பேச்சு:மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic Untitled
தேவை
தொகு// இக் கோயிலிலுள்ள நவராத்திரி மண்டபத்தில் பூம்பாவை வரலாறு, சுண்ணத்திலான சிலைகள் மூலம் விளக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது// - இப்படி சிலைகள் இருக்குமானால் அது தற்போது எளிதில் உறுதிப்படுத்தத் தக்கது தானே? அதற்கு எதற்கு கூறப்படுகின்றது என்று எழுத வேண்டும்? --Ravidreams 18:18, 3 மார்ச் 2007 (UTC)
Untitled
தொகு- நன்றி ரவி, திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நான் இக்கோயிலுக்குப் பல தடவை போயிருக்கிறேன். பூம்பாவை கோயிலைப் பார்த்துப் படமும் எடுத்திருக்கிறேன். நவராத்திரி மண்டபத்துச் சிலைகளைக் கவனிக்கவில்லை. அதனால்தான் கூறப்படுகிறது என்று எழுதிவிட்டேன். ஆனால், வேறு நூற் சான்றுகள் இருப்பதால் இருக்கிறது என்றே எழுதலாம். Mayooranathan 20:29, 3 மார்ச் 2007 (UTC)
- பாடல் பெற்றா தலம். திருஞான சம்பந்தரே கபாலீச்சரம் என்று கூறுகின்றார். கபாலீச்சரம் அமர்ந்தான் கபாலீச்சரம் அமர்ந்தான் என்று எத்த்டனை இடங்களில் ஞானசம்பந்தரே கூறுகின்றார் என்று பாருங்கள்!! பார்க்கவும். சீராக கபாலீசுவரர் என்றும் கபாலீச்சரம் என்று எழுதுவதே முறை. திருமயிலையை நான் நன்கு அறிவேன், அங்கு இப்படித்தான் அழைத்தார்கள். ஈசன், ஈசுவரன் என்பன பெருவக்கான தமிழ் வடிவங்கள். இதற்கேற்பவே மாற்றிவிடுகின்றேன்.--செல்வா (பேச்சு) 13:55, 19 சூன் 2013 (UTC)