பேச்சு:மாநில நெடுஞ்சாலை 86A (தமிழ்நாடு)

மூர்த்தி வணக்கம். கட்டுரையின் தலைப்பில் ஆங்கிலம் அவசியம் தேவைதானா? ஆங்கிலம் கலவாமல் எழுத வேண்டியது அவசியம் இல்லையா? ஆங்கிலம் சேர்த்து எழுத ஆரம்பித்தால் தமிழ் விக்கிபீடியாவே தமிங்கிலம் ஆகிவிடாதா? பிறமொழிகளில் (உதாரணம்: ஆங்கில விக்கிபீடியா) தமிழ் கலந்து எழுதி கட்டுரைத் தலைப்புகளை வைக்க முடியுமா? ஏன் நம் மொழியில் மட்டும் பிறமொழிகளைக் கலந்தே எழுத வேண்டும்? யோசியுங்கள். பிற மொழி கலந்துதான் தமிழில் புரிந்துகொள்ள இயலும் என நாமே நினைப்பது தவறல்லவா? உங்கள் கருத்துகளை இங்கே எழுதுங்கள். நன்றி--நந்தகுமார் (பேச்சு) 13:58, 27 சனவரி 2015 (UTC)Reply

நீங்கள் கூறுவது சரி. ஆனால் நெடுஞ்சாலை எண் ஆங்கிலத்தில் தானே உள்ளது. அது மட்டுமல்லாது ஏற்கெனவே மற்ற எல்லாம் ஆங்கிலத்தில் உள்ளது. நீங்கள் கூறினால் அதற்கு உண்டான முயற்ச்சியை எடுக்கிறேன்.-- C.K.MURTHY  ( பேச்சு  ) 14:33, 27 சனவரி 2015 (UTC)Reply

மூர்த்தி உங்கள் மறுமொழிக்கு நன்றி. நெடுஞ்சாலை எண் ஆங்கிலத்தில்தான் உள்ளது. எண்ணோ, வார்த்தைகளோ முடிந்தவரை கட்டுரைகளில் பிறமொழி கலவாமல் எழுதுவதே சிறந்தது என எண்ணுகிறேன். ஆங்கிலத்தில் எழுதவேண்டியவற்றை அடைப்புக்குறிகளுக்குள் கட்டுரையில் எழுதலாம். தலைப்புகளை முழுவதுமாக தமிழில் எழுதுவோமே! இது குறித்து பிற பயனர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.--நந்தகுமார் (பேச்சு) 15:31, 27 சனவரி 2015 (UTC)Reply

சரி நந்த.-- C.K.MURTHY  ( பேச்சு  ) 17:47, 27 சனவரி 2015 (UTC)Reply

அனைத்து கட்டுரை தலைப்பையும் மாற்றிவிட்டால் வார்புருவிலும் மாற்றம் செய்ய வேண்டும். வார்புருவில் ஆங்கிலம் இருப்பது சரியல்ல --குறும்பன் (பேச்சு) 17:54, 27 சனவரி 2015 (UTC)Reply

குறும்பன், முடிந்தவரை முயற்சி செய்கிறேன். என்னால் முடியவில்லை என்றால் உங்களை தொடர்பு கொள்கிறேன்.-- C.K.MURTHY  ( பேச்சு  ) 18:02, 27 சனவரி 2015 (UTC)Reply

Return to "மாநில நெடுஞ்சாலை 86A (தமிழ்நாடு)" page.