பேச்சு:மீத்தேன்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஜூலை 6, 2011 அன்று வெளியானது. |
(1)யாரேனும், இந்த வார்ப்புருவைச் சரி செய்து தர இயலுமா?
(2) மீத்தேன் என்னும் கட்டுரையை நீக்க வேண்டுகிறேன். மெத்தேன் என்பது சரி.
நன்றி--C.R.Selvakumar 20:38, 10 ஜூன் 2006 (UTC)செல்வா
- மெத்தேனுக்கு கொள்ளிவளி என்னும் தமிழ்ப்பெயர் எனக்கு புதிய செய்தி. அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. இது போன்று பொருத்தமான தமிழ்ப்பெயர்கள் இருக்கும் போது கண்டிப்பாக கட்டுரையில் குறிப்பிடலாம்--ரவி 07:10, 19 ஜூன் 2006 (UTC)
ரவி, நீங்கள் கொள்ளிவாய்ப் பிசாசு எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுதான் கொள்ளிவளி.--C.R.Selvakumar 12:10, 19 ஜூன் 2006 (UTC)செல்வா
[meth-eyn; Brit. mee-theyn] ஆங்கில உச்சரிப்பு மீத்தேன், ஈத்தேன்; அமெரிக்க ஆங்கில உச்சரிப்பு: மெத்தேன், எத்தேன். பார்க்க: [1], [2].--Kanags \பேச்சு 07:29, 24 பெப்ரவரி 2008 (UTC)
சாணவளி
தொகுமெத்தேனுக்குச் சாணவளி என்பது அறியாத பெயராக இருக்கிறது. கூகுளிலும் கிட்டவில்லை. இப்பெயர் குறித்த விளக்கம் தரமுடியுமா, சிங்கமுகன்? அதோடு பாக்டீரியாவிற்கு நுண்ணுழையாள் என்னும் பெயர் குறித்த விவாதம் ஏற்புடைய முடிவுக்கு வராத நிலையில் அதனைப் பல இடங்களிலும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்பது என் எண்ணம். --இரா. செல்வராசு 02:38, 30 ஏப்ரல் 2011 (UTC)
சாணவளி என்பது சாணவாயு என்பதன் தமிழாக்கமே ஆகும். இதை நான் தமிழ் இணையக்கல்விக் கழகம் என்ற வலைத்தளத்தில் இருந்துப் பெறப்பட்டதே. நானாக பெயரை இடவில்லை. மேலும், நாம் சாணவளி என விளிக்கும் வாயுவின் பெரும் பகுதி மீத்தேனே ஆகும். நுண்ணுழையாள் - நான் எனதுக் கலைக்களஞ்சியக் கட்டுரையில் இடுவதைத் தவிர்க்கிறேன். உங்கள் கருத்துக்கு நன்றி. --சிங்கமுகன் 17:24, 1 மே 2011 (UTC)
தலைப்பு மாற்றம்
தொகுMethane என்ற சொல்லை மெத்தேன் என்பதா, மீத்தேன் என்பதா?
- அமெரிக்க ஆங்கிலத்தில் இது மெத்தேன் எனவும், பிரித்தானிய ஆங்கிலத்தில் இது மீத்தேன் எனவும் ஒலிக்கும்.
- தமிழ்நாடு, இலங்கை ஆகிய நாடுகளில் பெரும்பாலும் பிரித்தானிய ஆங்கிலத்தையே பின்பற்றப்படுவதால் தமிழிலும் அது மீத்தேன் என்ற பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
- இக்கட்டுரை தொடங்கிய போதும் அது மீத்தேன் என்ற தொடங்கப்பட்டுள்ளது.
- மீத்தேன் என்பதாகவே தமிழ் வழிப் பள்ளி மாணவர்களும், தமிழ் ஊடகங்களும் அதிகம் அறிகின்றன.
- குறிப்பாக தஞ்சையில் மீத்தேன் அகழ்வு பற்றிய சர்ச்சை இருக்கும் இச் சமயத்தில் பலரும் மீத்தேன் என்பதாகவே தேடல்களை மேற்கொள்வார்கள்.
ஆக மேற்கண்ட காராணங்களுக்காக தலைப்பை மீத்தேன் என்ற மீண்டும் மாற்ற விண்ணப்பிக்கின்றேன். --விண்ணன் (பேச்சு) 18:40, 30 ஆகத்து 2015 (UTC)
- //இக்கட்டுரை தொடங்கிய போதும் அது மீத்தேன் என்ற தொடங்கப்பட்டுள்ளது.// அவ்வாறில்லையே. --மதனாகரன் (பேச்சு) 18:49, 30 ஆகத்து 2015 (UTC)
- பொறுத்தருள்க ! அதை நான் சரியாக கவனிக்கத் தவறினன். ஆனால், பொது மக்கள் அதிகம் மீத்தேன் என்ற பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழ் வழியில் பயில்கின்ற பள்ளி மாணவர்கள். அதுவும் போக, மீத்தேன் என்பது பிழையான ஓர் ஒலிப்புமில்லை. ஆக, மீத்தேன் என்று மாற்றுவதே உகந்ததாக இருக்கும் என நான் கருதுகின்றேன். மற்றவர்களின் கருத்துக்களையும் அறிய ஆவல். --விண்ணன் (பேச்சு) 19:02, 30 ஆகத்து 2015 (UTC)
- இரண்டு சொற்களையும் அவசியம் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். எனவே கட்டுரை ஆரம்பத்தில் இருந்தவாறு மெத்தேன் என்றே இருக்கலாம். வழிமாற்று உள்ளது. கட்டுரை ஆரம்பத்திலும் மீத்தேன் பற்றி எழுதப்பட்டுள்ளது. எனவே எவருக்கும் கூகுளிலோ அல்லது விக்கி தேடலிலோ கட்டுரையைக் கண்டுபிடிப்பதில் சிரமமிராது.--Kanags \உரையாடுக 21:17, 30 ஆகத்து 2015 (UTC)
ஐயுபிஏசி முறையில் மெத்தேன் என்றும் வழக்கில் பெருவாரியாக மீத்தேன் என்ற சொல் பயன்படுத்தப்படுவதாலும் மீத்தேன் என்ற தலைப்பை முன்னிலைப் படுத்தி நகர்த்தியுள்ளேன்--கி.மூர்த்தி (பேச்சு) 16:39, 16 மே 2019 (UTC).