பேச்சு:மண்ணுளிப் பாம்பு

பெயர் தொகு

இதைச் சிறு அகவையில் பார்த்திருக்கிறேன். நச்சில்லை என்பதால் விளையாடியிருக்கிறேன். வலது தகவல் சட்டத்திலுள்ள படத்தில் இருக்கும் பாம்பை நாங்கள் மண்ணுளிப் பாம்பு[1] என்போம். -- சுந்தர் \பேச்சு 05:14, 17 ஜூன் 2009 (UTC)

நாங்களும் மண்ணுளிப்பாம்பு என்றுதான் கூறுவோம். ஆனால் இது வேறானதோ என்று எண்ணுகிறேன். அயகரம் என்பது சமசுக்கிருதச்சொல். கபளீகரம் என்பது போல அய-க'ர (ஆடுண்ணி?) என்று பொருள் கொண்ட சொல். --செல்வா 05:25, 17 ஜூன் 2009 (UTC)

சுந்தர், நீங்கள் குறிப்பிட்டுள்ள இணைப்பை முன்னரே பார்த்து விட்டேன். மண்ணுளிப்புப்பாம்பு என்பது Red Sand Boa [Eryx johnii] வைக் குறிக்கும். அதை இருதலைப்பாம்பு என்றும் மணியன் என்றும் கூறுவர் [நான் அறிந்தவரை]. அயகரம் என்று இங்கு நான் குறிப்பிடப்பட்டுள்ள பாம்பு Common Sand Boa [Gongylophis conicus]. கிட்டத்தட்ட பொருள் வரும் பெயரைத் தேடினேன். Boa constrictor என்ற பொருளில் தமிழ்ப்பேரகரமுதலியில் அயகரம் என்று கிடைத்தது. தமிழ்ப்பேரகரமுதலியிலிருந்து. வேறு சொல் எதுவும் கிடைக்காததால் தான் இதை பயன்படுத்தினேன். செல்வா கூறியுள்ளது சரிதான். அயகரம் என்பது ஆடு உண்ணி என்ற பொருளில் தான் வந்துள்ளது. அதாவது அயகரம் என்ற சொல் சமக்கிருத சொல்லாகத்தான் இருக்க வேண்டும். அயகரம் இப்போது உறுத்தும் சொல்லாகி விட்டது. மண் மலைப்பாம்பு என்றோ போவா மலைப்பாம்பு என்றோ பயன்படுத்தி விடலாமா? --பரிதிமதி 12:04, 17 சூன் 2009

விளக்கத்துக்கு நன்றி, பரிதிமதி. மண் மலைப்பாம்பு என்பதை எங்கே பெற்றீர்கள்? -- சுந்தர் \பேச்சு 13:05, 17 ஜூன் 2009 (UTC)

மலைப்பாம்பு என்பதில் உள்ள மலை என்னும் சொல்லின் பொருள் பெரிய, வலுவான என்னும் பொருளில் வருவது. மல்-> மலை. மல் என்றால் பெருகல், வலிமை என்று பொருள். கழகத் தமிழ் அகராதி மலையிடறு = பெருந்தடை என்று பொருள் தருகின்றது. மலையிலக்கு என்றால் வெளிப்படையானது வெட்ட வெளிச்சமானது என்று பொருள். எனவே மலைப்பாம்பு என்னும் சொல்லில் உள்ள மலை என்னும் முன்னொட்டு, வலிமை மிக்க, மிகவும் பருத்த என்னும் பொருள் தருவது. இதனை கட்டுரையில் அடிக்குறிப்பாகவும் தரலாம்.--செல்வா 18:47, 17 ஜூன் 2009 (UTC)

இந்த விளக்கத்தைக் கட்டாயம் சேர்க்க வேண்டும். இத்தனை நாளாக மலைப்பகுதியில் வாழ்வதால் அப்படி அழைக்கிறார்கள் என்று எண்ணியிருந்தேன்! -- சுந்தர் \பேச்சு 07:30, 18 ஜூன் 2009 (UTC)
இந்தக் கட்டுரையின் பெயரை மண்ணுளிப் பாம்பு என மாற்ற பரிந்துரைக்கிறேன். அதற்கான சான்றுக்கு--அருளரசன் (பேச்சு) 11:21, 8 நவம்பர் 2021 (UTC)Reply

சான்று தொகு

  1. http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=6+held+for+trying+to+sell+red+sand+boa&artid=pe/9JU2oWVU=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==&SEO
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மண்ணுளிப்_பாம்பு&oldid=3652109" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மண்ணுளிப் பாம்பு" page.