பேச்சு:முந்திரி

Add topic
Active discussions
DNA-structure-and-bases.png முந்திரி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இக் கட்டுரையின் தலைப்பு முந்திரி என்று இருக்க வேண்டும் அல்லவா? Cashew என்பதைக் கயூ என்று எழுதியுள்ளீர்களா? --செல்வா 16:55, 15 மார்ச் 2009 (UTC)

அதுவா தமிழ்ப் பெயர். முந்திரிப் பருப்பு என்றால் காய வைத்த முந்திரிகைப் பழ வத்தல் ?? (பாயத்துக்கு இரண்டும் போடுவர்) என்று நினைத்து விட்டேன். --Natkeeran 17:39, 15 மார்ச் 2009 (UTC) முந்திரி என்று மாற்றியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 04:28, 16 மார்ச் 2009 (UTC)

முந்திரிப்பழம் என்று அழைக்கப்படும் வேறொன்றுதொகு

முந்திரியில் வேறு மாதிரியான பெயர்க் குழப்பம் :). இந்த இரு தாவரங்களிலும் இருக்கும் பெயர்க்குழப்பம் தெரிந்தே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள குழப்பம் :). அதாவது இது தமிழ்நாட்டில் மட்டுமோ அல்லது தமிழில் மட்டுமோ இருக்கும் குழப்பமல்ல. எல்லா இடத்திலும் பொதுவாக இருக்கும் குழப்பமே. எனவே இதனை ஒரு குழப்பமாகக் கருதாமல், இவ்வாறே தொடர்ந்தும் அழைக்கப்படுவதுடன், அதற்கான காரணமும் கூறப்படுகின்றது.
சூரியகாந்திப் பழமானது சூரியகாந்தி விதை என அழைக்கப்படுகின்றது. அதற்குக் காரணம் பழமானது விதையின் உருவத்தை ஒத்திருப்பதாலாகும். ஆனால் முந்திரியில் முந்திரிக் கொட்டை (cashew nut) என நாம் அழைக்கும் பகுதியே உண்மையான பழமாகும். அதற்குக் காரணம் முந்திரிக்கொட்டையானது உண்மையான பழமாக இருந்தபோதிலும், அது ஒரு பழத்தின் விதையின் உருவத்தை ஒத்திருப்பதாகும். அதாவது முந்திரியின் உண்மைப்பழமானது தனி ஒரு விதையாலான பழமாகும். முந்திரியில் முந்திரிப் பழமென நாம் அழைப்பது, உண்மையில் பழமல்ல. எனவே அது போலிப்பழம் எனவும் அழைக்கப்படும். இதுபற்றி விளக்கமாக பின்னர் முந்திரி கட்டுரையில் இற்றைப்படுத்துகின்றேன். முந்திரியின் உயிரியல் பெயர் Anacardium occidentale.--கலை (பேச்சு) 08:26, 26 சூலை 2012 (UTC)

நான் கூறிய முந்திரிப்பழம் நீங்கள் கூறிய முந்திரியோ முந்திரிக் கொட்டையோ இல்லை. அதன் நிறம் அடர்பழுப்பாய் இருக்கும். அதை பாயாசத்தில் முந்திரிப்பருப்போடு சேர்ந்தே போடுவர். உலர்த்தப்பட்ட இனிப்பு மற்றும் புளிப்பு சுவையைத் தரும் பழம் அது. அளவில் முந்திரிப்பருப்போடு ஒத்தே இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:47, 27 சூலை 2012 (UTC)

எதை நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் என்று சரியாகப் புரியவில்லை. இதையா?--கலை (பேச்சு) 07:58, 27 சூலை 2012 (UTC)

தலைப்புதொகு

இதன் பெயர் மரமுந்திரிகை என்றிருக்க வேண்டும். முந்திரி அல்லது முந்திரிகை என்பது திராட்சையைக் குறிக்கும். மேலே தென்காசி சுப்பிரமணியன் குறிப்பிட்டதும் இதைத்தான். அது (raisin) காய்ந்த முந்திரிகைப் பழம்.--பாஹிம் (பேச்சு) 14:37, 27 மார்ச் 2016 (UTC)

முந்திரி என்பது மரமுந்திரியை மட்டுமே குறிக்கும். திராட்சையைத் தென்தமிழ் நாட்டில் கொடிமுந்திரி என்பர். எனவே தலைப்பு முந்திரி என்றே இருக்கலாம். திராட்சைக்குக் கொடிமுந்திரி எனத் தலைப்பிடலாம்.ஆறுமுகி (பேச்சு) 12:47, 6 சனவரி 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முந்திரி&oldid=2889214" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முந்திரி" page.