நான்கெத்தில்வெள்ளீயம்

நான்கெத்தில்வெள்ளீயம் (Tetraethyltin) என்பது C8H20Sn என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டெட்ராயெத்தில்டின் என்ற பெயராலும் இக்கரிமவெள்ளீயச் சேர்மத்தை அழைப்பார்கள். CH3CH2)4Sn என்ற மூலக்கூற்று கட்டமைப்பை நான்கெத்தில்வெள்ளீயம் கொண்டுள்ளது. அதாவது ஒரு வெள்ளீய அணுவுடன் நான்கு எத்தில் குழுக்கள் இணைந்துள்ளன. வெள்ளீயத்தின் கரிம சேர்மங்களில் இச்சேர்மம் ஒரு முக்கியமான சேர்மமாகும். பெரும்பாலும் டெட் என்ற சுருக்கக் குறியீட்டால் குறிக்கப்படுகிறது.

நான்கெத்தில்வெள்ளீயம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெட்ராயெத்தில்டின்
முறையான ஐயூபிஏசி பெயர்
<!—டெட்ராயெத்தில்சிடானேன் அல்லது டெட்ராயெத்தில்டின்
வேறு பெயர்கள்
டெட்ராயெத்தில் டின்
இனங்காட்டிகள்
597-64-8 N
Abbreviations TET
ChemSpider 11212 Y
EC number 209-906-2
InChI
  • InChI=1S/4C2H5.Sn/c4*1-2;/h4*1H2,2H3; Y
    Key: RWWNQEOPUOCKGR-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த டெட்ராயெத்தில்டின்
பப்கெம் 11704
  • CC[Sn](CC)(CC)CC
UN number 3384
பண்புகள்
C8H20Sn
வாய்ப்பாட்டு எடை 234.96 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.187 கிராம் செ.மீ−3
உருகுநிலை −112 °C (−170 °F; 161 K)
கொதிநிலை 181 °C (358 °F; 454 K)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Very Toxic T+சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது N
R-சொற்றொடர்கள் R26/27/28 R50/53
S-சொற்றொடர்கள் S26, S27, S28, S45, S60, S61
தீப்பற்றும் வெப்பநிலை 53 °C (127 °F; 326 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

நான்கெத்தில்வெள்ளீயம் தீப்பிடித்து எரியக்கூடிய நிறமற்ற ஒரு நீர்மமாகும். டை எத்தில் ஈதரில் கரையும் இது நீரில் கரைவதில்லை. -112° செல்சியசு வெப்பநிலையில் உறையும் இச்சேர்மம் 181 ° செல்சியசு வெப்பநிலையில் கொதிக்கிறது[1][2]. மின்னணு தொழிற்சாலையில் நான்கெத்தில்வெள்ளீயம் பயன்படுத்தப்படுகிறது.

எத்தில்மக்னீசியம்புரோமைடுடன் வெள்ளீய(IV) குளோரைடைச்:[1] சேர்த்து வினைபுரியச் செய்தால் நான்கெத்தில்வெள்ளீயம் உருவாகிறது.

SnCl4 + 4 (C2H5)MgBr → (CH3CH2)4Sn + 4 MgBrCl

டெட்ரா-என்-புரோப்பைல்வெள்ளீயத்தையும் டெட்ரா-என்-பியூட்டைல்வெள்ளீயத்தையும் இதே முறையில் தயாரிக்க முடியும்[1].

நான்கெத்தில்வெள்ளீயம் உடலுக்குள் அதிக நச்சுத்தன்மை மிக்க மூயெத்தில்வெள்ளீயமாக மாற்றப்படுகிறது[3].

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 G. J. M. Van Der Kerk and J. G. A. Luijten (1956), "Tetraethyltin". Organic Syntheses, volume 36, page 86; Coll. Vol. 4, p.881 (1963)
  2. SAFC corp, tetraethyltin catalog page. Accessed on 2011-01-18.
  3. Schmid, D. O.; Cwik, S. (1975). "R receptors on lymphocytes of sheep". Animal Blood Groups and Biochemical Genetics 6 (1): 61–62. doi:10.1111/j.1365-2052.1975.tb01351.x. பப்மெட்:1200418. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்கெத்தில்வெள்ளீயம்&oldid=3942453" இலிருந்து மீள்விக்கப்பட்டது