பேச்சு:மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்

மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

நல்ல கட்டுரை அன்ரன்.

ஒரு கருத்து ,மட்டக்களப்புத் தமிழகம் வெருகல் முதல் பாணமை வரை விரிந்தது. அது பண்பாட்டு வாழ்வியல்கூறுகளால் ஒன்றித்த மக்கள்கூட்டம் சார்ந்தது. ஆனால் இலங்கை அரசு அதன் ஆட்சி முறை வசதிகளுக்காக காலத்துக்குக் காலம் மாற்றுகின்ற மாவட்ட எல்லைகளால் மொழிப் பண்பாட்டுக் கூறுகளை நிருணயம் செய்யமுடிவதில்லை. ஆதலால் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் என்ற வரையறைக்குள் அம்பாறை மாவட்ட மக்களின் பேச்சுத்தமிழும் அடங்கும் என்பதே என் கருத்து. மாவட்ட எல்லைகள் மாற்றம்பெற்ற வரலாறுகளையும் சீர் தூக்கிப் பார்ப்பது பொருத்தம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 15:41, 21 சூன் 2012 (UTC)Reply

நன்றி. நீங்கள் சொல்வது உண்மை. மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் என்பது மிகச் சிறிய வேறுபாடுகளுடன் அம்பாறையும் சேர்ந்ததுதான். இக்கருத்து பிரதிபலிக்காதிருந்தால் மாற்றிவிடலாம். அத்தோடு கட்டுரையிலுள்ள பிழைகளையும் சீர்திருத்திவிடுங்கள். --Anton (பேச்சு) 16:06, 21 சூன் 2012 (UTC)Reply

பிற மொழிச் சொற்களை தனி ஒரு முதன்மைத்தலைப்பாக மாற்றி கட்டுரையின் இறுதியில் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் பற்றிய நூல்கள் பகுதிக்கு முன்பாக இடுவோமா? இலக்கணம் சம்பந்தப்பட்ட பகுதிகள் கட்டுரையில் மிகவும் கிழே வருவதை தவிர்க்கலாம்.--Sank (பேச்சு) 08:44, 22 சூன் 2012 (UTC)Reply

நல்லது இப்போது பாருங்கள். --Anton (பேச்சு) 09:04, 22 சூன் 2012 (UTC)Reply

நல்லதொரு கட்டுரை அன்ரன். மட்டக்களப்பில் வாழ்ந்த காலத்தில் நிறைய அறியாத சொற்கள் கேள்விப்பட்டிருக்கின்றேன். தற்போது மறந்துவிட்டேன். வழிகேட்கும்போது, கிறுகி என்பது திரும்பி என்பதைக் குறிக்குமா? அப்படி எதுவோ கேள்விப்பட்டதாய் நினைவு. மேலும் உறவுமுறைகளை அழைக்கும் விதத்திலும் வேறுபாடுகளைக் கண்டிருக்கின்றேன். மகளை, மகனை அழைக்கும்போது, பெயர் சொல்லி அழைக்காமல், மகள், மகன் என்றே அழைப்பார்களல்லவா? கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்.--கலை (பேச்சு) 09:37, 22 சூன் 2012 (UTC)Reply

நன்றி! ஆம், கிறுகி என்பது திரும்பி என்பதன் திரிபு. தற்போது இதன் பாவனை நகரப் பகுதிகளில் குறைந்துவிட்டது. உறவுமுறைகளை அழைக்கும் விதத்திலும் வேறுபாடுகள் உண்டு. அதனையும் கட்டுரையில் சேர்க்க வேண்டும். --Anton (பேச்சு) 10:27, 22 சூன் 2012 (UTC)Reply


