பேச்சு:பொய்க் கருப்பம்

மருத்துவம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் மருத்துவம் என்னும் திட்டத்துள் பொய்க் கருப்பம் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பெரிதும் அறியப்படாதத் தகவல்களைக் கொண்ட நல்ல கட்டுரை. தொடங்கி எழுதிய மரு.கார்த்திக்கும், வளர்த்தெடுத்த கலைக்கும் பாராட்டுகள்.

நான் முன்னர் எழுதிய பரிவு மசக்கை கட்டுரையையும் பார்வையிட்டுத் தேவைப்படும் மாற்றங்களைச் செய்ய வேண்டுகிறேன்.

தலைப்பில் கர்ப்பம் என்று இருப்பது தமிழில் வழங்கி வராத மெய்யொலித் தொடரைக் கொண்டுள்ளதால் பொய் கருப்பம் என்றோ போலிச்சினை என்றோ வேறு பெயரிலோ குறிக்கலாமா? இந்தத் தலைப்பில் இருந்து மாற்றுவழியும் தந்துவிடலாம். மற்ற பயனர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 15:23, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

போலிச்சினை என்பது நல்ல தலைப்பாக இருக்கலாம் என்பது எனது கருத்து.--கலை 21:52, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply
கருத்துக்கு நன்றி, கலை. வேறு யாரும் மறுப்புத் தெரிவிக்காவிட்டால் நகர்த்தலாம். -- சுந்தர் \பேச்சு 02:56, 6 செப்டெம்பர் 2010 (UTC)Reply
சினை என்பது பொதுவாக மாந்தர்களுக்குப் பயன்படுத்துவதில்லை. எனவே கருவுற்ற தோற்றம் அல்லது கருவுற்ற போலித்தோற்றம் எனலாம். கருப்பம் என்றும் சொல்லலாம் அது நல்ல தமிழ்ச்சொல்லே. கரு கருப்பம். கருவுற்றல் போன்ற சொல்லே.--செல்வா 03:41, 6 செப்டெம்பர் 2010 (UTC)Reply
அப்படியென்றால் பொய்க் கருப்பம் இப்போதுள்ள தலைப்புக்கு நெருக்கமாக உள்ளது. இல்லையெனில் கருவுற்ற போலித்தோற்றம் எனலாம். கார்த்தியும் கலையும் என்ன கருதுகிறார்கள் எனப் பார்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 04:31, 6 செப்டெம்பர் 2010 (UTC)Reply
போலிச் சினைகொள்ளல் என்ற பதமே பொதுவாக முயல்களில் காணப்படும் psuedo pregnancy நிலையை குறிப்பிட இலங்கையில் (விவசாயத்துறை பாடத்திட்டத்தில்) பயன்பாட்டில் உள்ளது.--சஞ்சீவி சிவகுமார் 06:42, 6 செப்டெம்பர் 2010 (UTC)Reply
மனிதர்களில் சினைகொள்ளல் என்ற பதம் பயன்படுத்தப்படுவதில்லை என்றால், கருவுற்ற போலித்தோற்றம் என்ற தலைப்பைக் கொடுக்கலாம். அந்த தலைப்பு மிகவும் பொருத்தமாகத் தோன்றுகின்றது. பொய்க் கருப்பம் என்ற சொல்லையும் கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கலாம். --கலை 08:21, 6 செப்டெம்பர் 2010 (UTC)Reply
மனிதன் உண்பான். விலங்கு தின்னும். இதனாற்றான் வள்ளுவரும் ஊனுண்ணலைத் “தினற்பொருட்டால்“ என்றார். அது போல மானிடப் பெண் கருவுறுவாள்; பெண் முயல் சினையுறும் என்று வழக்கத்தில் வழங்கி வருகிறது. மருத்துவமனையில் எந்தப் பெண்ணிடமும் ”அம்மா நீங்கள் சினையுற்றிருக்கிறீர்ள்” என்று சொல்லிவிட முடியாது. சூலுறுதல், கருவுறுதல், சினையுறுதல் என்பன எல்லாம் ஒரே பொருளை உணர்த்தும் பல சொற்களே. (சூலி - தாய்) ஆனால் ஒவ்வொரு சொல்லையும் ஒவ்வொரு துறையினர் தமக்குரித்தாக்கிக் கொண்டு விட்டனர். சூல் என்பதைத் தாவரவியலாளரும், சினை என்பதை விலங்கியலாளரும் உரித்தாக்கிக் கொள்ள, கருப்பம்/கருவுற்றிருத்தல்/மாசமாய் இருத்தல்/(கரு)உண்டாகியிருத்தல் என்பன போன்ற சொற்கள் மருத்துவத்துறையில் வழங்கி வருகின்றன. எனவே பொய்க்கருப்பம் என்பது சரியாகத் தோன்றுகிறது. மற்றவர்கள் கருத்தையும் கேட்டுவிட்டு நகர்த்தலாம். (விக்சனரியைப் பார்த்துத் தான் நான் துறை சார் கட்டுரைகளுக்குத் தலைப்பு முடிவு செய்வேன். விக்சனரியிலும் கர்ப்பம் என உள்ளது. அதையும் மாற்றி விடலாமா ?)--பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 08:22, 6 செப்டெம்பர் 2010 (UTC)Reply
கருத்துக்கு நன்றி கலை, கார்த்தி. கூர்ப்பு என்ற சொல்லில் இருப்பது போல ர்ப் மெய்யொலித் தொடர் தமிழில் இயல்பாக வரும் என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டேன். அதனால்தான் இந்த மாற்றுப் பரிந்துரைகளே தேவைப்பட்டன. அதனால் கர்ப்பம் என்ற சொல்லிலும் தவறில்லை. இருந்தாலும் கருப்பம் தமிழ் வேர்ச்சொல்வழி வந்தது என்பதால் அதை முதன்மைப்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 09:17, 6 செப்டெம்பர் 2010 (UTC)Reply
மீண்டும் ஒரு திருத்தம். ர்ப் மெய்யொலிக்கூட்டம் தமிழில் வழங்கி வந்தாலும் ர் ஒற்றுக்கு முன்னால் குறில் வருவதில்லை. அவ்வாறு வருமிடத்தில் அவ்வொற்று உகரம் பெற்று அருச்சுணன் என்பது போல வரும். ஆகையால், பொய்க் கருப்பம் என்ற முந்தைய பரிந்துரையைச் செயல்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 03:43, 21 செப்டெம்பர் 2010 (UTC)Reply
கட்டுரையைத் தொடங்கிய எழுதிய மரு.கார்த்திக்கும் 'பொய்க் கருப்பம்' என்ற தலைப்புக்கு ஒத்துக் கொண்டிருப்பதால் அப்படியே மாற்றிவிடலாம்.--கலை 10:39, 21 செப்டெம்பர் 2010 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பொய்க்_கருப்பம்&oldid=1060381" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பொய்க் கருப்பம்" page.