பேச்சு:மறவன்புலவு க. சச்சிதானந்தன்

பயனர்:Dineshkumar Ponnusamy, இக்கட்டுரையின் பெரும் பகுதியை நான் தான் எழுதியிருந்தேன். எதற்காக நீக்க வேண்டும்?--Kanags \உரையாடுக 11:14, 25 மார்ச் 2015 (UTC)

சுயவரலாறு போன்ற தோற்றமும், சச்சிதானந்தன் என்பவர் தொகுத்ததாலுமே இவ்வார்ப்புரு இட்டேன். ஏற்கனவே இதுபோன்று சிலர் சுயவரலாறு எழுதியிருந்ததாலே! ஆதாரங்களும், தேவையும் இருந்தால் வார்ப்புருவை நீக்கிவிடலாம், இல்லாவிட்டால் கட்டுரையில் தேவையற்ற கருத்துகளை நீக்கிவிடலாம் :) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:25, 25 மார்ச் 2015 (UTC)
அது எப்படி, வரலாற்றைப் பார்க்காமல் வார்ப்புரு இடுவீர்கள். வார்ப்புருவை நீங்களே நீக்கி விடுகீறீர்களா?--Kanags \உரையாடுக 11:31, 25 மார்ச் 2015 (UTC)
வரலாற்றை பார்க்கவில்லை ஆனால் இதைப் பார்த்தேன் Kanags. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:27, 25 மார்ச் 2015 (UTC)
Kanags, எந்த ஒரு பயனரும் கூட அறியாமல் பிழை செய்ய வாய்ப்புண்டு. அல்லது, நாம் எண்ணிப் பார்க்காத கோணத்தில் செயற்பட்டிருக்க வாய்ப்புண்டு. எனவே, உங்கள் கருத்தைக் கனிவுடன் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன். //அது எப்படி, வரலாற்றைப் பார்க்காமல் வார்ப்புரு இடுவீர்கள். வார்ப்புருவை நீங்களே நீக்கி விடுகீறீர்களா?// என்ற உரையாடலின் தொனி தேவையற்ற கடுமையுடன் இருக்கிறது. இதே போல், இன்னும் சில இடங்களில் நீங்கள் உரையாடி இருந்ததால் இதனைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. நன்றி.--இரவி (பேச்சு) 14:13, 25 மார்ச் 2015 (UTC)
இன்று இவர் செய்த இரண்டு "தவறுகளைச்" சுட்டிக் காட்டி அவற்றை முழுமையாக மீள்வித்திருந்தேன். முதலாவது தவறை தெரிந்தே செய்துள்ளார்.--Kanags \உரையாடுக 20:18, 25 மார்ச் 2015 (UTC)
இக்கட்டுரை JayarathinaAWB BOT ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 20:25, 25 மார்ச் 2015 (UTC)
இரண்டு மூன்று என்று வரிசைபடுத்தி என்ன செய்ய, தவறு என்று சுற்றிக்காட்டினால் திருத்திக்கொள்ளலாம். தெரிந்தே செய்ந்திருந்தார் என்று சொல்வதை முழுமனதுடன் எதிர்க்கிறேன். தவறு செய்தவருக்குமட்டுமே தெரிந்து செய்தாரா, தெரியாமல் செய்தாரா, எனத் தெரியும். எப்படியோ கட்டுரை பழைய நிலைமைக்கு வந்துவிட்டது :) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:55, 26 மார்ச் 2015 (UTC)
தெரிந்தே செய்தது: பழையதும் புதியதும். பழைய கட்டுரை ஒன்றிருப்பது தெரிந்தும், புதிய கட்டுரையைத் தொடங்கி வழிமாற்றுக் கொடுத்தது.--Kanags \உரையாடுக 12:00, 26 மார்ச் 2015 (UTC)
நகர்த்துவதற்கு மறந்து, புதிய கட்டுரை உருவாக்கிவிட்டேன். நான் உருவாக்கிய கட்டுரையை அழித்துவிட்டு நகர்த்தி விடுங்கள் அவ்வளவே, ஏற்கனவே இருந்த பல கட்டுரைகள் புதிய தலைப்பில் உருவாக்கப்பட்டு வெகுநாட்கள் கழித்து ஒருங்கிணைப்படுவது விக்கியில் எப்போதும் பயன்பாட்டில் உள்ளதே! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:57, 27 மார்ச் 2015 (UTC)

