பேச்சு:மயிலைநாதர்
பழைமை/பழமை இந்த இரு சொல்லும் சரியே. அப்படியிருக்க பழமை என்பதை பழைமை என மாற்ற வேண்டிய தேவையில்லை.
தொல்காப்பியர் - சொல்லதிகாரச் சூத்திரம் 17:
- வண்ணம் வடிவே அளவே சுவையே
- தண்மை வெம்மை அச்சம் என்றா
- நன்மை தீமை சிறுமை பெருமை
- வன்மை மென்மை கடுமை என்றா
- முதுமை இளமை சிறத்தல் இழித்தல்
- புதுமை பழமை ஆக்கம் என்றா
- இன்மை உடைமை நாற்றம் தீர்தல்
- பன்மை சின்மை பற்று விடுதல் என்று
- அன்ன பிறவும் அதன் பால என்மனார்.
தொல்காப்பியர் பழமை என்றே பயன்படுத்தியிருக்கின்றார். ஆனால் திருக்குறளில் வள்ளுவர் இதனை பழைமை என பயன்படுத்தியிருக்கின்றார். பழமை என்பதே மூலச் சொல் என்றாலும், பழைமை என்பததன் போலி. பழமையை பயன்படுத்துவதில் தவறில்லை. தற்காலத் தமிழில் பழமை என்பது பரவலாக பயன்படுகின்றது. பக்தி இலக்கியங்கள், பாரதியர் பாடல்களில் பழமை என்று பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இதை வலிந்து மாற்ற வேண்டிய தேவை இல்லை. --அருணன் (பேச்சு) 23:40, 6 செப்டம்பர் 2015 (UTC)
பழமை, பழைமை
தொகுபழமை = தொன்மை (தொல்காப்பியம்)
பழைமை = பழகிய, பழக்கப்பட்ட நட்பு (திருக்குறள்)
இந்த வேறுபாட்டை உணர்ந்து பயன்படுத்துவோம். --Sengai Podhuvan (பேச்சு) 22:28, 8 செப்டம்பர் 2015 (UTC)
- அருணணின் கருத்தும் உங்கள் கருத்தும் எதிரெதிரானவை. பழமை என்றால் தொன்மை, ஆனால் பழைமை என்றால் பழகிய நட்பு என்கிறீர்கள். திருக்குறளில் எந்தக் குறளில் அல்லது குறள்களில் இது தரப்பட்டுள்ளது எனத் தருவீர்களா?--Kanags \உரையாடுக 01:58, 9 செப்டம்பர் 2015 (UTC)
- எனது கருத்து எதிரெதிரானவையா? ஏன் இப்படி? பழமை என்பதே மூலச் சொல், ஆனால் பழமை/பழைமை ஆகிர இரண்டிற்கும் ஒரு சில பொருள் வேறுபாடு குறிப்பாக திருக்குறளில் உள்ளது என்பது உண்மையே.
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. (801)
- என்கிறார் வள்ளுவர்.
- பழைமை>பழமை>பழம்>பழ என்பதன் வேர்ச் சொல்லிலிருந்து வருவது. பழகு, பழம் உட்பட பல சொற்களுக்கும் இதே வேர்ச்சொல்லே. பழமை என்றால் தொன்மை என்ற பொருள் சரி. பழைமை என்றாலும் அதே பொருள் தரும். ஆனால், வள்ளுவர் பழைமை என்பதை பழகிய நட்பு என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார் என்பதும் சரிதான். பழம், பழைமை, பழமை எப்படிச் சொன்னாலும் Old என்ற பொருளை தரும். தமிழ் மொழியின் அழகும் ஆழமும் இது தான். நான் ஏன் பழமை என்பதைப் பயன்படுத்தச் சொன்னேன் என்றால் பழமை என்பதன் போலி தான் பழைமை, தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரை பழமை என்பதையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். சொல்வதற்கு எளிமையாக இருப்பதால் என்னவோ. --அருணன் (பேச்சு) 03:36, 9 செப்டம்பர் 2015 (UTC)
- //எனது கருத்து எதிரெதிரானவையா? ஏன் இப்படி?// உங்கள் கருத்தும், செங்கைப் பொதுவன் ஐயா கருத்தும் எதிரெதிரானவை என்றேன். மீண்டும் படித்துப் பாருங்கள். திருவள்ளுவர் எழுதிய பழைமை உண்மையில் பழமை என்றீர்கள், செங்கைப் பொதுவன் ஐயா அதனை அது பழமை அல்ல, உண்மையில் பழகிய நட்பு எனக் கூறினார். பின்னர் நீங்கள் உங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளீர்கள். எனவே நான் கூற வருவது என்னவென்றால்... விளங்கிக் கொள்ளுங்கள்:). இன்னும் ஒன்று, பழைய, பழையது, இவை தவறானதா? இச்சொற்களில் இருந்து தானே பழைமை வந்திருக்க வேண்டும். எப்படிப் பழமை என வந்தது? சரி விடுங்கள். நான் பழைமை என்றே எப்போதும் போல எழுதப் போகிறேன்.--Kanags \உரையாடுக 07:47, 9 செப்டம்பர் 2015 (UTC)
- தங்கள் விளக்கத்துக்கு நன்றிகள். திருக்குறளை விட தொல்காப்பியம் காலத்தால் முந்தையது தானே. அதில் பழமை என்ற சொல்லே வந்திருக்கின்றது. பழமை என்ற சொல் பல பொருள்களில், ஆனால் நெருங்கிய பொருள்களில் வருகின்றது. அதனை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் Old எனலாம். தொல்காப்பியரும், வள்ளுவரும் பழமை என்பதை Old என்ற பொருளில் தான் பயன்படுத்துகின்றனர். வள்ளுவர் பழைமை எனக் கூறி Old Buddy/Old Friend என்ற பொருளில் பயன்படுத்துகின்றார். தொல்காப்பியரும் சரி, பிற்காலத்தில் பக்தி இலக்கியங்களிலும் சரி பழமை என எழுதி Old (Time Period) என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளனர். Technically பழமை/பழைமை ஆகிய இரண்டுமே சரி. இரண்டுமே Old என்ற பொருளைத் தரும். வேர்ச்சொல்லை பகுக்கும் போது அதன் பகுதியை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். பழையது என்பதிலிருந்து பழைமை வரவில்லை. பழையது, பழமை, பழைமை ஆகிய அனைத்துமே பழ என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்தவை. இங்கு உருபுகள் மற்றுமே மாறுகின்றன. பழ>பழம்>பழமை>பழைமை>பழையது என்றாகியது. --அருணன் (பேச்சு) 10:57, 9 செப்டம்பர் 2015 (UTC)
பழு < பழம் < பழமை < பழைமை - ஐகாரக் குறுக்கம்
சொல் ஆய்வு தமிழுக்கு ஆக்கம் தருமேல் வரவேற்கலாம்.
இங்கு, பழமை என்னும் புதிய வழக்கினைப் பின்பற்றுதல் தமிழுக்கு ஆக்கம் தரும்.
பொருளாழம் உணர்ந்து பழைமை என்னும் சொல்லைப் பின்பற்றுவோரை விட்டுவிடுவோம்.
அதையோ, இதையோ திருத்துவதால் பயன் ஒன்றும் விளைந்துவிடப் போவதில்லை.
இத்துடன் இதனை விட்டுவிட்டுப் புதிய ஆக்கங்களைத் தேடலாம். --Sengai Podhuvan (பேச்சு) 12:54, 10 செப்டம்பர் 2015 (UTC)