பேச்சு:மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி
Untitled
தொகுமூடிய மின்சுற்று தொலைக்காட்சி என்பது Closed Circuit TV என்பதன் சொல்லிற்கு சொல் மொழிபெயர்ப்பாகத் தெரிகிறது. இதனை முழுமைச் சுற்றுத் தொலைக்காட்சி என்று குறிப்பிடுதல் பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து.(Closing of a circuit - சுற்று முழுமையாதல்) மேலும் சுற்று என்று குறிப்பது மின்சுற்று மற்றும் பரப்புச் சுற்று இரண்டிற்கும் பொதுவாக இருக்கும். --மணியன் 05:32, 10 ஏப்ரல் 2010 (UTC)
- முழுமையடைந்த மின்சுற்றுத் தொலைக் காட்சி (மு.மி தொலைக்காட்சி ) அல்லது (மு.மி.தொ.கா) -- இராஜ்குமார் 06:09, 10 ஏப்ரல் 2010 (UTC)
- விகச்னரியில் த.இ.ப. பரிந்துரையாக மூடு சுற்று என்றே தந்திருந்தாலும் எனக்கும் அதில் தயக்கம் உள்ளது. மணியனின் பரிந்துரை நன்றாகப் படுகிறது. -- சுந்தர் \பேச்சு 08:40, 10 ஏப்ரல் 2010 (UTC)
- முழுமைச் சுற்றுத் தொலைக்காட்சி என்பது closing circuit TV என்பது போல் பொருள் வருகிறதே ? அதனால் தான் முழுமையடைந்த என்று பரிந்துரைத்தேன். மூடின மின்சுற்றுத் தொலைக்காட்சி என்பது சரியாக வருமா? --இராஜ்குமார் 09:19, 10 ஏப்ரல் 2010 (UTC)
- இதன் முதன்மையான வேறுபாடு பொதுவாகப் புறவெளியில் அலைபரப்பப்படாமல், மின்வடம் வழியாக ஒரு கட்டத்துக்குள்ளேயோ ஒரு குறிப்பிட்ட சிறுதொலைவுடைய பரப்புக்குள்ளேயோ தொலைக்காட்சியாக செலுத்திக்காணக்கூடியது. ஆகவே இது உள்ளக தொலைக்காட்சி எனலாம். அல்லது அகத்தொலைக்காட்சி எனலாம். --செல்வா 13:44, 10 ஏப்ரல் 2010 (UTC)
பரிந்துரைகளுக்கு அனைவருக்கும் நன்றி. உள்ளகச் சுற்றுத் தொலைக்காட்சி எனக் குறிக்கலாம் எனக் கருதுகிறேன், அனைவரின் கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன்.
--Shanthalan 11:48, 12 ஏப்ரல் 2010 (UTC)
Closed circuit என்பது பொதுவாக மூடிய மின்சுற்று (இயற்பியல்), நிறைவு மின்சுற்று அல்லது நிறைவுற்ற சுற்று (மின்னனுவியல்) என்றே அறியப்படுகிறது. --Maheswari 06:14, 22 ஏப்ரல் 2010 (UTC)