//ஏற்கனவே இருந்த பல கட்டுரைகள் புதிய தலைப்பில் உருவாக்கப்பட்டு வெகுநாட்கள் கழித்து ஒருங்கிணைப்படுவது விக்கியில் எப்போதும் பயன்பாட்டில் உள்ளதே// அவை தெரியாமல் செய்வது. ஆங்கில விக்கியில் இணைக்கப்படாமல் இருந்த சில தமிழ் விக்கிக் கட்டுரைகளை வேறு தலைப்புகளில் நானே ஒரு சிலவற்றை எழுதியுள்ளேன். ஆனால் நீங்கள் பழைய கட்டுரையில் (விக்கித்தரவில் உள்ள கட்டுரையில்) திருத்தமும் செய்து விட்டு அதனைப் புதிய கட்டுரையாக வேறு தலைப்பில் எழுதி, பழைய கட்டுரையை வழிமாற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் தவறுதலாகவே செய்து விட்டீர்கள் என்றே நானும் எடுத்துக் கொள்கிறேன். மன்னியுங்கள்.--Kanags \உரையாடுக 09:10, 27 மார்ச் 2015 (UTC)

நம்பத்தக்க சான்றுகள் தேவைப்படுகின்றன தொகு

இங்குள்ள சான்றுகள் உகந்தனவாக இல்லை. யூடியூப் மற்றும் இரண்டு இணையத்தள இணைப்புக்கள் குறிப்பிடத்தக்கனவாக இல்லை. பார்க்க en:Wikipedia:Video links. மேலும், பராமரிப்பு வார்ப்புருக்களை நீக்க முன் உரையாடுக. --AntonTalk 14:41, 26 மார்ச் 2015 (UTC)

Anton, இதற்கு ஏன் notability வார்ப்புரு இடப்பட்டது? இவர் தமிழ் கூறும் நல்லுலகில் ஒரு notable person ஆக இருப்பதால் தானே அவரைப் பற்றிக் கட்டுரை எழுதினேன். உங்களுக்கு இவரைப் பற்றித் தெரியாதென்றால் நான் என்ன செய்ய முடியும்? refimprove வார்ப்புரு இடப்பட்டிருந்தாலும் பரவாயில்லை. உங்களுடன் உரையாடுவதற்கே நான் பயப்படுகிறேன். முடிந்த வரையில், தவிர்க்கவே விரும்புகிறேன். ஆனாலும், என்ன செய்வது? @Ravidreams:--Kanags \உரையாடுக 20:27, 26 மார்ச் 2015 (UTC)
//உங்களுக்கு இவரைப் பற்றித் தெரியாதென்றால் நான் என்ன செய்ய முடியும்// எங்களுக்கு தெரியாது என்றால் எங்களுக்கு தெரியுமளவிற்கு இவர் ஏதும் செய்யவில்லை என்று பொருள் கொள்ளலாம். இவர் யாராக இருந்தாலும் எங்களுக்கு தேவை சான்றுகள் அவ்வளவே :) எனக்குத் தெரிந்த வல்லுநர்கள் பல்லாயிரம் பேர் விக்கியில் இல்லை, அவர்களைப் பற்றி எழுத சான்றுகள் கிடைக்கும் போது அவர்களுக்கும் கட்டுரை எழுதுவேன். //உங்களுடன் உரையாடுவதற்கே நான் பயப்படுகிறேன். முடிந்த வரையில், தவிர்க்கவே விரும்புகிறேன்.// மிக மூத்த விக்கிப்பீடியரான தாங்கள் ஒருவர் சான்றுகளின் நம்பகத்தன்மை குறித்து உரையாடுவதற்கு பயப்பட தேவையில்லை, இங்கு அனைவரும் தாங்களாகவே முன்னின்று பங்களிக்கின்றனர். பிணக்குகள் சிறியதாக இருக்கும்போதே உரையாடி தீர்வுகண்டுவிடலாம், தவிர்த்தால் அது தவறான பாதையை நோக்கி நகர்ந்து விடலாம். //என்ன செய்வது// நம்பத்தகுந்த ஆதாரங்களை இணைத்து விடுங்கள் அவ்வளவே :) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:02, 27 மார்ச் 2015 (UTC)

