பேச்சு:மாநிலம்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Anton
மாநிலம், மாகாணம் இரண்டுக்குமான ஆட்சி முறைகள் வேறு அல்லவா? மாகாணம் என்பதற்குத் தனிக்கட்டுரை எழுத வேண்டும். ஆங்கில விக்கியிலும் state, provinceக்குத் தனிக்கட்டுரைகளைக் காணலாம்--ரவி 15:07, 21 ஜூலை 2008 (UTC)
- இக்கட்டுரை ஆட்சியமைப்புப் பகுதிகளைப் பற்றியதாக இருப்பினும், இந்தியாவில் மாநிலம் என்றும், இலங்கையில் மாகாணம் என்றும் இருவேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது. மேலும், இரண்டின் நிர்வாக அமைப்பும் மாறுபாடுகளுடையது என்பதால் மாநிலம் (இந்தியா), மாகாணம் (இலங்கை) என்று இருவேறு கட்டுரைகளாகப் பிரித்து உருவாக்கினால் நன்றாக இருக்கும். இதில் ரவியின் கருத்துடன் நானும் இணைகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:43, 20 மே 2011 (UTC)
- மாநிலம் மாகாணம் என்ன வேறுபாடு ?? --Natkeeran (பேச்சு) 03:27, 5 ஆகத்து 2012 (UTC)
- சுருக்கமாக குறிப்பிடுகிறேன். மாநிலம் சமஸ்டி ஆட்சியில் கூடியளவு சட்ட, நீதி, நிர்வாக அதிகாரங்களைக் கொண்டு காணப்பட, மாகாணம் ஒற்றையாட்சியில் நிர்வாக அதிகாரத்தைக் கொண்டு காணப்படும். --Anton (பேச்சு) 04:40, 5 ஆகத்து 2012 (UTC)