பேச்சு:மாரியோ பார்க்காசு யோசா

மாரியோ பார்க்காசு யோசா என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

பெருவில் நான் பார்த்த நடுநாட்டு, தென் மாநில நகரங்களில் (லீமா, பூனோ, அரேக்கிப்பா, கூசுக்கோ..) அரேக்கிப்பா செழிப்பாகவும் வசதியாகவும் இருப்பதுபோல் காணப்பட்டது. அரேக்கிப்பா எரிமலைப் படிவுகளால் கட்டடங்கள் பெரும்பாலானவை ஒருவகை வெண்பூசுடன் காணப்பட்டன. இதனை அரேக்கிப்பா என்பது போல பலுக்கிகிறார்கள். எனவே Arequipa என்பதை அரேக்கிப்பா என மாற்றியுள்ளேன். --செல்வா 22:16, 7 அக்டோபர் 2010 (UTC)Reply

யோசாவா, லோசாவா என்று ஒரு குழப்பம். யோசா வென்று ஒலிக்க வேண்டுமென ஆங்கில விக்கியில் சொல்கிறார்கள். ஆனால் எசுப்பானிய ஐபிஏ million போல் என சொல்கிறது. மற்ற இணையதளங்களிலும் யோசா என்கிறார்கள். எப்படி எழுதுவது?--சோடாபாட்டில் 05:02, 8 அக்டோபர் 2010 (UTC)Reply
the double el (doube elle or eye in spanish) is an approximant close to the y sound. but, i think you made a mistake while taking a look at the IPA. its an inverted y and not lambda. the longer line is in the other direction. so, that makes it yosa and not losa. there's no need for any change on that. look again... Le diable 05:17, 8 அக்டோபர் 2010 (UTC)Reply
நன்றி diable.--சோடாபாட்டில் 05:46, 8 அக்டோபர் 2010 (UTC)Reply
நன்றி லே டயாபில். இந்த இரட்டை எல் (-ll-) எசுப்பானியாவிலும், தென்னமெரிக்காவில் பல நாடுகளிலும் பல்வேறு விதமாக பலுக்குகின்றனர் (ஒலிக்கின்றனர்). lla என்பதை ல்யா என்றும் யா என்றும் சா' (= ஜா) என்றும் ஒலிக்கின்றர்கள். Llama என்னும் விலங்கை ல்யமா என்றும் யாமா என்றும் சா'மா என்றும் தென்னமெரிக்காவிலேயே பல நாடுகளில் பல விதமாகக் கூறுகின்றனர். ஐரோப்பாவில் உள்ள எசுப்பானியாவில் பேசும் எசுபானியம் மொழியில் (ஆங்கிலத்தில் Castilian எனப்படும்) [kasteˈʎano] (தமிழில் காசிட்தியானோ) சற்று வேறான ஒலிப்பைக் கொண்டது. இங்கே டயாபில் கூறியது போல யோசா என்று எழுதினால் சரியாக இருக்கும். அஒநெ (அனைத்துலக ஒலியன் நெடுங்கணக்கு) (IPA)-இல் உள்ள ʝ என்னும் குறி ஏறத்தாழ ய் என்பது போல ஒலிக்கும் ஆனால் சற்றே ழ், ச' போன்ற ஒலிக்கூறுகள் சேர்ந்த ஒலிப்பு. ʎ என்னும் ஒலிப்பு இங்கே குறித்தாற்போல "roughly like million (merged with /ʝ/ in most dialects)" என்று இருத்தல் வேண்டும். இப்பொழுது இட்டிருக்கும் தலைப்பு மிகவும் பொருத்தமாக உள்ளது என்பது என் கருத்து.--செல்வா 13:07, 8 அக்டோபர் 2010 (UTC)Reply

எழுத்துக்கூட்டல்

தொகு

தலைப்பை மாரியோ பார்க்காசு யோசா என மாற்றப் பரிந்துரைக்கிறேன். சவகர்லால் நேரு அரங்கம் என முதல் பக்கத்தில் குறிப்பிட்டு விட்டு இவரது பெயரில் மட்டும் ஸ் வருவது சரியல்ல. அதிலும், தமிழில் இதுவரை புழங்காத புதிய பெயர்களை அறிமுகப்படுத்தும்போது முழுக்க தமிழ் மரபிலேயே செய்யலாமே? மேலும், சு என்று வரும்போது உகரம் நீளமாக வருவதில்லை. இந்த இடத்தில் நெடிற்றொடர்க் குற்றியலுகரமாக வந்து குறுகியே ஒலிக்கும். கன்னடத்தார் சீர்களின் கடைசியில் வரும் உகரத்தை ஒலிப்பதைப் பார்த்தால் வேறுபாடு புரியும். -- சுந்தர் \பேச்சு 05:20, 8 அக்டோபர் 2010 (UTC)Reply

i, too, agree with sundar on that. Le diable 05:32, 8 அக்டோபர் 2010 (UTC)Reply
மாற்றி விட்டேன் --சோடாபாட்டில் 05:45, 8 அக்டோபர் 2010 (UTC)Reply
நன்றி, லே டையாபில், சோடாபாட்டில். :) -- சுந்தர் \பேச்சு 06:16, 8 அக்டோபர் 2010 (UTC)Reply
பார்க்காசு என்பதில் உள்ள க் ஐ நீக்கலாம். பார்காசு என்றாலும் சரியாக இருக்கும். --செல்வா 13:39, 8 அக்டோபர் 2010 (UTC)Reply
Return to "மாரியோ பார்க்காசு யோசா" page.