Kanags, மறவன்புலவு க. சச்சிதானந்தன் தமிழ் பதிப்புலகில் அறியப்பெற்றவரே. தனி கலைக்களஞ்சியக் கட்டுரை எழுதும் தகைமை பெற்றவரே. ஆனால், நாம் அறிந்தவர்களை மற்றவரும் அறியும் வண்ணம் சிறப்பான மேற்கோள்களைத் தருவது வழமையான விக்கிப்பீடியா எதிர்பார்ப்பு தானே? தற்போது உள்ள மேற்கோள்கள் போதுமானவை இல்லை என்று அன்டன் சுட்டிக் காட்டியிருப்பது ஏற்புடையதே. அதற்கான ஆங்கில விக்கி நடைமுறையையும் சுட்டிக் காட்டி இருக்கிறார். இது போன்ற கட்டுரை சார்ந்த கேள்விகளை யார் வேண்டுமானாலும் முறையாக எழுப்பலாம். தனிப்பட்ட தாக்குதல் இல்லாத இது போன்ற முறையீடுகளில் அஞ்சுவதற்கோ நாம் எழுதிய கட்டுரை என்ற பிணைப்புடன் அணுகுவதற்கோ ஏதும் இல்லை. அருள்கூர்ந்து இன்னும் வலுவான மேற்கோள்கள் கிடைக்கன்றனவா என்று பார்த்து சேர்க்க முனையுங்கள். குறைந்தது, அவர் எழுதிய நூல்களின் பட்டியல்கள், அவரைப் பற்றிய ஊடகச் செய்திகள் முதலியவற்றைச் சேர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 06:25, 27 மார்ச் 2015 (UTC)

என்ன நீங்கள் இருவரும் அன்ரனுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். அவரது பிழையை நீங்கள் இருட்டடுப்பு செய்கிறீர்கள் என நான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன். அன்ரன் இட்டது notability வார்ப்புரு. என்றால் இந்நபரைப் பற்றிய கட்டுரை இங்கு இடுவதற்குத் தகுந்தவரா என்பதை அறியும் வார்ப்புரு. இது எதற்காக என்றே கேட்கிறேன். மேற்கோள்கள் தேவையென்றால், refimprove வார்ப்புரு இடவேண்டும். அது குறித்தே கேள்வி எழுப்பினேன். இரண்டுக்கும் நீங்கள் வேறுபாடு தெரியாமல் இருக்கிறீர்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. //எங்களுக்கு தெரியாது என்றால் எங்களுக்கு தெரியுமளவிற்கு இவர் ஏதும் செய்யவில்லை என்று பொருள் கொள்ளலாம்//, தெரியாவிட்டால் பேசாமல் இருங்கள். அறிந்தவர்களிடம் கேளுங்கள். அல்லது இணையத்தைத் தேடிப் பாருங்கள். தெரியாததைத் தெரிந்து கொள்ளத்தான் விக்கிப்பீடியாவே உள்ளது. இப்படித்தான் தனிநாயகம் அடிகளாரின் கட்டுரை விக்கியில் இருக்க வேண்டுமா எனக் கேள்வி கேட்டார்கள். அவரைப் பற்றி தினேசுக்கு இப்போதாவது தெரியுமா என்பது எனக்கு சந்தேகமே. அதற்காக அவரைப் பற்றிய கட்டுரையை அழிக்கக் கேட்கலாமா? notability என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது:) இரவி, மேற்கோள்கள் எதுவும் தராவிட்டால் இக்கட்டுரையை நீக்க வேண்டும் எனக் கூறுகிறீர்களா? என்ன வேணுமென்றாலும் நீங்கள் செய்யுங்கள். உங்களுக்கு அந்த அதிகாரம் உள்ளது. என்னைப் பொருத்தவரையில் இவரைப் பற்றிய கட்டுரை விக்கியில் மூன்று வசனங்கள் மேற்கோள்கள் எதுவும் இல்லாமல் இருந்தாலுமே போதுமானது.--Kanags \உரையாடுக 08:02, 27 மார்ச் 2015 (UTC)
மறவன்புலவு க. சச்சிதானந்தன் தென்றல் இவ்விதழில் அவரின் பேட்டியொன்று வெளியாகியிருப்பதை இணையத்தில் கண்டேன். புகுபதிகை செய்து படிக்கும் படி உள்ளது, முழுவதுமாக படித்துவிட்டு இணைக்கப் பார்க்கிறேன். இணையத்தில் சுவிஸ் துர்க்கா கலை கலாசார மன்றத்திற்கு மறவன்புலவு க. சச்சிதானந்தம் வருகை என்றொரு கட்டுரையும் கிடைத்து. அவரின் வலைதளத்தினை கட்டுரையில் இணைத்துள்ளேன். ஏதேனும் அச்சு ஊடகங்களில் வெளியான செய்திகளோ, பேட்டிகளோ இருக்கின்றனவா என கண்டு இணைக்கலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:20, 27 மார்ச் 2015 (UTC)

