மா. மங்களம்மாள் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

மாற்றங்களுக்கான காரணங்கள்

தொகு

வணக்கம் Kanags ! இக் கட்டுரையில் 13 நவம்பர் 2023 அன்று நான் செய்த மாற்றங்களை நீங்கள் மீளமைத்தமைக்கான காரணங்களை அறியலாமா? MS2P (பேச்சு) 11:10, 15 நவம்பர் 2023 (UTC)Reply

நீங்கள் ஏன் அந்த மாற்றங்களைச் செய்தீர்கள்? தகவற்சட்டத்தில் பிறந்த தேதிக்கு வார்ப்புரு சேர்ப்பதுதான் முறை. இனம் இலங்கைத் தமிழர் (அதிகாரபூர்வமாக). வட மாகாணம் தேவையற்றது. தமிழில் சிலோன் என்று எந்தக்காலத்திலும் அழைக்கப்படவில்லை.--Kanags \உரையாடுக 11:21, 15 நவம்பர் 2023 (UTC)Reply
பிறந்த தேதிக்கு வார்ப்புரு சேர்த்தால், அத் தேதிகள் இணைப்பு பெற்றுவிடுகின்றனவே? அதுவும் காலமானவர்கள் தொடர்பான கட்டுரைகளில் மட்டுமே இது நடக்கிறது. உரிய காரணங்கள் இல்லாமல் தேதிகளை இணைக்கக்கூடாது என்பதாக ஆங்கில விக்கிப்பீடியா விதிமுறைக் கையேட்டில் படித்துள்ளேன். அதுமட்டுமின்றி அந்த வார்ப்புரு, நாள்-மாதம்-ஆண்டு என்ற வடிவத்தை ஏற்பதில்லை.
அதிகாரபூர்வமாக 'இலங்கைத் தமிழர்' என்றிருந்தாலும் அதற்கு இணையாக விக்கிப்பீடியாவில் 'ஈழத்தமிழர்' என்ற சொல்லும் புழக்கத்தில் உள்ளதே?
பிறந்த, மறைந்த இடங்களைக் குறிப்பிடுகையில் ஊர், முதல் நிலை நிருவாகப் பிரிவு (மாகாணம்/ மாநிலம்), நாடு என்ற வரிசையானது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதானே?
1907-இல் வெளியான "உலக ரகசியமென்னும் பிரபஞ்ச வுற்பத்தி" போன்ற பல பழம்பெரும் நூல்களில் 'சிலோன்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் புத்தகங்கள் தேடுபொறியில் இதை நீங்கள் சரிபார்த்துக்கொள்ளலாம் ! MS2P (பேச்சு) 06:19, 17 நவம்பர் 2023 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மா._மங்களம்மாள்&oldid=4072662" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மா. மங்களம்மாள்" page.