அருமையான கட்டுரை அன்ரன். மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பிற வழக்குகள் பற்றிய கட்டுரைகள் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. --Natkeeran (பேச்சு) 14:02, 22 சூன் 2012 (UTC)Reply
மிக்க நன்றி! --Anton (பேச்சு) 14:06, 22 சூன் 2012 (UTC)Reply
கட்டுரை அருமையாக உள்ளது, வாழ்த்துக்கள், வரும் நாட்களில் இக்கட்டுரையை முதற்பக்க கட்டுரையாக இட முன்மொழிகிறேன்--Sank (பேச்சு) 16:56, 22 சூன் 2012 (UTC)Reply
கட்டுரையினை எழுத தூண்டிய உங்களுக்கு எனது நன்றிகள். --Anton (பேச்சு) 14:07, 23 சூன் 2012 (UTC)Reply

கட்டுரை நிறுத்தம்

தொகு

யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் இக்கட்டுரையினை எழுத ஒரு வழிகாட்டியாகவிருந்தது. அங்கு ஆராயப்பட்ட விடயங்களுக்கு ஏற்ப இக்கட்டுரையும் மாற்றங்களுடன் எழுதப்பட்டது. தற்போதைக்கு இது போதும் என்பதால் இத்துடன் கட்டுரையினை நிறுத்திக் கொள்கிறேன். உரை திருத்தங்கள், எழுத்து, இலக்கணப் பிழைகள் இருந்தால் மேற்கொள்ளவும். நன்றி. --Anton (பேச்சு) 15:35, 22 சூன் 2012 (UTC)Reply

சமகால நோக்கு

தொகு

இக்கட்டுரையில் சமகால மட்டக்களப்புப் பேச்சுத் தமிழின் நிலை பற்றி எழுத வேண்டுமா? சிறிதளவு தகவல்களே கைவசம் உள்ளன. --Anton (பேச்சு) 15:35, 22 சூன் 2012 (UTC)Reply

இருக்கும் தகவல்களைக் கொண்டு எழுதுங்கள் அன்ரன். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 01:04, 23 சூன் 2012 (UTC)Reply
நன்றி, சேர்க்கப்பட்டாயிற்று. சிறு தகவல்தான் ஆனால் பயனுள்ளதாக இருக்குமெனக் கருதுகிறேன். --Anton (பேச்சு) 14:07, 23 சூன் 2012 (UTC)Reply


திருகோணமலைத் தமிழ் பற்றிய குறிப்பு

தொகு

இக்கட்டுரையில் திருகோணமலைப் பேச்சுவழக்கு யாழ்ப்பாணப் பேச்சுவழக்கினை ஒத்துக்காணப்படுகிறது என்றொரு குறிப்பு இருக்கிறது. அதற்கான மேற்கோளும் தரப்பட்டிருக்கிறது. மேற்கோளுக்குரிய ஆய்வுக்கட்டுரை திறந்த உள்ளடக்கம் இல்லையாகையால் என்னால் படிக்க முடியவில்லை. இதுவொரு தவறான அவதானம். திருகோணமலை மாவட்டத்துள் அடங்குகின்ற மூதூர், தம்பலகாமம் போன்ற பகுதிகளிலெல்லாம் மட்டக்களப்புத் தமிழை முற்றிலும் ஒத்த தமிழே வழக்கிலிருக்கிறது. திருகோணமலைக்கென்று தனிச்சிறப்பான வழக்குகளும் உண்டு. பொதுவாகப் பார்த்தால் கூட திருகோணமலைப் பிரதேச வழக்கு மட்டக்களப்பை ஒத்ததே அன்றி யாழ்ப்பாணத்தை ஒத்ததன்று. 1995இற்குப் பின்னரான யாழ்ப்பாண மக்களின் குடியேற்றம் காரணமாகவே திருகோணமலை நகரத்தின் பேச்சுவழக்கில் யாழ்ப்பாண வழக்கு அதிகரித்தது.

--மு.மயூரன் (பேச்சு) 17:11, 27 ஏப்ரல் 2013 (UTC)

Return to "மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்" page.