இதற்கு ஏன் notability வார்ப்புரு இடப்பட்டது? இவர் தமிழ் கூறும் நல்லுலகில் ஒரு notable person ஆக இருப்பதால் தானே அவரைப் பற்றிக் கட்டுரை எழுதினேன். உங்களுக்கு இவரைப் பற்றித் தெரியாதென்றால் நான் என்ன செய்ய முடியும்? இதுபோன்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர்த்து கட்டுரையை மேம்படுத்தலாமே? இக்கேள்விகளைக் கேட்பதால் கட்டுரை சரியென்றாகிவிடாது. en:Wikipedia:Notability, en:Wikipedia:Biographies of living persons என்பவற்றுக்குட்பட்டு இக்கட்டுரை எழுதப்பட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து "இவரைப் பற்றிய கட்டுரை விக்கியில் மூன்று வசனங்கள் மேற்கோள்கள் எதுவும் இல்லாமல் இருந்தாலுமே போதுமானது" போன்ற தன்னிலை விளக்கங்கள் விக்கிக் கொள்கையாகா? மேலும், வக்காலத்து வாங்குகிறீர்கள் போன்ற பண்பற்ற, தனிநபர் விமர்சனங்களைத் தவிர்க்கலாம். இந்த பண்பற்ற, உரையாடல் தொடர்ந்தால், தடைசெய்யவும் விக்கிக் கொள்கையில் இடமுண்டு. --AntonTalk 09:35, 27 மார்ச் 2015 (UTC)

//பராமரிப்பு வார்ப்புருக்களை நீக்க முன் உரையாடுக// என்று எழுதியது நீங்கள் தானே. notability நீக்கல் வார்ப்புருவை இட்டது நீங்கள். அவ்வாறிருக்க அதனையிட்டு உரையாடினேன். இதில் என்ன தவறு. உங்களால் என்னைத் தடை செய்ய முடியும் என்றால் செய்யுங்கள். நான் கவலைப்படப் போவதுமில்லை, அதற்காக நான் வேல்சிடம் சென்று முறையிடப்போவதுமில்லை. நன்றி.--Kanags \உரையாடுக 10:01, 27 மார்ச் 2015 (UTC)
இரவி, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் விக்கிப்பீடியாவில் எழுதுவதைத் தடை செய்யப்போகிறீர்களா? மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? இது பற்றி கருத்துத் தெரிவித்தால் தொடர்ந்து எனது பங்களிப்புப் பற்றி நான் ஒரு முடிவுக்கு வரலாம்.--Kanags \உரையாடுக 10:13, 27 மார்ச் 2015 (UTC)


Kanags உங்கள் பங்களிப்பு விக்கியில் அளப்பரியது. தமிழ்விக்கிபீடியாவை வளர்த்தெடுத்த முக்கியமானவர்களில் நீங்களும் ஒருவர். உங்கள் பங்களிப்பு கண்டிப்பாகத் தொடர வேண்டும்.--Chandravathanaa (பேச்சு) 10:28, 27 மார்ச் 2015 (UTC)

உரையாடுக என்பது கட்டுரை வளர்ச்சி பற்றியது. மாறாக, நியாயப்படுத்தல் அல்லது தனிநபர் விமர்சனம் பற்றியல்ல. வேல்சும் ஒன்றும் செய்ய முடியாது. வேல்ஸ் இங்கு வந்து கொள்கைக்குப் புறம்பாக செயற்பட்டால் அவரும் தடை செய்யப்படலாம். இதுதான் விதி. இதற்குக் கட்டுப்பட்டே அனைவரும் பங்களிக்கிறோம். இது பிடிக்காவிட்டால் நாம் விலகிச் செல்லலாம். அதைவிடுத்து நமக்குச் சார்பாக கொள்கை இருக்க வேண்டும் எனக் கருதக் கூடாது. --AntonTalk 10:23, 27 மார்ச் 2015 (UTC)


