேச்சு) 22:21, 19 சூன் 2018 (UTC)Reply

அய்யா வணக்கம்.

கட்டுரையை பைபெரோசீன் என்ற தலைப்புக்கு நகர்த்தி விடுகின்றேன். மயக்கமும் தயக்கமும் தருகின்ற di-, bi, tri- போன்ற பல அறிவியல் சொற்கள் ஒலிபெயர்ப்பு செய்வதில் சிரமத்தை உண்டாக்குகின்றன என்பது அசைக்க முடியாத உண்மை. நிறைய சந்தர்ப்பங்களில் நெருடலுடன்தான் நானும் எழுதியிருக்கிறேன். தொடக்கத்தில் நான்கெத்தில்வெள்ளீயம் என தமிழாக்கம் செய்து எழுதிவந்த நான் தற்போது ஐயுபிஏசியை மையமாகக் கொண்டு பெயர்ச்சொற்களை அப்படியே ஒலிபெயர்ப்பு செய்து டெட்ராயெத்தில்வெள்ளீயம் என்று எழுதுமளவிற்கு மாறிவிட்டேன். அனைவருக்கும் ஏற்ற பொதுவான கலைச்சொற்கள் அங்கீகரிக்கப்படாமல் இருப்பது இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். தயங்கி எழுதாமல் இருப்பதைக் காட்டிலும் நெருடலுடனாவது எழுதி உள்ளடக்கத்தை அதிகரித்தால் அதிலிருந்து உரிய இலக்கணம் வகுக்கமுடியும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து எழுதுகிறேன். ஒருவேளை பொதுக் கலைச்சொல்லாக்கம் எப்போதாவது அங்கீகரிக்கப்பட்டால் அவற்றை மாற்றிக் கொள்ள முடியும் என நினைக்கிறேன்.

தங்களைப் போன்ற வல்லுநர்கள் அவ்வப்போது அறிவுரை கூறி வழிநடத்துங்கள். நன்றி-@செல்வா:-கி.மூர்த்தி (பேச்சு) 02:32, 20 சூன் 2018 (UTC)Reply

நன்றி. முயல்வேன் @கி.மூர்த்தி:
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பைபெரோசீன்&oldid=2549388" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பைபெரோசீன்" page.