பேச்சு:முறம்

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Chandravathanaa

முறம் செய்யப்பயன்படுவது பனை ஓலையா அல்லது மட்டையா?--சிவகுமார் \பேச்சு 14:17, 20 பெப்ரவரி 2008 (UTC)

நன்றி சிவக்குமார். பொட்டி செய்யத்தான் பனை ஓலை பயன்படுத்துவார்கள். முறம் பொட்டியைவிட கனமாக இருக்கும். பனை மட்டையிலிருந்து உரிக்கப்பட்ட நாரினால்தன் முடைவார்கள் என்று நினைக்கிறேன். சரியா? --Jaekay 14:20, 20 பெப்ரவரி 2008 (UTC)

ஜே.கே, முறத்தைப் பார்த்து வெகுநாட்களாகி விட்டது :(. மட்டையில் இருந்து தான் முறம் செய்வர் என்றே நானும் நினைக்கிறேன். மற்ற பயனர்களுக்கு தெரிந்திருக்கிறதா பார்ப்போம்.--சிவகுமார் \பேச்சு 14:25, 20 பெப்ரவரி 2008 (UTC)

பனை ஓலை நொறுங்கும் தன்மை உடையது. அதை வைச்சு முறம் செய்ய முடியாது. ஆனா, எதை வைச்சு செய்யுறாங்கன்னு பார்த்தது இல்லை :( வீட்டுல கேட்டு சொல்றேன்--ரவி 15:40, 20 பெப்ரவரி 2008 (UTC)

முறம் செய்யப் பயன்படுவது மூங்கில் . இன்று அப்பாவிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன். இதை எப்படி மறந்தேன் :( கூடை முடைவது என்று சொல்வது போல் இதையும் முறம் முடைவது என்று சொல்லலாமா?--ரவி 16:55, 21 பெப்ரவரி 2008 (UTC)

மூங்கில் கம்பினாலா அல்லது மூங்கில் கம்பின் தோலினாலா? இரண்டாவதாக இருக்கலாம். மூங்கில் கம்பில் செய்யப்பட்ட முறம் பார்த்ததாக ஞாபகம் இல்லை. Interesting. "முடைவது" என ஒரு உத்தேசமாக எழுதினேன், அதுவும் பனையோலையில் ஆரம்பித்ததால்:(-. வேறு பொருத்தமான சொல் உள்ளதா? --Jaekay 11:58, 22 பெப்ரவரி 2008 (UTC)

மூங்கில் பட்டையை வைச்சுத் தான் முடையுறாங்க--ரவி 15:03, 22 பெப்ரவரி 2008 (UTC)

யாழ்ப்பாணத்தில் பனையின் ஈர்க்கினால்தான் முறம் (இலங்கை வழக்கில் சுளகு என்றுதான் சொல்கிறோம்) செய்யப்படுகிறது. மயூரநாதன் 17:44, 22 பெப்ரவரி 2008 (UTC)
  • ஜப்பானிய முறம்
    முறம் மூங்கில் பட்டையிலிருந்து தான் முடைகிறார்கள். தமிழ் நாட்டிலும் சரி, ஜப்பானிலும் சரி, முறம் செய்ய மூங்கிலே பயன் படுத்தப்படுகிறது.

--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 13:05, 7 மே 2010 (UTC)Reply

யாழ்ப்பாணத்து முறம்
பக்கத்தில் உள்ள படத்தைப் பெரிதாக்கிப் பாருங்கள் இதுதான் பனை ஈர்க்கினாலும், பனம் மட்டையினாலும் செய்யப்பட்ட முறம். யாழ்ப்பாணத்தில் மூங்கில் அதிகம் இல்லை. பனம் பொருட்களைக் கொண்டுதான் அங்கே முறம் செய்யப்படுகின்றது. தமிழ்நாட்டிலும் பனைகள் அதிகம் வளரும் இடங்களில் இவ்வாறே முறம் செய்வார்கள் என எண்ணுகிறேன். முற்றிய பனை ஈர்க்குத்தான் நொறுங்கும் தன்மை கொண்டது. பெட்டிகள், முறம், பிற கைப்பணிப் பொருட்களைச் செய்யப் பயன்படும் ஓலை, ஈர்க்கு முதலியவை குருத்து ஓலையில் இருந்து பெறப்படுகின்றன. குருத்தோலையினால் செய்யப்படும் பொருட்கள் நீண்டகாலம் இருக்கக்கூடியவை. எங்கள் வீட்டிலேயே 50 ஆண்டுகளுக்கும் முந்திய பனையோலைப் பெட்டிகள் இருந்தன. இந்தப் பதிவையும் பாருங்கள்
மயூரநாதன் 21:05, 7 மே 2010 (UTC)Reply


Chandravathanaa---சந்திரவதனா அவர்களுக்கு வணக்கம். தாங்கள் இக்கட்டுரைக்கு இணைத்துள்ள இரண்டு படங்களும் நன்றாக உள்ளன. இவற்றை 'விக்கிமீடியா காமன்சில்' --- Wikimedia Commons இணைத்தால் நன்றாக இருக்கும. அதனை எல்லோரும் பயன்படுத்த வசதியாக இருக்கும்.நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 13:05, 7 மே 2010 (UTC)Reply
: நன்றி திருச்சி பெரியண்ணன், Wikimedia Commonsஇல் இணைக்க என்ன செய்ய வேண்டும். காப்புரிமையில் மாற்றம் செய்ய வேண்டுமா?--Chandravathanaa 19:39, 7 மே 2010 (UTC)Reply
  • வணக்கம் சந்திரவதனா.
  • விக்கிமீடியாவின் முதற்பக்கத்திற்கு செல்லுங்கள்[Main Page]. (Please Login first)அங்கு இடது புறத்தில் உள்ள Upload File---மூலமாக சென்று, It is entirely my own work---என்று கூறி படங்களை Public Domain---என்ற பதிப்புரிமையுடன் பதிவேற்றம் செய்யுங்கள். நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 15:38, 9 மே 2010 (UTC)Reply


Also used in Tamil Eelam.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முறம்&oldid=521977" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முறம்" page.