முழு வரியையும் படிக்காமல் அல்லது கவணிக்காமல் தங்களைப்போன்ற சான்றோர் இவ்வாறு கருத்து பதிவதைக் கண்டு வியப்படைகிறேன். கூகிளில் காட்டுவதால் ஒருவர் விக்கிப்பீடியாவில் வருவதற்கு தகுதியானவரில்லை, ஏனென்றால் என் பெயருக்கு கூட கூகிள் சில தகவல்களை தெரிவிக்கின்றது. இப்பொழுதும் கூட இவ்விருவரையும் எனக்கு தெரியாது, ஆனால் தேவைப்படும்போது(??) தெரிந்து கொள்வேன். விக்கிப்பீடியாவின் நோக்கம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதே, அனைவரும் அறியும் கருத்து நம்பத்தகுந்ததாகவும், தேவையானதகவும் இருக்க வேண்டும். ஆதாரத்தை தானே இணைக்க கூறியிருந்தேன், இதில் இருட்டடிப்பு எங்கிருந்து வந்ததது என எனக்குத் தெரியவில்லை. எனது கருத்தில் எவ்வித மாற்றமுமில்லை, இவர் யாராக இருந்தாலும் எங்களுக்கு தேவை சான்றுகள் அவ்வளவே! உங்களைப் போன்ற நன்மக்களை தடை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. கருத்து வேறுபட்டாலும் அனைவரும் விக்கிப்பீடியாவின் நலத்திற்காகவே உழைக்கின்றோம். தனிநபராக உங்கள் மீது எனக்கு மரியாதையும் அன்பும் உள்ளது. உங்களது சேவை விக்கிப்பீடியாவிற்கு தேவை. நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:25, 27 மார்ச் 2015 (UTC)

Kanags, //மறவன்புலவு க. சச்சிதானந்தன் தமிழ் பதிப்புலகில் அறியப்பெற்றவரே. தனி கலைக்களஞ்சியக் கட்டுரை எழுதும் தகைமை பெற்றவரே// என்று மிகத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன். எனவே, இது நீக்கல் வாக்கெடுப்புக்குச் செல்லுமானால், நீக்க வேண்டாம் என்று கருத்திட்டு அதற்குத் தக்க ஆதாரங்களைச் சுட்ட முனைவேன்.

ஒரு தலைப்பு பற்றியே பிரச்சினை என்றால் ஒவ்வொருவரும் அதனைத் தேடிப் பார்த்து அறிந்து கொள்ளலாம். ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டுரைகள் குறித்து ஒவ்வொரு நாளும் வரும் இலட்சக்கணக்கான வாசகர்களும் தாங்களே தேடிப் பார்த்துத் தெரிந்து கொள்வது நடைமுறைச் சாத்தியமற்றது. எனவே தான் இவ்வாறான வார்ப்புருக்களை இடுகிறோம். ஒரு வகையில், இது கட்டுரையினை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு. கடந்த சில நாட்களில் இக்கட்டுரை வளர்ந்து வருவது கண்கூடு. எனவே, இவ்வாறான வார்ப்புரு இடல்களை வளர்முகமாக அணுக வேண்டுகிறேன். கட்டுரையை மேம்படுத்துவதற்கான பொறுப்பு அனைவருக்கும் உண்டு. கட்டுரையைத் தொடங்கியவர், பெரும் பங்களித்தவர்கள் கூடுதல் தகவல் தெரிந்திருந்தால் சேர்க்கலாம்.

