பேச்சு:மங்கல லட்சுமி (திரைப்படம்)

மங்கல லட்சுமி (திரைப்படம்) என்னும் கட்டுரை தமிழ்த் திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்த் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு

தொகு

@Parvathisri: மங்கல லட்சுமியை மங்கள லட்சுமியாக மாற்றியிருக்கிறீர்கள். மங்கள லட்சுமி, மங்கல லட்சுமி, மங்கல லெட்சுமி - இவற்றில் எது சரியான தலைப்பு. மீண்டும் உறுதிப்படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 21:57, 18 அக்டோபர் 2024 (UTC)Reply

"சாதனைப் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு"என்ற மேற்கோள் சுட்டப்படும் நூலில் மங்கள லட்சுமி என்றே உள்ளது எனவே அதை மாற்றியுள்ளேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:27, 19 அக்டோபர் 2024 (UTC)Reply
@Parvathisri: ஒரேயொரு அச்சுப் புத்தகத்தை மட்டும் மேற்கோளாகக் கொண்டு தலைப்பை மாற்றுவது உகந்ததல்ல. புத்தகத்தில் இது அச்சுப்பிழையாக இருந்திருக்கலாம். மங்கல லட்சுமி உகந்த பெயராக இருக்கவே வாய்ப்புண்டு. மேலும் ஆராய வேண்டும். @Uksharma3:--Kanags \உரையாடுக 21:16, 19 அக்டோபர் 2024 (UTC)Reply
திரைப்பட ஆய்வாளர் திருநின்றவூர் சந்தானகோபாலன் அவர்கள் பாட்டுப் புத்தகத்தில் மங்கல லட்சுமி என்றே திரைப்படத்தின் பெயர் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். (அவரிடமிருந்து பிரதி பெற முடியாது.) திரைப்படத்திலும் அவ்வாறே தலைப்பு காண்பிக்கப்பட்டதாக அவர் கூறினார். UKSharma3 உரையாடல் 13:57, 28 நவம்பர் 2024 (UTC)Reply

"@Uksharma3: மிக்க நன்றி. தலைப்பை மாற்றி விடுகிறேன். @Parvathisri:.--Kanags \உரையாடுக 04:09, 29 நவம்பர் 2024 (UTC)Reply

வணக்கம்.பாட்டுப்புத்தகம் உரிய சான்றாக எடுத்துக்கொள்ளலாமா? பிலிம் நியூஸ் ஆனந்தன் புத்தகத்தில் கூட நிறைய பிழைகளைக் கண்டேன். அத்திரைப்படச் சுட்டியைத் தந்தால் சரியான தலைப்பை உறுதிப்படுத்தி மாற்றிவிடலாம. பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:45, 3 திசம்பர் 2024 (UTC)Reply
பிலிம் நியூஸ் ஆனந்தன் 1960 வரை களத்தில் நேரடியாக பணியாற்றியவர். அக்கால தகவல்களில் பிழைகள் இருந்ததாக நான் அறியவில்லை. 60 க்குப் பின் தகவல் பிழைகள் உள்ளன. UKSharma3 உரையாடல் 09:13, 11 திசம்பர் 2024 (UTC)Reply
பெரும்பாலான வலைப்பக்கங்களில் 'மங்கல லட்சுமி' என்றே குறிப்பிட்டுள்ளார்கள். பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:10, 3 திசம்பர் 2024 (UTC)Reply
//பாட்டுப்புத்தகம் உரிய சான்றாக எடுத்துக்கொள்ளலாமா?// ஆம், பாட்டுப் புத்தகங்கள் திரைப்படம் வெளிவந்த ஒரே காலப்பகுதியில் அச்சிடப்பட்டவை. //அத்திரைப்படச் சுட்டியைத் தந்தால்// படம் யூடியூபில் இருக்கிறதாகத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 05:19, 5 திசம்பர் 2024 (UTC)Reply
திரைப்படத்திலும் மங்கல லட்சுமி என்றே காண்பிக்கப்படதாக திரு. சந்தானகிருஷ்ணன் கூறினார். வெளியான அநேகமாக எல்லாத் திரைபடங்களையும் அவர் பார்த்துள்ளார். மிகப்பெரிய திரைப்படப் பாடல்கள், நூல்கள், காணொளிகள், திரைப்பட பிரதிகள் எல்லாம் கொண்ட பாதுகாப்பகத்தை மிக அக்கறையாகப் பாதுகாத்து வருகிறார். அங்கு போகிறவர்களை எதையும் பார்ப்பதற்கு அனுமதிக்கிறார். ஆனால் எந்த ஒன்றையும் பிரதி எடுக்க முடியாது. UKSharma3 உரையாடல் 09:10, 11 திசம்பர் 2024 (UTC)Reply
Return to "மங்கல லட்சுமி (திரைப்படம்)" page.