பேச்சு:மதியிறுக்கம்

மதியிறுக்கம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia


சுந்தர் Autism என்பது மூளைக் குறைபாடு அல்ல, மூளை வளர்ச்சியின் வேறுப்பாடு. இது ஒரு நோயும் அல்ல, மனிதர்களுள் சிலர் வேறுட்ட புலன், மூளை இயக்கங்கள் கொண்டிருப்பதால், இவர்கள் பொதுமக்களில் இருந்து வேறாக இருக்கிறார்கள். பொதுமக்கள் வேறாக உணர்கிறார்கள். இவர்களுக்குத் தனித்தேவைகள், குமுகாய (சமுதாய) சூழல்கள் தேவை. --C.R.Selvakumar 12:55, 20 ஜூலை 2006 (UTC)செல்வா

செல்வா, நான் கட்டுரையில் பல இடங்களில் நோய் என்பதிலிருந்து வேறுபாடு என்று மாற்றியுள்ளேன். தகுந்த ஆதாரங்களுடன் மேலும் தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள். -- Sundar \பேச்சு 13:01, 20 ஜூலை 2006 (UTC)

இது நோய் அல்ல, இது குறைபாடு, கட்டுரையின் சில இடங்களில் இது நோய் என்று இருந்தால் அதையும் மாற்றவேண்டும். நோய் பரவுவியல் என்ற துணை தலைப்பை மதியிறுக்க பரவுவியல் என்று மாற்றலாமா? வேறு தகுந்த தலைப்பு தோன்றினால் அதற்கும் மாற்றலாம். --குறும்பன் (பேச்சு) 13:11, 7 ஏப்ரல் 2013 (UTC)

உடன்படுகிறேன். Epidemiology என்பதற்கான தமிழ்ச்சொல்லாக விக்சனரியிலிருந்து பயன்படுத்தினேன். இச்சொல்லிற்கு கொடுக்கப்பட்டுள்ள மாற்றுத் தமிழாக்கமான புறப்பரவியல் என்ற பொதுப்படையான சொல்லை பயன்படுத்தலாம்.--மணியன் (பேச்சு) 03:07, 8 ஏப்ரல் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மதியிறுக்கம்&oldid=1494127" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மதியிறுக்கம்" page.