ஒரு பயனர் ஒரு கட்டுரைத் தலைப்பு இருக்கலாம் என்பதை ஏற்றுக் கொண்டு அதன் பொதுவான தரத்தை, குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் மேம்படுத்த வேண்டும்போது, refimprove வார்ப்புரு இடலாம். ஆனால், எவ்வளவு தான் மேற்கோள்கள், தகவல் தந்திருந்தாலும் அத்தலைப்புக்கு குறிப்பிடத்தக்கமை இல்லை என்று ஒருவர் கருதும் போது notability வார்ப்புரு இடலாம். தெளிவாக குறிப்பிடத்தக்கமை வரையறுக்கப்படாத துறைகளில் ஒரு தலைப்பு குறிப்பிடத்தக்கதா இல்லையா என்பது ஒருவருக்கு ஒருவர் மாறும் அகவயப் பார்வையே. எனவே, இது குறித்து கேள்வி எழுப்ப அனைவருக்கும் உரிமை உண்டு. இதில் சரி என்றும் தவறு என்றும் ஏதும் இல்லை. இவ்வாறு கேள்வி எழும் போது, குறிப்பாக என்ன விதமான சான்றுகள், குறிப்பிடத்தக்கமை தகுதிகளை எதிர்பார்க்கிறார் என்று அறிந்து அதனை நிறைவேற்ற முடிகிறதா என்று பார்க்கலாம். இதுவே இச்சிக்கலுக்குப் புறவயமான தீர்வு.

அன்டன், இத்தலைப்பைப் பொருத்தவரை குறிப்பாக எத்தகைய சான்றுகள், தகுதிகளை எதிர்பார்க்கிறீர்கள் என்று தெளிவுபடுத்தினால் அத்தகைய ஆதாரங்களைத் தேடிப் பார்த்துச் சேர்க்கலாம்.

சகோதரன் ஜெகதீஸ்வரன், வளர்முகச் செயற்பாட்டுக்கு நன்றி.

பொதுவாக, யாருக்கும் இங்கு சிறப்பு அதிகாரம் இல்லை. ஏற்கனவே வரையறுத்த கொள்கைகள், அதனை ஒட்டிய விக்கிச் சமூக இணக்க முடிவையே செயற்படுத்த முடியும். இதனை மீறி எந்த ஒரு நிருவாகியாவது செயற்பட்டால், மற்ற நிருவாகிகள் மிக இலகுவாக இச்செயற்பாடுகளை மீட்கலாம். தொடரும் பிணக்குகள் குறித்து முறையிட்டு நடவடிக்கை முடியும். எனவே, எந்த ஒரு நிருவாகியும் கூட தன்னுடைய தனிப்பட்ட முடிவை நடைமுறைப்படுத்த முற்படுவதே வீண் தான். நன்றி.--இரவி (பேச்சு) 10:28, 27 மார்ச் 2015 (UTC)

அன்ரன், நீக்கல் வார்ப்புருவை நீக்க இனிமேலாவது உங்களிடம் இருந்து அனுமதி கிடைக்குமா? அதற்குப் பதிலாக refimprove வார்ப்புருவை இட அனுமதி கிடைக்குமா. இரண்டுக்கும் மிகப்பெரும் வேறுபாடுகள் உண்டு. மூன்று பேர் இந்நபர் ஒரு notability person தான் என்பதைத் தெளிவு படுத்தியுள்ளனர். கட்டுரையில் உள்ள ஒவ்வொரு வரிக்கும் நீங்கள் ஆதாரம் கேட்கிறீர்கள் போல் தெரிகிறது. என்னால் அதற்கு ஆதாரங்கள் சேர்க்க முடியும். நீக்கல் வார்ப்புருவை நீக்கினால் மேலும் கட்டுரையைத் தொடரலாம். notable person தானா என்பதை முதலில் நீங்கள் தீர்மானித்து அனுமதி வழங்குங்கள். அல்லது கட்டுரையைத் தொடர்வது நேரம் மெனக்கேடு.--Kanags \உரையாடுக 10:38, 27 மார்ச் 2015 (UTC)
அன்ரன், இதனை நீங்கள் முதலிலேயே செய்திருந்தால் இவ்வளவு தூரம் உரையாடியிருக்கத் தேவையில்லை. நான் refimprove வார்ப்புருவை சேர்க்கப் போகிறேன். படிப்படியாக தகுந்த ஆதரங்களுடன் ஒரு முழுமையான கட்டுரை உருவாகும். நன்றி.--Kanags \உரையாடுக 10:46, 27 மார்ச் 2015 (UTC)
Return to "மறவன்புலவு க. சச்சிதானந்தன்" page.