பேச்சு:மா சே துங்

மா சே துங் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மா சே துங் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள ஒலிக்கோப்பை பல முறை கேட்ட பிறகே தற்பொழுது உள்ள கட்டுரைத் தலைப்பை இறுதி செய்துள்ளேன். எனினும், பிற தமிழ் ஊடகங்களில் உள்ள எழுத்துக்கூட்டல் முறைகளையும் கட்டுரையில் சுட்டலாம்.--ரவி 15:23, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

மா சே துங் என்னும் பெயரில் ஒரு கட்டுரை ஏற்கனவே இருக்கிறது. ஆனால் நானறிந்தவரை மாவோ சேதுங் என்பது பரவலான புழக்கத்தில் உள்ளது. மிகவும் முக்கியமான ஒருவர் என்ற வகையில் இவர் பற்றிய நூல்கள் மற்றும் இவரது எழுத்துக்களின் மொழிபெயர்ப்புக்கள் பல வெளிவந்துள்ளன என நினைக்கிறேன். ஆதலால் ஒலிப்பெயர்ப்பை விடவும் இவரது பெயர் பரவலாக எப்படித் தமிழில் எழுதப்படுகிறது என்பதைப் பின்பற்றுவது நன்று. --கோபி 15:43, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

கூகுளில் தேடியதில்

  • மா சே துங் - 137 பக்கங்கள்
  • மாவோ சேதுங் - 20 பக்கங்கள்

கிடைத்தன. --சிவகுமார் 15:48, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

எந்தத் தலைப்பில் கட்டுரையை இறுதி செய்தாலும் எனக்கு உடன்பாடே. ஏற்கனவே உள்ள கட்டுரையை விட தற்பொழுது உள்ள கட்டுரையில் உள்ளடக்கம் அதிகம். தகுந்த பக்கத்திற்கு படியெடுக்க வேண்டும். சிவா, கூகுளில் தேடுவதை விட தமிழ் அச்சு ஊடகங்களில் இவர் பெயர் அதிகம் வந்திருக்கும். அதையும் அறிய வேண்டும். (சீன வானொலியிலும் பார்க்கலாம்.)மயூரன் உதவலாம். 100 கோடிக்கும் மேற்பட்ட சீன மக்கள் வணங்கும் தலைவர். அவசியம் விரிவாக்கப்பட வேண்டிய கட்டுரை.--ரவி 15:54, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

சிவா, நூலகத்தில் தேடியதில் மா சேதுங் , மாவோ சேதுங் இரண்டும் பயன்படுவதைக் கண்டேன். ஆதலால் மா சே துங் என்றே பயன்படுத்தலாம். கோபி 16:31, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

மாவோ சேதுங் வழி மாற்று கொடுத்துவிடலாம். --சிவகுமார் 16:51, 29 ஆகஸ்ட் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மா_சே_துங்&oldid=4061515" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மா சே துங்" page.