பேச்சு:மக்கள் தொலைக்காட்சி
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Natkeeran in topic Untitled
Untitled
தொகுஇக்கட்டுரை விளம்பரம் போன்றுள்ளது, ஆதாரமின்றி தேவையற்ற தகவல்களை உள்ளடக்கியுள்ளது. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:54, 9 மே 2012 (UTC)
- தமிழ்நாட்டிலுள்ள தமிழ்த் தொலைக்காட்சிகளில் பெரும்பான்மையான தொலைக்காட்சிகளில் ஆங்கிலக் கலப்புடன் கூடிய தமிழ் உரையாடல்களையும், நிகழ்வுகளையும் அமைத்துத் தமிழைப் படாதபாடு படுத்துகிறார்கள். மக்கள் தொலைக்காட்சி ஒன்றில்தான் தமிழில் உரையாடல், தமிழ் வளர்ச்சிக்கான நிகழ்வுகள் சில உள்ளன. எனவே சில தகவல்கள் விளம்பரம் போல் தோன்றினாலும் தமிழுக்கான இத்தொலைக்காட்சி குறித்த தகவல்கள் நேரடி விளம்பரமாக இல்லாதிருப்பதால் இருக்கட்டும். தேவையற்ற தகவல்கள் - என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று குறிப்பிடுங்கள். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:27, 9 மே 2012 (UTC)
- "தேவையற்ற தகவல்கள்" இல்லை. ஆனால் மேற்கோள்கள் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாமனாதே. "சமுதாய உணர்வும் கொண்ட நிகழ்ச்சிகளைத் தமிழ் மக்களுக்கு வழங்குவதை" என்பது அவர்களின் பணி இலக்காக இருப்பின் அதற்கான ஆவணங்களில் இருந்து மேற்கோளைச் சேர்க்கலாம். பிற கூற்றுக்களும் அவர்களின் கொள்கையாக இருப்பின் அதற்கான மேற்கோள்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறுவது சரியானதே. அதே வேளை, இதை நிலைப்பாட்டை பிற தொலைக்காட்சிகள் பற்றிய கட்டுரைகளிலும் கடைப்பிடித்தல் வேண்டும். --Natkeeran (பேச்சு) 20:57, 9 மே 2012 (UTC) விருப்பம் -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:18, 10 மே 2012 (UTC)