பேச்சு:மறைப்பணியாளர்

"Missionary" - மறைப்பரப்புனர் அல்லது சமயப் பரப்பாளர். @செல்வா:.--Kanags \உரையாடுக 10:55, 22 சூலை 2021 (UTC)Reply

@Kanags and செல்வா: ஐயா

சமயப் பரப்பாளர் என்பதே சரியானது.விக்சனரியில் "Missionary" என்னும் சொல்லுக்கு விளக்கம் உள்ளது. பார்க்கவும் [1].--தாமோதரன் (பேச்சு) 11:36, 22 சூலை 2021 (UTC)Reply

நேர்காணல் – பெனின் மறைப்பணியாளர் அருள்பணி ஒபியே, கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி --AntanO (பேச்சு) 17:40, 22 சூலை 2021 (UTC)Reply
ஆம் சமயப்பரப்பாளர் என்பது சரியானதாக இருக்கும் என்று கருதுகின்றேன்.--செல்வா (பேச்சு) 20:12, 22 சூலை 2021 (UTC)Reply

மிஷனரி, மிஷன் என்ற சொற்கள் தமிழ் விக்கிபீடியாவில் 500 பக்கங்களில் பாவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சொற்கள் விக்கிபீடியாவில் இல்லாமல் இருப்பது நல்லதல்ல.--Aruppillai (பேச்சு) 23:13, 22 சூலை 2021 (UTC)Reply

மிஷனரி, மிஷன் என்பன ஆங்கிலச் சொற்களுக்கான ஒலிபெயர்ப்புக்கள். வணிகப்பெயர்கள் தவிர்த்து ஏனையவை மாற்றப்பட வேண்டும். நீங்கள்கூட 500 பக்கங்களில் பாவிக்கப்பட்டுள்ளது என்று எழுதியதுபோன்ற தட்டச்சு பிழை உட்பட்ட பிழைதான். அதிகம் பயன்பாட்டில் உள்ளது என்பதற்கான அது சரியானது என்று கருதலாகாது. மேலும், மிஷனரி, மிஷன் என்பன மிசனரி, மிசன் எனலாம். --AntanO (பேச்சு) 04:25, 23 சூலை 2021 (UTC)Reply

மிஷன், மிஷனரி என்ற சொற்கள் கிட்டதட்ட 200 வருடங்களாக பாவிக்கப்பட்ட்டு வருகிறது. நீங்கள் பாவிக்கும் மறை என்ற சொல்லும் விக்கிபீடியா வில் இல்லை. மறை என்பதை தேடும்பொது வேதத்திற்கு தான் போகிறது. மிஷன் மிசன் என்பவை ஒரே சொற்கள்தான் ஆனால் எது கூடுதலாகப் பாவிக்கப்படுகிறதோ அதை பாவிக்கவேண்டும் எனபதுதான் என்னுடைய கருத்து.--−முன்நிற்கும் கருத்து Aruppillai (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Aruppillai: மறை என்றால் வேதம், அல்லது சமயக் கருத்துகளைப் பரப்பும் நூல்கள். மறைப்பணி என்பதும் அதுதான். எனவே மறைப்பணியாளர் என்பது சாலப் பொருந்தும். உங்களைப் போன்றவர்களின் தேடுதல் வசதிக்காக மிசனரி, மிஷனரி, மிஷனறி போன்ற சொற்களுக்கு வழிமாற்று வைக்கலாம்.--Kanags \உரையாடுக 00:07, 24 சூலை 2021 (UTC)Reply
@Aruppillai: விக்கிப்பீடியாவிற்கு உள்ள வழிகாட்டலின்படிதான் சிலவற்றைச் செய்ய முடியும். தனிப்பட்டகருத்துக்களை விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) போன்ற இடங்களில் விவாதித்து விக்கிச்சமூக ஒப்புதல் பெற வேண்டும். நிற்க, நீங்கள் கிறிஸ்தவ பின்னனியில் இருந்து கருத்திடுவதாகத் தெரிகிறது. அவ்வாறாயின் மிசனரி சொல் விவிலியத்தில் எங்கும் பயன்பாட்டில் இல்லை என்பதையும், அச்சொல் கூடுதலாகப் பாவிக்கப்படுகிறது என்பதற்காக விவிலியத்தில் சேர்க்க முடியாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இங்கு வத்திக்கான் மறைப்பணியாளர் என்ற பதத்தையை கையாள்கிறது. நன்றி. --AntanO (பேச்சு) 03:18, 24 சூலை 2021 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மறைப்பணியாளர்&oldid=3202889" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மறைப்பணியாளர்" page.